Published: 27 செப் 2017
ராஜஸ்தானில் தங்கத்திற்காக தேடல்
2016ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தின் மத்தியில், ராஜஸ்தான் மாநிலத்தின் டோன்க் மாவட்டத்தில் உள்ள கைவிடப்பட்ட கல் குவாரி ஒன்றில் 'தங்கத்திற்கான தேடல்' மேற்கொள்ளப்படுவதாக ராஜஸ்தானின் உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்தது. தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்று கிராமத்தினர்கள் இடையே பரவிய வதந்தி காரணமாக தேடல் அதிகரித்தது.
காலம் கடந்து, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ஏஎஸ்ஐ) இதில் தலையிட்டது. தங்கத்திற்கான தேடல் என்பது அக்டோபர் மாதத்தில் தொடங்கி, இரண்டு மாதங்கள் தொடர்ந்தது என உள்ளூர் கிராமவாசிகள் தெரிவித்ததாக ஊடகம் செய்தி வெளியிட்டது.
ஏஎஸ்ஐ-ன் தலையீட்டிற்கு முன்னதாகவே 2,000-க்கும் அதிகமான நாணயங்கள் காணாமல் போயுள்ளதாக மற்றொரு தினசரி நாளிதழ் தெரிவித்தது. காவல்துறையினரால் ஒவ்வொரு வீட்டிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையானது 108 நாணயங்களை மீட்க வழிவகுத்தது.
அதில் மேற்கொள்ள கண்டுபிடிப்புகள் அதிசயிக்கும் வகையில் இருந்தன. மூன்று குப்த பேரரசர்களான சமுத்திரகுப்தர் (கிபி 335-380), சந்திரகுப்தர் II (கிபி 380-415) மற்றும் குமாரகுப்தர் (கிபி 415-455) ஆகியோரின் காலப்பகுதிகளைச் சேர்ந்த 106 நாணயங்களும், குஷான வம்சத்தின் (கிபி 30-230) இரண்டு நாணயங்களும் இருந்தன.
குஷான நாணயங்களின் ஒரு பக்கத்தில் ஒரு அரசர் நெருப்பில் காணிக்கையை செலுத்தும் படத்தைக் கொண்டிருந்தது. மறுபுறத்தில், கிரேக்க கடவுள்களின் மற்றும் தேவியர்களின் உருவங்கள் இருந்தன. கிரேக்க மொழியில் நாணயத்தின் மீது பின்வருமாறு பொறிக்கப்பட்டிருந்தது: ஷாவோ நானோ ஷாவோ, கனிஷ்கா குஷான் (பேரரசர்களுக்கு எல்லாம் பேரரசர், கனிஷ்கா குஷான்).
குப்தர்கள் கால நாணயங்களில் கடவுளர்கள் மற்றும் தேவியர்களின் உருவங்கள் உள்ளன, அவற்றைத் தவிர வீணை (ஒரு பண்டைய இந்திய நரம்புக் கருவி), மயில், சிம்மாசனம், முதலியவற்றின் உருவங்கள் உள்ளன, மேலும் பிராமி மொழியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. குப்தர்கள் வம்ச காலத்தின் அரிதான நாணயத்தில், தோள்பட்டை மீது சரிந்து கொண்டிருக்கும் தலைமுடியுடன் ஒரு சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும் ஒரு பெண்மணியின் உருவம் உள்ளது. அவள் ஒரு புடவையை அணிந்துகொண்டிருக்கிறாள், மேலும், அவளை ஒரு தெய்வமாக விவரித்தும், சுதந்திரம் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதைப் பற்றி பேசும் வகையில் பொறிக்கப்பட்ட வார்த்தைகளையும் நாணயம் கொண்டுள்ளது.
கடைசியாக 1946ஆம் ஆண்டில் இதே போன்றதொரு புதையல் கண்டுபிடிக்கப்பட்டது, அப்பொழுது ராஜஸ்தானில் பரத்பூருக்கு அருகே உள்ள பாயானாவில் இருந்து 1,821 நாணயங்கள் மீட்கப்பட்டது.
கிராமத்தினர் நாணயங்களை மேற்கொண்டு தேடாமல் இருக்கும் வகையில், ராஜஸ்தான் மாநில ஆயுதப்படை காவலர்கள் குவாரிகளில் எப்பொழுதும் நிற்கிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால், அருகிலுள்ள 10 கிராமத்தினர்கள் அமைதியாக இருக்க முடிவு செய்துள்ளனர். மக்கள் கூட்டத்தினரால் தூக்கியெறியப்பட்ட உணவுகள் மற்றும் காலணிகள் இல்லாமல் போனதால, குவாரி இப்பொழுது அமைதியாக இருக்கிறது.
ஆனால் தங்கத்திற்கான தேடல் முடிந்துவிடவில்லை, அது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது என்று கிராமவாசிகள் கருதுகின்றனர்.