Published: 14 ஜூலை 2017
அன்றாட வாழ்வில் தங்கம்
We all know of gold as a great investment option. But did you know that this much-cherished metal is also used in abundance in all these everyday items?
- ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற தொழில்நுட்ப தயாரிப்புகள்
- அழகு மற்றும் ஆரோக்கிய தயாரிப்புகள்
- பல் மருத்துவம்
- நவீன மருத்துவம்
- அலங்கார சேலைகள் மற்றும் துணிகள்
- இனிமையான உணவுகள்
- ஆகாய விமான தொழில்நுட்பம்
- தங்க முலாம் பூசப்பட்ட சேகரிப்புகள்
என்ன: ஸ்மார்ட்போன்கள் முதல் டிவி திரைகள் தொடங்கி செயற்கைக்கோள்கள் வரை, தொழில்நுட்ப மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் சிப்கள் மற்றும் சர்க்யூட் போர்டுகளில் தங்கம் இடம் பெற்றுள்ளது.
ஏன்: தங்கம் ஒரு சிறந்த மின் கடத்தியாக செயல்படுகிறது அதேநேரத்தில் மிகுந்த அரிப்பு எதிர்ப்புத்திறனுள்ளதாகவும் இருக்கிறது. இது குறைவான வோல்டேஜ் மின்சாரத்திலும் சிக்னல்களை துல்லியமாக அனுப்ப அனுமதிக்கிறது.
தங்க வரி: தங்கத்தை எடுத்தால் சுமார் 40 ஸ்மார்ட்போனில் 1 கிராம் தங்கம் கிடைக்கும்.
என்ன: ஆயுர்வேத மருந்துகள் முதல் தங்க ஃபேஸியல்கள் மற்றும் கிரீம்கள் போன்ற அழகு சிகிச்சைகள் வரை அனைத்திலும் தங்கம் மிகவும் விரும்பத்தக்க ஒரு பொருளாக விளங்குகிறது.
ஏன்: ஆயுர்வேதத்தின் படி, தங்கம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது மற்றும் அவர்களின் நினைவாற்றலையும் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது. தங்கம் ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிஜனேற்றியாகும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.
என்ன: உலகம் முழுவதிலும் பல்மருத்துவரை சந்தித்தல் மற்றும் பல் வேலைகள் அடிக்கடி நடப்பதால், தங்கத்தால் பற்குழிகள் அடைக்கப்படுகின்றன.
ஏன்: பிற வெளிப்புற பொருட்களுடன் ஒப்பிடும் போது தங்கம் ஒவ்வாமை இல்லாததாகும் மற்றும் மனித உடலுக்கு மிகவும் உகந்ததாகும் மற்றும் நீடித்து உழைக்கிறது.
என்ன: விரைவாக கண்டறிதல் சோதனைகளில் தங்க நுண் துகள்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன மேலும் எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய்களை கண்டறியும் நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தங்க வரி: பாதிக்கப்பட்ட செல்களுக்குள் நேரடியாக மருந்துகளை உட்செலுத்துவதற்கு இந்த புற்றுநோய் தடுப்பு மருந்துகள் தங்க நுண் துகள்களை பயன்படுத்தலாம்.
என்ன: சேலைகளில் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நூல்கள் காணப்படும் தங்க ‘சேலையை’ பயன்படுத்தும் பாரம்பரியம் முகலாயர் காலத்திற்குரியதாகும், இது அரச மற்றும் பிரபுத்துவ குலங்களுக்கு மத்தியில் விருப்பத்தக்க ஒன்றானது. அப்போதிலிருந்து இன்று வரை அதிக நாட்டமுள்ள கஞ்சிவரம் மற்றும் பனாரசி சேலைகள் உட்பட பல்வேறு நெசவு பாரம்பரியங்களில் இந்த நடைமுறை காணப்பட்டுள்ளது.
ஏன்: உலக நாணயமாக அதன் சிறப்பு தவிர, அதன் மங்காத பிரகாசம் மற்றும் ஒளிவீசும் மினுமினுப்பு போன்றவை அதன் தோற்றத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும் வேறு சில காரணங்களாகும்.
என்ன: பண்டைய மற்றும் மத்திய காலங்களின் கலாச்சாரங்கள் முழுவதும் இனிப்பு, ஆரோக்கிய உணவுகள் மற்றும் பிஸாக்கள் மற்றும் பர்கர்கள் போன்ற துரித உணவுகள் உட்பட கவர்ச்சியான உணவு வகைகளை பொதிவதற்கு தங்கத் தாள்களை பயன்படுத்துவது பரவலாக நடைமுறையில் இருந்து வந்துள்ளது.
ஏன்: சிறப்பான, தனித்துவமான மற்றும் மறக்கமுடியாத சுவை அனுபவம் மற்றும் ஆடம்பர உணவு வகைகளை இது குறிப்பிடுகிறது.
என்ன: எம்.டி.எஸ் பூச்சுகள் தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்த ஒரு அரிப்பை தடுப்பு நுண் பூச்சான கருப்புத் தங்கமானது ஆகாய விமானத்தின் வாயு டைர்பைன் இயந்திரங்களை பாதுகாக்க உதவுகிறது, இது இல்லையெனில் அவற்றின் பாகத்தை அரித்து தீங்கிற்குள்ளாக்கும்.
ஏன்: அறிக்கையின் படி, வழக்கமான இயந்திர இயக்க சுழற்சிகளைப் பொறுத்த வரையில் தங்கம் மிகவும் நெகிழ்வானதாகும் மேலும் இது எரிபொருள் பயன்பாட்டை சராசரியாக 0.5% குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன: பதக்கங்கள், கோப்பைகள், பரிமாறும் கிண்ணங்கள் போன்ற மற்றும் தட்டுகள் போன்ற தங்க முலாம் பூசப்பட்ட பொருட்கள் அதிகமாக போற்றப்படுகின்றன மற்றும் பெருமையுடன் காண்பிக்கப்படுகின்றன.
ஏன்: முலாம் பூசுவதற்காக பயன்படுத்தும் தங்கத்தின் தூய்மை 24 காரட் முதல் 18 காரட் அல்லது அதற்கு குறைவானது வரை மாறுபடுவதனால், தூய தங்கத்தின் அடுக்கு அவற்றுக்கு ஒரு சிறப்பு அந்தஸ்தைக் கொடுக்கிறது. மேலும், இவை பெரும்பாலும் ஒரு திறமை அல்லது ஒரு சிறப்பு நினைவின் அடையாத்திற்கு பரிசாக பெறப்படுகின்றன
தங்க வரி: ஒவ்வொரு ஒலிம்பிக் பதக்கத்திலும் சுமார் 6 கிராம் 24 காரட் தங்கம் உள்ளது
தங்கத்தின் பங்கு இந்த பகுதிகளில் மட்டும் அடங்கிவிடவில்லை. ஒட்டுமொத்தத்தில், அதன் இரசாயன பண்புகள் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் ஆகியவை நவீன வாழ்வில் இந்த உலோகம் ஒரு தாக்கமான அங்கம் வகிக்கிறது என்பதை நாம் காண முடிகிறது. ஒரு அரிய மற்றும் அழகான முரண்பாடு என்னவென்றால், இது அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பில் இருப்பது போலவே, வரலாறு மற்றும் பாரம்பரியத்திலும் இருக்கிறது. ஒருவேளை, தங்கத்தின் இந்த மிகச் சிறந்த தரம் மற்றும் கலைநயத்துடன் கூடிய பயன்படு இதை மிகவும் தேவைப்பாடுள்ள உலோகமாக்குகிறது.