Published: 08 செப் 2017

துர்கா அஷ்டமிக்கான தங்க நகை வடிவங்கள்

Gold Jewellery Design for Durga Ashtami

துர்கை அன்னையின் நினைவாக துர்கா அஷ்டமி என்ற பெங்காலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இறைமை கொண்ட பெண்மையின் நினைவாக இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. குடும்பங்கள் இனிப்புகளையும் கதைகளையும் பகிர்ந்துகொள்ளும். இல்லங்கள் நிறத்தாலும் அழகாலும் நிறைந்திருக்கும். உண்மையிலேயே விசேஷமான நகை வடிவங்கள் இந்த தருணத்தில் கிடைக்கும். சிறந்த பாரம்பரிய அழகை அதிகரித்துக்காட்ட செல்வம் மிகுந்த பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த துர்கா அஷ்டமியின்போது உங்கள் தோற்றத்தை எடுத்துக்காட்ட சில தங்க வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன:

  • பதக்கங்கள்

    மீனாகாரி வேலைப்பாடுகொண்ட பாரம்பரிய பதக்கங்களை நீங்கள் வாங்கலாம். ஜியாமெட்ரிக் வடிவங்களுடன் மெல்லிய முனைகளையும் இவை கொண்டிருக்கும். இவை பல்வேறு வண்ணங்களில் வருகின்றன. இந்த பதக்கங்கள் பாரம்பரியத்தை நவீனத்துடன் இணைத்து பண்டிகைக் கால தோற்றத்தை அளிக்கின்றன.

    Meenakari pendent

  • பாரம்பரிய ஜிமிக்கிகள்

    பாரம்பரிய தங்க ஜிமிக்கிகளைப் பொறுத்தவரை நீங்கள் தவறாகவே இருக்க முடியயாது. பூக்கள் மற்றும் விலங்குகள் – மயில்கள், தாமரை, ரோஜா போன்ற பாரம்பரிய கொண்டாட்டமிக்க தோற்றத்தை அடையுங்கள்.

    Traditional gold jhumkas

    நீங்கள் தைரியமாக செல்ல வேண்டுமென்றால் அடுக்கு ஜிமிக்கிகளை அணிந்துகொள்ளுங்கள். அதே நேரத்தில் அற்புதமான தரத்தைப் பெற்றிருங்கள்.

    Layered jhumkas

  • எனாமல் பதிக்கப்பட்ட வளையல்கள்

    இத்தகைய வளையல்கள் துர்கைஅம்மனின் பாரம்பரிய நிறங்களைப் பிரதிபலிக்கின்றன. துர்கா அஷ்டமி போன்ற தருணங்களுக்கு ஏற்ற வளையல்கள் இவை. பாரம்பரிய இந்திய ஆடையிலிருந்து அரை பாரம்பரிய ஆடைகளுக்கு இந்த வளையல்கள் ஏற்றவை.

    Enamel encrusted bangles

  • கோவில் செல்வாக்கு பெற்ற நகைகள்

    இந்த தருணமானது நாடகத்தன்மை கொண்ட நகைகளை கொண்டுவரும். உங்களுக்குள் உள்ள தேவதையை வெளிக்கொண்டு வரும். பச்சையும் சிவப்பும் கலந்த தங்க நெக்லெஸ் உங்களுக்கான சிறந்த ஆடை பங்குதாரர். உங்களது செல்வாக்கு மிக்க பந்தல்களில் உங்கள் அழகிற்கு அழகூட்டும். நுண்ணிய வேலைப்பாடு கொண்ட வளையல் உங்கள் தோற்றத்திற்கு அழகூட்டும்.

  • மூக்குத்திகள்

    மற்ற பண்டிகைகள் போலவே துர்கா அஷ்டமியும் உங்கள் நளினமான தேர்விற்கு ஏற்ற நேரம். மூக்குத்தி, மூக்கு வளையம், மூக்கு ஊசி என்று உங்கள் தலை வரை நகைகளால் அலங்கரியுங்கள். உங்களது பண்டிகை தோற்றத்தை செறிவூட்ட அழகிய தொடுதலை அளியுங்கள்.

தங்கத்தின் மினுமினுப்பில் இந்த துர்கா அஷ்டமி அடியெடுத்து வையுங்கள். அது கொண்டு வரும் காதல், அழகு மற்றும் இதத்தை அனுபவியுங்கள்!

Sources:

Source1, Source2, Source3,