Published: 20 பிப் 2018
தங்கக் கட்டுப்பாடு சட்டம் மற்றும் தங்கப் பத்திரங்கள்
1962ல் சீனாவுடனான போரினால் இந்தியாவின் அந்நியச் செலாவணி மிகக் கடுமையாக வீழ்ச்சியடைந்தது மேலும் இது ரூபாய்க்கான ஆதரவை அகற்றியது. ரூபாயின் மோசமான சரிவைத் தடுப்பதற்கு, அரசு தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை 1962ல் இயற்றியது. முதலில் இந்த சட்டத்தை மூன்றாண்டுகளுக்கு மட்டும் நடைமுறையில் வைத்திருக்க முடிவுசெய்யப்பட்டது, ஆனால் 1971 வரை அது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது.
1962 சட்டம், வங்கிகளால் அளிக்கப்பட்ட அனைத்து தங்கநகைக் கடன்களையும் திரும்பப்பெற்றது, தங்கக் கட்டிகளை தனியார் வைத்திருப்பதைத் தடைசெய்தது. மேலும், ஃபார்வேர்டு டிரேடிங்கையும் தடை செய்தது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையும் பட்சத்தில், மாற்றுக் கரன்சி உருவாவதைத் தடுப்பதே இதன் நோக்கம். 1963ல், 14 கேரட்டுக்கு மேல் தூய்மை கொண்ட தங்க நகை தயாரிப்பு தடைசெய்யப்பட்டது.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, அரசு 1968 தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை இயற்றியது. இது குடிமக்கள் தங்கத்தை கட்டிகளாகவோ அல்லது நாணயங்களாகவோ வைத்திருப்பதை தடை செய்தது மேலும் அனைத்து தங்கக் கட்டிகளையும் தங்க நகையாக மாற்றுவதைக் கட்டாயமாக்கியது. பொற்கொல்லர்கள் 100 கிராமுக்கு மேல் தங்கம் வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. உரிமம் பெற்ற டீலர்கள் 2 கிலோவுக்கு மேல் தங்கம் வைத்திருக்கக் கூடாது, இந்த அளவு அவர்கள் வேலைக்கு அமர்த்தியிருக்கும் பொற்கொல்லர்களின் எண்ணிக்கையைப் பொருத்தது. டீலர்களால் ஒருவர் மற்றவரிடம் விற்பனை செய்து கொள்ளவும் முடியவில்லை, இது கிட்டத்தட்ட அதிகாரபூர்வ தங்கச் சந்தையை அழித்துவிட்டது.
1965ல், நாட்டில் தங்கப் பத்திரத் திட்டம் தொடங்கப்பட்டது, இது போன்ற நடவடிக்கை எடுப்பது இதுதான் முதன் முறை; இது அவர்களின் கணக்கில் காட்டப்படாத செல்வமாக இருந்தால் வாங்குபவர்கள் வரிவிலக்கை எதிர்பார்ப்பார்கள். ஆனால் இந்த எல்லா நடவடிக்கைகளும் அவற்றின் நோக்கத்தைப் பூர்த்திசெய்வதில் தவறிவிட்டன. தங்கச் சந்தையை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு அரசு அறிமுகப்படுத்திய அது போன்ற பல்வேறு திட்டங்களில் அதுதான் முதலாவது ஆகும்.
வாடிக்கையாளர்களிடமிருந்து தங்கத்தை டெப்பாசிட்டாகப் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு நிலையான முதிர்வுத் தொகை மற்றும் வட்டிக்கான சான்றிதழை அளிப்பதை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த தங்கப் பத்திரத் திட்டம். 1962 நவம்பர் மாதம் முதல் முறையாக வழங்கப்பட்ட தங்கப் பத்திரங்களில், வட்டி 6.5 (நவம்பர் 1962) சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.
அதற்குப் பிறகு (மார்ச் 1966ல் வழங்கப்பட்டது) 7 சதவீத தங்கப் பத்திரத் திட்டம் வந்தது, இதைத் தொடர்ந்து1980 (1965 லும் வழங்கப்பட்டது) தேசியப் பாதுகாப்புத் தங்கப் பத்திரம் வெளியிடப்பட்டது இந்த எல்லாத் திட்டங்களுக்குமான காலம் 15 ஆண்டுகள். 1993ல், அரசு மேலும் ஒரு தங்கப் பத்திரத் திட்டத்தை முயற்சித்துப் பார்த்தது. இந்தத் திட்டங்களில் எதுவும் அதன் நோக்கத்தில் வெற்றி பெற்றதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தங்கத்தின் மதிப்பு மீதான மக்களின் நம்பிக்கை சிறிதும் குறையவே இல்லை.