Published: 09 ஆக 2017
பணி ஓய்விற்கான தங்க பரிசுகள்
ஒருவரது பொன்விழா ஆண்டுகள் அவரது வாழ்நாள் அனுபவம், சாதனைகள், சிறப்பு தருணங்கள் ஆகியவற்றின் குறியீடு. பணி ஓய்விற்கு தயாராகியிருக்கும் உங்களது பிரியமானவருக்கு ஏதாவது பரிசளிக்க விரும்பினால், அவர்கள் மேல் நமக்கிருக்கும் மரியாதையைம் நன்றியையும் வெளிப்படுத்துவதாக அது இருக்க வேண்டும். அது அவர்களது நிறுவனத்தில் அவர்கள் ஆண்டுகணக்கான அற்பணிப்புடன் சேவை புரிந்ததற்காக அல்லது ஒரு உறவினராக ஒரு வழிகாட்டியாக பல்வேறு தசாண்டுகள் உங்களுக்கு அசைக்க முடியாத ஆதரவளித்தற்காக என்று
எதுவாக இருந்தாலும் அது மிகவும் முக்கியமான தருணம். :
-
தங்க கைக்கடிகாரம்
காலங்களைக் கடந்த பாரம்பரியம் பணி ஓய்வின்போது தங்க கைகடிகாரங்களை அளிக்கும் பாரம்பரியம் 1940களில் உருவானது. அவர்களது கடின உழைப்பை பாராட்டும் பொருட்டு நிறுவனத்தின் மேலாண்மை அவர்களுக்கு தங்க கைக்கடிகாரம் அளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நவநாகரிகமான கைக்கடிகாரம் அல்லது நுண்ணிய வேலைப்பாடு மிக்க பைக்கடிகாரம் ஆகியவை ஒரு சக ஊழியருக்கோ அல்லது பெற்றோருக்கோ அல்லது நமக்கு நெருக்கமானவருக்கோ மிகவும் அர்த்தமுள்ள பரிசுபொருளாக அமையும். உங்களது பரிசு மிகவும் தனிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதில் பணி ஓய்வு பெறுபவரின் பெயர், அவர் ஓய்வுபெறும் ஆண்டு அல்லது ஒரு ஆர்வமான மேற்கோள் ஆகியவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும்.
-
தங்க நாணயங்கள்
ஒரு வாழ்நாளின் செல்வத்தைக் கொண்டாடுவது ஒருவரது நினைவு பரிசுகளின் தொகுப்பில் ஒரு முக்கியமான மதிப்புமிக்க கூடுதலாக மட்டுமல்ல, எதிர் காலத் தலைமுறைக்கான முதலீடாகவும் தங்கம் பணியாற்றும். . இந்திய அரசு 2015ஆம் ஆண்டு தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தியது. அதில் தங்க நாணயத்திற்கான கௌரவத்துடன் புதிய நவீன அம்சங்களும் நிறைந்திருந்தன. இது அந்த பரிசை விலைமதிப்பு பெற்றதாக மாற்றியது. நீங்கள் இந்த நாணயத்தை வாங்குவதற்கு அருகிலுள்ள கடையைத் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். Click here
-
தங்க விக்கிரகங்கள்
ஒருவரது துவக்கத்திற்கான பரிசு உங்களுக்கு பிரியமானவர்கள் ஆன்மிக ரீதியாக பக்தியுள்ளவர்களாக இருந்தால், அவர்களுக்கென தங்க பகவான்களையோ அம்மன்களையோ விக்கிரகமாக வழங்கலாம். இலக்ஷமி அம்மனின் தங்க விக்கிரகம் செல்வத்தையும் வளமையையும் பெருபவர்க்கு அளிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. பகவான் கணேசன் ஆரம்பங்களின் கடவுள் என்று கருதப்படுகிறார். இந்த பொன்னான காலத்தை குறிக்குமாறு தங்க கணபதியை ஏன் பரிசாக வழங்கக்கூடாது?
-
தங்கத் தொகுப்புகள்
கதை சொல்லம் பரிசுப்பொருட்கள் ஒரு பயண விரும்பிக்கு தங்க நஞ்கூரத்தை பரிசளியுங்கள். புத்தக விரும்பிக்கு தங்கத்தால் ஆன பக்கக்குறிப்புகளை வாங்கி பரிசளியுங்கள் (book marks). உணவு விரும்பிக்கு அவரது அடுப்படி மேசையை அலங்கரிப்பதற்கு தங்க ஸ்பூன்கள் வாங்கி கொடுங்கள். கலைப்பிரியருக்கு அவனது பிரியமான ஓவியத்தின் தங்க மாதிரியை அளியுங்கள். ஒருவர் பணி ஓய்வு பெறும்போது அவரது ஆர்வங்களும் உணர்வுகளும் அவரது பிரியமானவர்களுக்குத் தெரிந்திருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவர்களுக்கு எது முக்கியம் என்று கண்டறிந்து அது பொன்னைப்போல நல்ல பொருளாக அளிக்கவேண்டியதுதான். தங்க பேனாக்களும் சட்டை ப்ரூச்சுகளும கூட இந்த தொகுப்பிற்கு நல்ல கூடுதல்கள்தான்.
-
தங்க சட்டங்கள்
நினைவுகள் நீடிக்க வைப்பது ஒருவர் பணி ஓய்வு பெறும்போதுதான் பழைய புகைப்பட ஆல்பம்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அப்போதுதான் ஒருவருக்கு அவரது சிறப்பு நினைவுகள் மீண்டும் மலரும். அந்த நினைவுகளுக்கு ஒரு வடிவம் கொடுக்க அந்த புகைப்பட சட்டத்தை தங்கத்தில் அளிக்கவும். பழமையான வடிவங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பாரம்பரிய சுவையை இந்தத் தொகுப்பிற்கு அளிக்கும்.
எனவே, உங்களது பிரியமானவரின் பென்விழாவை துவங்கி எவ்வாறு கொண்டாடப்போகிறீர்கள்?