Published: 05 செப் 2017
தொகுக்கப்பட்ட தங்கத்தின் தரநிலை
பணம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப நாட்களில், தங்க நாணயங்கள் என்பவை ஒரு பொதுவான நாணய வடிவமாக இருந்தது. பணம் ஒரு உள்ளார்ந்த மதிப்பு கொண்டுள்ளது என்பது இந்த அணுகுமுறைக்கான அர்த்தம் ஆகும். ஒரு தங்க நாணயத்தை பாதி பாதியாக உடைத்தால், அந்த 2 துண்டுகளில் ஒவ்வொன்றும் அசல் நாணயத்தின் மதிப்பில் பாதியைக் கொண்டிருக்கும். ஆனால் காலப்போக்கில், சரக்குகள் மற்றும் சேவைகளின் வர்த்தக அளவு அதிகரித்ததால், ஒரு தேசத்தின் செல்வத்தை சிறப்பாக கட்டுப்படுத்த உதவுவதற்கு காகிதப் பணத்தின் தேவை உருவாகியது.
தங்கத்தின் தரநிலை என்பது பணத்தின் மதிப்பை தீர்மானிப்பதற்கான ஒரு வழிமுறையாக இருந்தது, இது இரண்டாம் உலகப்போரின் முடிவிற்குப் பின்னர் தோன்றியது; அப்பொழுது உலகத்திற்கு தன்னைத் தானே கட்டமைத்துக்கொள்ள உதவும் திட்டத்திற்கான தேவை இருந்தது. இரு உலகப் போர்களுக்கு இடையே பெரும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டதால், உலகத் தலைவர்கள் சேர்ந்து 1944-ல் பிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கைகளின் கீழ் உலகத்தை மீண்டும் உருவாக்கத் திட்டமிட்டனர். இந்த அமைப்பானது தங்கப் பரிமாற்றத் தரநிலையை உருவாக்கியது, அதில் தங்கத்தின் விலையானது அமெரிக்க டாலருக்கு ஏற்ப முடிவு செய்யப்பட்டது. அமெரிக்க நாடானது இரண்டு உலகப் போர்களினாலும் பெரிய அளவில் சேதமடையாமல் இருந்தது மற்றும் அந்த நேரத்தில் அது வலுவான பொருளாதாரமாக இருந்தது ஆகியவையே அமெரிக்க டாலர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம் ஆகும். முன்னதாக வலுவாக இருந்த ஐரோப்பிய நாடுகளைப் போலல்லாமல், அமெரிக்க நாட்டிற்கு தனது உள்கட்டமைப்பை சரி செய்யவோ அல்லது யுத்தத்தின் போது குண்டு வீசப்பட்ட நகரங்களை சரி செய்யவோ தேவை ஏற்படவில்லை. இது முன்னொருபோதும் செய்யப்படாத ஒரு தீவிரமான பரிசோதனை ஆகும், அது உலகின் சந்தைகளில் அமெரிக்காவை மிகவும் சக்தி வாய்ந்த நாடாக ஆக்கியது.
பிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கையின் விளைவாக, தங்கத்தின் விலை என்பது ஒரு அவுன்ஸ்-க்கு $35 என நிர்ணயிக்கப்பட்டது, இது 1970கள் மற்றும் வியட்நாம் போர் வரை, அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிலையாக இருந்தது. வியட்நாம் போர் காரணமாக தங்கத்தின் தரநிலை வீழ்ச்சியடைந்தது, இதனால், 1971ஆம் ஆண்டில் இந்த தரநிலை கைவிடப்பட்டது. 2014ஆம் ஆண்டு வரை, தற்போது எந்த நாடும் தங்கத்தின் தரநிலையைப் பின்பற்றவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இப்போது தங்கத்தால் கணக்கிடப்படாத பணம் உள்ள உலகில் நாம் வாழ்கிறோம்.
இது தங்க இருப்புக்களை வைத்திருக்கும் நாடுகளையும் அரசாங்கங்களையும் பாதிக்கவில்லை. 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, உலகின் அனைத்து நாடுகளுடனும் ஒப்பிட்டால், 10வது மிகப்பெரிய தங்க இருப்பாக 557 டன்களை இந்தியா கொண்டுள்ளது.