Published: 05 அக் 2017

தங்க விலை உயர்வு இறுதியில் உங்களை நிதி ரீதியாக பாதுகாப்பாக மாற்றும்

நீண்ட காலமாக தங்கத்தின் விலை நிலையாக உயர்ந்து கொண்டுள்ளது. 2000ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.44000. இன்று அதன் விலை ஏறத்தாழ ரூ.29,000

ஆனால் தங்கத்தின் விலை உயர்வு தரும் பலன்களை அனுபவிக்க வேண்டுமானால் நீங்கள் வாங்கிய தங்கத்தை நீங்கள் விற்க வேண்டும். ஆனால் இதனைச் செய்வதற்கு பல்வேறு வாடிக்கையாளர்கள் மறுக்கிறார்கள். நீங்கள் சொந்தமாக வைத்துள்ள நகையை விற்காமல் எவ்வாறு மூலதனமாக்க முடியும்?

தங்க நகை சேமிப்புத் திட்டத்தில் இணையவும்

தங்க நகை சேமிப்புத் திட்டமானது 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி உங்களிடம் உள்ள இயல் தங்கத்தை அதாவது தங்கக் கட்டிகள், நாணயங்கள் மற்றும் நகைகளை தங்க சேமிப்புக் கணக்காக மாற்ற முடியும். தங்கத்தின் எடையின் அடிப்படையில் இந்த தங்கமானது வட்டி வழங்கும். இந்த உலோகத்தின் மதிப்பு உயரும்போது வட்டியும் அதிகரிக்கும். தற்போது உங்களது தங்கமானது உங்கள் வங்கி பெட்டகத்தில் பயன் இல்லாமல் இருக்கும். இதற்கு அந்த வங்கிக்கு நீங்கள் ஆண்டு கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கும். எளிமையாக சொல்ல வேண்டுமானால், தங்கத்தை சொந்தமாக பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டும். இந்த பணமானது மதிப்பில் பெருகும்.

தொடர்புடையது: காகிதத் தங்கத்தின் வரி சலுகைகள்

தங்க நகை சேமிப்புத் திட்டம் எவ்வாறு பணிபுரிகிறது

  1. உங்களது வங்கி பெட்டகத்தில் 100 கிராம்கள் தங்கம் சும்மா இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதனை நீங்கள் எடுத்து உங்கள் வங்கியில் உள்ள 12-15 ஆண்டு வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள்.

    • GMS திட்டத்தின் படி குறைந்தது 30 கிராம் தங்கத்தை சேமிக்க வேண்டும். இதற்கு உச்சபட்ச எல்லை கிடையாது. 1லிருந்து 3 ஆண்டுகள், 5லிருந்து 7 ஆண்டுகள் அல்லது 12லிருந்நது 15 ஆண்டுகள் என்று தங்கத்தை சேமிக்கலாம்.

  2. நீங்கள் வைக்கும்போது தங்கத்தின் விலையானது 10 கிராம்களுக்கு ரூ.30,000 என்று வைத்துகொண்டால் அல்லது ஒரு கிராமுக்கு ரூ.3,000 என்று வைத்துகொண்டால், உங்கள் வைப்பின் மதிப்பானது ரூ.3 இலட்சங்கள். அதாவது 100 கிராம்களுக்கு 1000 x ரூ. 3,000

  3. 2.5% என்ற விகிதத்தில் நீண்ட கால வைப்பிற்கான ஆண்டு வட்டி ரூ,7500

    • குறுகிய காலங்களில், வட்டி விகிதமானது 0.50% லிருந்து 2.25% வரை வேறுபடும்

    • இந்த வட்டி வருமானமானது மூலதன ஆதாய வரி, செல்வ வரி மற்றும் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதன் பொருள் என்னவென்றால் 15 ஆண்டுகள் x ரூ.7500 = ரூ.1,12,500 உத்தரவாதமான வரி இல்லாத வருமானம்.

  4. அடுத்த 15 ஆண்டுகளில் தங்கத்தின் விலை இரட்டிப்பானால் உங்களது 100 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.6 இலட்சம். இதன் மூலதன ஆதாயமாகக் கிடைக்கும் ரூ. 3 இலட்சத்திற்கு நீங்கள் எந்த விதமான வரியும் செலுத்தத் தேவையில்லை.

  5. முதிர்வடையும்போது இந்தத் தொகையை நீங்கள் ரொக்கமாகவோ அல்லது 995 சுத்தத் தங்கமாகவோ பெறலாம். தங்கத்தின் மீதான உங்கள் இருப்பைத் தக்க வைத்துகொள்வதற்கான பயனுள்ள ◌தேர்வு இது.

 

தங்க நகை சேமித்தலின் நலன்கள்

அந்த இலாபத்தை நாம் இதில் இணைத்துகொள்வோம். ஆண்டுக் கட்டணத் தொகையானது ரூ.3,000 என்று வைத்துகொண்டால் நீங்கள் ரூ.45,000ஐ சேமித்திருப்பீர்கள். பெட்டகக் கட்டணமாக 15 ஆண்டுகளில் நீங்கள் செலவு செய்த தொகை +ரூ.1.12 இலட்சத்திற்கு வரி இல்லாத வருமானம் + வரி இல்லாத மூலதனம், அதாவது ரூ. 3 இலட்சத்திற்கான விலை உயர்வு

தங்கத்தை இழப்பது குறித்த பூஜ்ய இடர், அதற்கான கூடுதல் சலுகைகள், தூய்மையின் குறைப்பு மற்றும உங்களது முதலீட்டை தங்கமாகவோ அல்லது பணமாகவோ நீங்கள் விரும்பும்போது மாற்றிகொள்ளலாம் என்ற வசதிகளும் உள்ளன.

ஒரு தொழில் தொடங்குவதற்கு உங்கள் செல்வத்திற்கான வழிகளைக் கண்டறிய வேண்டுமென்றால், ஒரு உலகச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது உங்கள் இஷ்டப்படி நீங்கள் வாழ விரும்புகிறீர்களா, உங்களை சரியான பாதையில் கொண்டு செல்லும் சிறந்த மாதிரி தங்கமாகக் கூட இருக்கலாம்.

தங்க நகை சேமிப்புத் திட்டம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, இங்கே , க்ளிக் செய்யவும்.