Published: 31 ஆக 2017
பல்வேறு விதமான தருணங்களுக்கு ஏற்ற தங்க நகைகள்
இன்றைக்கு சுரங்கத்திலிருந்து கிடைக்கும் தங்கத்தில் 49 சதவிதம் தங்க நகையாக மாற்றப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? தங்க நகைகள் எல்லா வடிவங்களிலும் நமது ஆசையைத் தூண்டக் கூடியவையாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட தருணத்திற்கு ஒரு குறிப்பிட்ட ஜோடி நகையைத் தேர்ந்தெடுப்பது ஒரு கலைதான். அது ஓர் எளிமையான குடும்பச் சேர்க்கையாக இருந்தாலும் சரி, ஒரு திருமண வைபவமாக இருந்தாலும் சரி, அல்லது உங்களது சக ஊழியர்களுடன் வெளியே செல்வதாக இருந்தாலும் சரி, உங்களுக்கு எது சிறந்தது என்று உதவுவதற்கு சில கருத்துக்கள்:
- தங்கம் – ஒரு மணமகளாக
உங்களது மணமகள் ஆடை என்ன நிறத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம், சிவப்பு மற்றும் வெள்ளை, பிங் மற்றும் மஞ்சள், ஊதா மற்றும் நீலம், அல்லது ஏதாவது பளிச்சென்ற இணைப்பு, என்று எந்த நிறச்சேர்க்கையாக இருந்தாலும், தங்கமான உங்களது மணமகள் அலங்காரத்தை நிறைவு செய்ய தங்கம் அவசியமானது. சில நுண்ணிய வடிவம் கொண்ட தங்க நகைகள் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக அவசியத்தை உணர்த்துகின்றன. இந்திய மணமகள் அணியும் தங்க நகைகள் அதன் நுண்ணிய வேலைப்பாட்டினால் காண்போரின் கண்ணைக் கவர்கின்றன. நன்கு கைதேர்ந்த கரிகர்களால் (பொற்கொல்லர்களால்) செய்யப்பட்ட பாரம்பரிய தங்க நகைகள் சிக்(சோக்கர்) நெக்லேஸ், இராணி ஹார், டியாரா மாங் டிக்கா என்று பல்வேறு விதமாக உங்கள் மணநாளன்று அணிவதற்கு ஏற்றவை. நீங்கள் தங்க வளையல்களையும் அணிந்து கொள்ளலாம். கங்கண்கள், கமர் பந்துகள், நெக்லேஸ்கள், மோதிரங்கள், தோடுகள், ஹாத் ஃபூல்கள் மறறும் இதர மணப்பெண் நகைகளையும் நீங்கள் அணியலாம். இவையெல்லாம் அணியும்போது உங்களது பெரிய நாள் நவநாகரிகம் பெறும். மணமகள் தனது மணநாளில் சேர்க்கக்கூடிய 7 விதமான தங்கம் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. 7 Ways a Bride can add Gold to her Wedding Day.
- தங்கம் – திருமண விருந்தினராக செல்வதற்கு
உங்களது நண்பரின் திருமணத்திற்கு செல்ல வேண்டுமா, உங்கள் பரம்பரை நகைத் தொகுப்பில் உள்ள பாரம்பரிய தங்க நெக்லெஸ் இதற்கான மாயாஜாலத்தை செய்யும். நன்கு கனமான புடவையோ, அல்லது கவுனோ அல்லது லெகங்காவோ அல்லது ஏதேனும் கனமான ஆடை அணிந்து சென்று இந்த மந்திரத்தை உருவாக்குங்கள்.
- தங்கம் – திருவிழாவிற்காக
இந்தியா, பண்டிகைகளின் நிலம். நாடு முழுவதும் உள்ள தங்க காதலர்கள் தங்கள் கொண்டாட்டங்களுடன் இணைய உடைக்கேற்ற நகை அணிய விரும்புபவர்கள். தங்க தோடுகள், வளையல்கள், கொலுசுகள், மோதிரங்கள், கங்கணங்கள் ஆகியவை தீபாவளி, பொங்கல், இரக்ஷா பந்தன், கர்வா சௌத், தசரா ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. இது யக்னாக்கள், பூஜைகள், மத சடங்குககள், அல்லது திருவிழாக்களாக இருக்கட்டும். பாரம்பரிய உடையுடன் தங்க நகை அணிவது புனிதமாகக் கருதப்படுகிறது. தங்கம் செழுமையையும் வளமையையும் குறிக்கிறது. செல்வத்திற்கான நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று நம்பப்படுகிறது. பண்டிகைகளின் நாடான இந்தியா பல்வேறு விதமான பிராந்திய தனித்துவங்கள் பற்றி பெருமைப்படுகிறது. தங்க நகையைத் தேர்ந்தெடுத்தல் என்று வரும்போது- இங்கே ஒரு பார்வை செலுத்தவும். இந்தியா முழுவதும் அணியப்படும் தங்க நகைகள் gold jewellery worn across India.
- தங்கம் பணியிடத்தில்
தங்கத்தின் மென்மையான தொடுதலுடன் உங்களது அடுத்த கார்ப்பரேட் நிகழ்ச்சியில் உங்களுக்கென பிரத்தேயகமான இடத்தை நீங்கள் எவ்வாறு பெறப் போகிறிர்கள்? மேற்கத்திய உடைகள் தங்க டாலர், எளிய தங்க மோதிரம், பளிச்சென்னும் தங்க வளையல் ஜோடிகள், அல்லது பாரம்பரிய உடைகளான சரசரவென்ற குர்திக்கள், அல்லது லேசான புடவைகள் ஆகியவற்றை உடுத்திச் செல்லவும். இவற்றிற்குப் பொருந்தும் வகையில் நவீனமான பாரம்பரிய தங்க அணிகளை அணியவும். மொத்தமான தங்க நகைகளுக்குப் பதில், மிகவும் குறைவான ஆடம்பரம் கொண்ட மென்மையான வடிவங்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஒரு நவீன ஆடைகளுக்கு தங்கத்தின் அழகையும் கௌரவத்தையும் அளிக்கும். மேலும் கருத்துக்களுக்கு, படிக்கவும்
- ஒரு குடும்ப இணைவு நிகழ்ச்சிக்கு தங்கம்
குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது மிகவும் வசதியானதும் பாதுகாப்பானதும் ஆகும். எனவே நன்றாக தோன்றும் படி உடை அணியவும். ஒரு ஆடை ஒழுங்கு பற்றிய எண்ணம் இல்லாமல் ஒருவரது நவநாகரிக தன்மைக்கு ஏற்றபடி உடையணியவும். ஒரு கைப்பட்டையையோ அல்லது மெட்டியையோ அணிந்து செல்லலாம். அல்லது உடல் சங்கிலியை அணிந்து கொள்ளலாம். நீங்கள் முன்னர் அணியாத நகைகளை அணியலாம். தோடுகள், பிரேஸ்லெட்டுக்கள், வளையல்கள், கொலுசுகள், மூக்குத்துக்கள் ஆகியவை அணிவது உங்கள் அழகினைக் கூட்டும். எளிய, தற்கால, பளிச்சென்ற வடிவங்கள் அணிந்து கொள்வதற்கு ஏற்றது.
- தங்கம் – மதக் கொண்டாட்டத்திற்காக
தங்கம் எல்லா விதத்திலும் ஒளிரும் என்பது கொண்டாட்டத்திற்கான தருணம். நீங்கள் ஒரு யாகத்தையோ அல்லது குழந்தையின் புது நன்மையையோ அல்லது ஏதாவது மத ரீதியான கலாச்சார ரீதியான விசேஷங்களுக்குச் செல்வதென்றால் தங்கம் உங்களை முழுமையாக்கும். நீண்ட அணி வகுக்கப்பட்ட நெக்லேஸ்கள், தங்க ஜிமிக்கிகள் (jhumkaas), தங்க ஹாத்பூல்கள் (hathphool) பாரம்பரிய உடைக்கு ஏற்றவையாக இருக்கும். கொண்டாட்டத்தை அதிகரிக்கும்.
“உங்களை தனித்துவமாக உணர வைக்கும் சக்தி தங்க நகைக்கு உண்டு“, என்றார் ஜென்னி க்வான் என்ற பிரபல அமெரிக்க சொகுசு நகை வடிவமைப்பாளர். நீங்கள் தேர்ந்தெடுக்கும் தங்க நகையானது உங்களது ஆளுமையின் வெளிப்பாடாகலாம். அதிர்ஷ்டவசமாக, நளினமான, ஆடம்பரமான, பாரம்பரியமான, பகட்டான தங்க நகைகள் உள்ளன. அந்தந்த தருணங்களுக்கு ஏற்றபடி அவற்றை தேர்ந்தெடுக்கலாம்.