Published: 09 பிப் 2018
தங்கம்- கடவுள்களின் உலோகம்!
ஒன்பது கோள்கள் உள்ளது உறுதி செய்யப்படுவதற்கு முன்பு வரை, நம் முன்னோர்கள் ஏழு கோள்கள் மட்டுமே உள்ளன என நம்பி வந்தனர். அவை சூரியன், நிலா, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், மற்றும் சனி. இந்த கோள்கள் அவற்றுக்குரிய உலோகம் அல்லது ரத்தினங்களைக் கொண்டிருந்தன. இது, இந்த கோள்கள் வண்ணங்களின் மூலம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தை குறிக்கின்றது. ஏழு கோள்களும் வாரத்தின் ஏழு நாட்களுடன் தொடர்புடையன.
சூரியனின் பளீர் மஞ்சள் நிறம் மற்றும் கடும் வெப்பத்துக்குப் பொருத்தமான மற்றும் அதனுடயை தீச்சுடர் மற்றும் சக்தியைக் குறிக்க உகந்த உலோகமென்றால் அது தங்கம்தான்.
இது, தங்கத்தின் மங்களகரமான தன்மை மற்றும் தெய்வீகத்தன்மை பற்றி விவரிக்கிற கதைகளில் ஒன்று மேலும் இது பின்வரும் நம்பிக்கைகளை ஆதாராமாகக் கொண்டுள்ளது:
- தங்கம் சூரியனுடன் தொடர்புபடுத்தப்பட்டதன் காரணங்களில் ஒன்று, அதனுடைய பிராகசம், ஒளி மற்றும் அதனுடைய மஞ்சள் நிறம்.
- கடுமையான நெருப்பில் கூட தீய்ந்து போகாமலும் பளபளப்பு மங்காமலும் இருக்கின்ற அல்லது வேறு எந்த உலோகத்தையும் போல சிதைந்து போகாமல் இருக்கின்ற ஒரே உலகம் இது என்பது மற்றொரு மிக முக்கியமான காரணம் ஆகும். ஆகவே, சூரியனின் பிரகாசத்தையும் பளபளப்பை இழக்காமல் வெப்பம், குளிர் அல்லது வேறு எந்த சூழலையும் தாங்கும் உறுதியையும் தங்கம் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.
- ஜோதிடத்தில், சூரியன் ஞானத்தையும் செல்வத்தையும் அளிக்க வல்லதாகக் கருதப்படுகிறது. அதே போன்று, தங்கம் வைத்திருப்பவரின்/அணிபவரின் வாழ்க்கையிலும் ஞானத்தையும் செல்வத்தையும் அளிக்கும் என நம்பப்படுகிறது.
- இந்துக்கள் கலாச்சாரத்தில் மட்டுமல்ல, பல்வேறு கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்களும் தங்கத்தை செல்வச் செழிப்பின் அடையாளமாகப் பார்க்கிறார்கள்
- எகிப்துக் கலாச்சாரத்தில், தங்க நெக்லஸ் நீடித்த வாழ்வின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது மேலும் சமூகத்தில் அல்லது மதம் தொடர்புடைய முக்கியஸ்தர்களின் முக்கியத்துவத்தை காட்டும் வகையில் தங்கப் பெட்டியில் வைத்துப் புதைக்கப்பட்டனர்.
- கிறிஸ்துவ மதத்தில், தங்க மோதிரம் திருமணம் என்ற புனிதமான பந்தத்தைக் குறிக்கிறது. அந்த ஜோடியின் எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சிக்கும் செழிப்புக்கும் அடையாளமாக அவர்கள் தங்கத்தைக் கருதுகின்றனர்.
நமக்கு தங்கம் மதிப்பு மிக்க ஒன்றாகவும் மங்களகரமானதாகவும் தொடர்ந்து இருந்து வருகிறது.