Published: 07 ஜூலை 2017
தங்கத்தில் எவ்வாறு ஹால்மார்க் முத்திரையிடப்படுகிறது?
தங்க நகைகள் வாங்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா? இதில் நீங்கள் மட்டும் தனியாக இல்லை. இந்திய குடும்பங்கள் 22,000 டன்களுக்கும் அதிகமான தங்கத்தை வைத்துள்ளன. மேலும், ஒவ்வொரு வருடமும் நகைகளை உற்பத்தி செய்வதற்காக 600 டன் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தங்கத்தின் தூய்மையை கணிப்பது அவ்வளவு எளிதான வேலை இல்லை. தூய தங்கத்தையும் மற்றும் மஞ்சளாகத் தோன்றும் ஒரு உலோகத்தையும் நீங்கள் எவ்வாறு வேறுபடுத்தி அறிவீர்கள்? மிகவும் விலைமதிப்பற்ற இந்த பொருளின் தூய்மையை எவ்வாறு உறுதிசெய்வது?
ஹால்மார்க்கிங் என்ன?
ஹால்மார்க்கிங் என்பது விலையுயர்ந்த உலோகப் பொருட்களில் அந்த விலையுயர்ந்த உலோகப் பொருள் சேர்ந்துள்ள அளவின் துல்லிய மதிப்பு மற்றும் அங்கீகார பதிவாகும். இவ்வாறு ஹால்மார்க் என்பது விலையுயர்ந்த உலோகப் பொருட்களின் தூய்மை அல்லது உயர் தரத்திற்கு உத்தரவாதமாக பல நாடுகளில் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ குறியீடாக இருக்கிறது.
ஏன் ஹால்மார்க் இடப்படுகிறது? ஹால்மார்க் இடுவது விற்கப்படும் தங்க நகை உண்மையானதுதானா அல்லது போலியா என்பதை கண்டறிய உதவுவதன் மூலம் வாங்குபவர்களின் பணத்தை பாதுகாக்கிறது.
ஹால்மார்க் முத்திரையிடுதல் என்றால் என்ன? இந்தியாவில், தங்கத்தின் தூய்மை மதிப்பிடுவதற்கு இந்திய தரக்கட்டுப்பாட்டு இலாகா (BIS) அதிகாரம் பெற்றுள்ளது. இதன் உயர்மட்டக் குழுவானது IS 15820:2009 சான்றளிக்க சில மதிப்பீட்டு மற்றும் ஹால்மார்க்கிங் மையங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. BIS-சான்றளிக்கப்பட்ட நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையிட அங்கீகாரம் பெற்ற இந்த மையங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
நகை வியாபாரி யார் வேண்டுமானாலும் தங்கப் பொருட்களின் மீது ஒரு ஹால்மார்க் முத்திரை பெற முடியுமா? இல்லை. சான்றிழிக்கப்பட்ட நகை வியாபாரிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் பெற்ற மையங்களில் இருந்து முத்திரைகளைப் பெற தகுதியுள்ளது. எனவே, ஒரு நம்பகமான நகை வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களை கண்டறிய ஒரு ஹால்மார்க் உதவுகிறது.
ஹால்மார்க் முத்திரையிடுவதற்கான செயல்முறை என்ன? பொதுவாக தங்க நகையானது விலையுயர்ந்த உலோகம் சேர்ந்துள்ள அளவை ஆராய்ந்த அல்லது மதிப்பிட்ட பிறகு தான் அது ஹால்மார்க் முத்திரையிடப்படுகிறது.
இன்று, உற்பத்தி செய்யப்பட்ட தங்கப் பொருட்களில் நவீன எக்ஸ்-ரே ஒளிர்வு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு கம்ப்யூட்டர் மூலம் அழியாத, விரைவான மற்றும் தானியங்கு பிரிண்டிங்கை உறுதிசெய்கிறது.
கட்டித் தங்கத்தைப் பொறுத்தவரை, ‘தீ மதிப்பீடு’ அல்லது ‘புடமிடுதல்’ முறையை பயன்படுத்தலாம். இந்த நேரத்தில்தான் தங்கத்திலிருந்து அசுத்தங்கள் பிரித்தெடுப்பதற்காக உருக்கப்படுகிறது. இது சிதைவுறக்கூடியதாக இருக்கலாம், ஆனால் மிகவும் பயனுள்ளதாகும்.
இந்த மதிப்பிடுதலானது பதிவுசெய்யப்பட்ட எந்த மதிப்பிடுதல் மற்றும் ஹால்மார்க்கிங் மைத்திலும் செய்யப்படுகிறது. இந்த மையங்கள் தரத்தை பரிசோதித்து BIS தரநிலைகளின் படி ஹால்மார்க்கை ஒதுக்குகிறது. தரம் மதிப்பிடப்பட்ட பிறகு, A&HMC ஹால்மார்க்கை வழங்குகிறது.
ஹால்மார்க் எவ்வாறு தோற்றமளிக்கிறது? ஒரு தங்கப் பொருளில் ஒவ்வொரு ஹால்மார்க்கும் நான்கு அடையாளங்களை கொண்டிருக்கிறது: ஹால்மார்க் முத்திரையிட்ட பிறகு தரம் குறைந்தால் என்ன செய்ய வேண்டும்? BIS நகைக் கடைக்காரர்களின் இடத்தில் உள்ள நகையை அவ்வப்போது ஆய்வு செய்கிறது. ஏதாவது முறைகேடு நடப்பதை BIS கண்டுபிடித்தால், நகைக்கடைக்காரரின் உரிமம் ரத்து செய்யப்படலாம் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்ப்படலாம்.
ஆனால் காரட்டுக்கும் தூய்மைக்கும் என்ன தொடர்பிருக்கிறது? தூய்மையை பின்வரும் கேரட் தரக் குறியீடு மூலம் கண்டறியலாம். காரட் அதிமானால், தங்கத்தின் தூய்மையும் அதிகமாகும். 24 காரட் என்பதே தங்கத்தின் தூய்மையான வடிவமாகும். பிற உலோகங்களும் கலந்துள்ளன என்பதையே குறைவான காரட் சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகள் 22 காரட், 18 காரட் 14 காரட் என்ற மூன்று தர நிலைகளில் மட்டுமே கிடைக்கின்றன.
உங்கள் தங்கத்தின் காரட்டை அறிய, கீழேயுள்ள குறியீடுகளை பார்க்கவும். ஒவ்வொரு குறியீடும் ஒரு குறிப்பிட்ட காரட்டை குறிக்கிறது. | |
22K916 | 22 காரட் தொடர்பானது |
18K750 | 18 காரட் தொடர்பானது |
14K585 | 14 காரட் தொடர்பானது |
முடிவு
ஒரு வாங்குநராக, உங்கள் பாதுகாப்பு உங்கள் கைகளில் தான் இருக்கிறது. நீங்கள் தங்கம் வாங்கும் போதெல்லாம், முறையாக ஹால்மார்க் முத்தியிடப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த BIS வழங்கிய 4 முத்திரைகளையும் சரிபார்க்க ஒரு பூதக்கண்ணாடியை கேட்க வேண்டும். இந்த குறிப்புகள் மூலம், நீங்கள் வாங்கும் தங்க நகைகள் உண்மையானது என்று நீங்கள் உறுதிசெய்து கொள்ளலாம்.
இந்திய தங்கச் சந்தை: வளர்ச்சி மற்றும் புதுமை - உலக தங்க கவுன்சில் அறிக்கை.