Published: 27 செப் 2017
இந்தியாவின் தங்கக் கிரீடங்கள்
தங்கப் பறவையின் நிலமான இந்தியா என்பது மகாராஜாக்கள் (அரசகுலத்தினர்) மற்றும் அவர்களின் செல்வம், குறிப்பாக தங்கம் ஆகியவற்றிற்காக அறியப்பட்டது ஆகும். அரசகுல குடும்பங்கள் செழிப்புடன் வாழ்ந்தன. அவை சிம்மாசனங்கள், ஆபரணங்கள், ஆயுதங்கள், உடைகள் மற்றும் ஆடம்பர பொருட்கள் போன்ற பல்வேறு வடிவங்களில் தங்கள் செல்வத்தை வெளிப்படுத்தினர். தங்களின் மற்றும் தங்கள் ராஜ்ஜியங்களின் அதிகாரத்தையும் அந்தஸ்தையும் வெளிப்படுத்த அவர்கள் தங்கத்தைப் பயன்படுத்தினர். இந்த சக்திவாய்ந்த ஆண்களும் பெண்களும் அணிந்திருந்த கிரீடங்கள் தங்கத்தால் செய்யப்பட்டவை ஆகும்.
இந்தக் கிரீடங்களில் பெரும்பாலானவை தொலைந்துவிட்டன என்றாலும், இந்தக் கட்டுரையின் மூலமாக, இன்றும் இருக்கக்கூடிய இரண்டு கிரீடங்களின் உதாரணங்களைப் பார்க்கலாம்:
இரண்டாம் பகதூர் ஷா பேரரசரின் கிரீடம்1857ஆம் ஆண்டு இந்தியப் போர் முடிந்த பிறகு, கடைசி முகலாய பேரரசராகவும், தில்லியின் மன்னராகவும் இருந்த பஹதுர் ஷா என்பவர் கிழக்கு இந்தியக் கம்பெனியால் பர்மாவிற்கு நாடுகடத்தப்பட்டார், மேலும் இந்தியாவின் அரசாங்கமானது பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்டது. இந்தியாவை ஆளும் அரசாங்கம் என்பது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்த பொழுது, அவருடைய தங்கக் கிரீடமானது பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது, மேலும் விக்டோரியா ராணியால் அது £500-க்கு வாங்கப்பட்டது. இந்தக் கிரீடமானது இங்கிலாந்தில் உள்ள பிரிட்டிஷ் லைப்ரரியின் ராயல் சேகரிப்பில் பொதுமக்களுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
முகலாய மகாராணிகளின் கிரீடம்'முகலாயர்களின் தியாரா' என்று பிரபலமாக அறியப்படும் ஆவாத்-ன் கிரீடம் என்பது பிரம்மாண்டமான முகலாய காலத்தின் மற்றொரு கிரீடம் ஆகும். ஆவாத்-ன் இந்த கிரீடமானது இந்தியாவின் வடக்குப் பகுதிக்கு சொந்தமானது ஆகும், மேலும் இது 18ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசர்களால் அணியப்பட்ட முகலாய ஆட்சியின் மிகவும் பிரபலமான கிரீடங்களில் ஒன்றாகும். இது தூயத் தங்கம் மற்றும் தங்கப் படலங்களைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டது. கிரீடத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் இரத்தினங்களில் இருந்து மஞ்சள் உலோகம் ஜொலித்தது. நேர்த்தியான வடிவமைப்புகளும் வடிவங்களும் பண்டைய சகாப்தத்தின் சிறந்த கைவினைத்திறனை வெளிப்படுத்தின. இந்தக் கிரீடமானது பின்னர் எட்வர்ட் VII-க்கு ஆவாத்-ன் தௌலக்தார்களால் வழங்கப்பட்டது.
தங்கக் கிரீடங்கள் தவிர, இந்தியாவின் அரசகுலத்தினர்கள் தங்களின் தலை அல்லது தலைப்பாகையை பல்வேறு ஆபரணங்களால் அலங்கரித்தனர். இந்த ஆபரணங்களானது, தலைப்பாகையில் இருந்து நெற்றி வரை கீழே மூடப்பட்டிருக்கும் வகையில், ஒரு ஒற்றை இழையில் தொங்கிக் கொண்டிருக்கும் கழுத்தணிகள் அல்லது தங்கச் சங்கிலிகளை ஒத்திருக்கின்றன. இறகுகள் போன்ற மற்றும் வழவழப்பான அமைப்பு ஆகியவை இந்த அரசகுல தலைப்பாகைகளுக்கு மகத்தான தோற்றத்தை அளிக்கின்றன.
அரசர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களின் கிரீடங்கள் மற்றும் பிற ஆபரணங்கள் ஆகியவை பண்டைய சகாப்தத்தில் அவர்களின் ஆடம்பர வாழ்க்கையைக் காட்டுகின்றது.