Published: 09 பிப் 2018
கவனிக்கப்பட வேண்டிய தங்க சிம்மாசனம்
கடந்த காலத்தில் இந்தியா இழந்த செல்வங்கள் அனைத்திலும், ‘மயிலாசனத்தை’ விட மிக அழகான மற்றும் கம்பீரமான வேறொன்று இல்லை. இந்த சிம்மாசனம் மிக அற்புதமானது, இந்தப் பேரரசு முழுவதும் உள்ள பயணிகள் மற்றும் வரலாற்று ஆசிரியர்களும் அதனுடைய நுணுக்கமான வடிவமைப்பைக் கண்டு பிரமிப்படைந்திருக்கிறார்கள்.
பலரும் முகலாயப் பேரரசின் பொற்காலமாகப் பார்க்கும் காலத்தில் பேரரசர் ஷாஜகான் ஆட்சி புரிந்திருக்கிறரா். பெரும் விருந்துகள் மற்றும் மத விழாக்கள் நடத்தப் பெறுகிற மற்றும் அரச விருந்தினர்களுக்கு ஆடம்பர வரவேற்பு விழாக்கள் செய்யப்படுகிற ஷாஜஹானாபாத்திலிருந்து ஆட்சி புரிகிறார், இங்கே பேரரசரின் தேவையிலேயே எப்போதும் போல கவனம் செலுத்தப்படுகிறது.
அவருடைய ஆட்சிக்காலத்தில், மிகப் பெரிய அரசர் மற்றும் கடவுளின் நிழல் போன்ற பெயர்கள் அவருக்கு அளிக்கப்பட்டது, இதனால் அவர் கடவுளின் எண்ணத்தை நிறைவேற்றுபவராகப் பார்க்கப்பட்டார். ஆகவே, அவருடைய ஆட்சியை திடப்படுத்துவதற்கு, அவர் ஒரு பொருத்தமான ஆசனம் அல்லது தக்த்-ஈ-சுலைமான் என்றழைக்கப்படும் இடத்தில் அமரவேண்டியது அவசியமானது.
தக்த்-ஈ-சுலைமான் போன்றதொரு ஆசனத்தை உருவாக்குவதற்கு, கிலானிக்கும் அவர் குழுவினருக்கும் ஆணையிட்டார். அது தங்கத்தால் வேயப்பட்டு நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கவேண்டும், அதில் ஏறுவதற்கான படிகளைக் கொண்டிருக்கவேண்டும், அதில் அரசர் தரையிலிருந்து உயரத்தில் சொர்க்கத்துக்கு அருகே அமர்ந்திருப்பார்.
இந்த ஆசனத்தை செய்து முடிக்க ஏழு ஆண்டுகள் ஆனது. தங்கக் கட்டிகள், ரத்தினக் கற்கள் மற்றும் முத்துக்கள், ஆகியவை இந்த அழகிய ஆசனத்தை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டன. எந்தவித செலவும் தவிர்க்கப்படவில்லை. உண்மையில், இதை உருவாக்குவதற்கு ஆன செலவு தாஜ்மஹாலைக் கட்டுவதற்கு ஆன செலவைவிட அதிகம்.
ஷாஜகான் ஆட்சிக்கு வந்து ஏழாவது ஆண்டு விழாவில், 1635 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி சிம்மாசனம் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த தேதி ஜோதிடர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது, மேலும் ரமலான் மற்றும் நௌரஸ் முடிவி்ல் ஈத்-அல்-ஃபித்ர் அன்று என்பதால் இது மங்களகரமான தினமாக இருந்தது.
இந்த சிம்மாசனத்தை வெகு சிலர் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டது, அதில் சேவகர்கள், உயர்குடி மக்கள் மற்றும் பார்க்க வரும் பிரமுகர்கள் ஆகியோர் அடங்குவர். தொடக்கத்தில், இது தக்த்-முராஸா அல்லது ரத்தினங்கள் பதித்த சிம்மாசனம் என்றே அழைக்கப்பட்டது. வரலாற்று ஆசிரியர்கள் அதிலுள்ள மயில் சிலைகளை கவனித்த பிறகே அதை மயிலாசனம் என அழைக்கத் தொடங்கினர்.
வரலாற்று ஆசிரியரும், பயணியுமான அப்துல் ஹமித் இவ்வாறு நினைவுகூர்கிறார்:
“காலப்போக்கில், பல விலைமதிப்பற்ற ரத்தினங்கள் அரசின் கஜானாவுக்கு வந்து சேர்ந்தது, இவை ஒவ்வொன்றும் வீனஸுக்கு காதணியாகப் பயன்படும் அல்லது சூரியனின் அரைக்கச்சையாகப் பயன்படும். பேரரசரின் உரிமைக்கு ஆட்பட்டபிறகு, அவருடைய எண்ணத்தில் இது தோன்றியது, தொலைநோக்கு பார்வை கொண்ட நபர்களின் கருத்துப்படி அது போன்ற அரிய ரத்தினங்களைக் கைப்பற்றி வைத்திருப்பது ஒரே சேவைக்கு மட்டும்தான் என்றும், அது பேரரசின் சிம்மாசனத்தை அலங்கரிப்பது மட்டும்தான். ஆகவே அவர்கள் செய்யவேண்டியது, கவனிப்பவர்கள் அவற்றின் சிறப்புகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும், பேரரசர் அற்புதமான ஒளியுடன் பிரகாசிக்கும் வகையில் அவற்றைப் பயன்படுத்தவேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக, ஈரானில் நாதிர் ஷா ஆட்சிக்கு வந்தபோது, பாதுகாப்புக்காக முகலாயப் பேரரசில் தஞ்சமடைந்த ஹோடாகி படையினரை தோற்கடிக்கப் புறப்பட்டார். பேரரசின் மீது படையெடுத்து அதை தோற்கடிப்பதற்கு, நாதிர் ஷாவுக்கு இந்த ஒரு காரணம் போதுமானதாக இருந்தது. ஆனால், இது போன்றதொரு பரந்த பேரரசை கட்டியாள தன்னால் முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார், எனவே சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அந்த பேச்சுவார்த்தையின் பரிசுகளில் ஒன்று மயிலாசானம்.
நாதிர் ஷா படுகொலை செய்யப்பட்ட போது, அதிலுள்ள பொக்கிஷங்களுக்காக சிம்மாசனம் உருக்கி அழிக்கப்பட்டது என சிலர் கூறுகிறரா்கள், அது ஓட்டோமேன் சுல்தானுக்கு பரிசாக அளிக்கப்பட்டது என வேறு சிலர் கூறுகிறார்கள். மயிலாசனத்தின் பொக்கிஷங்கள் பற்றி இன்னமும் வரலாற்று ஆசிரியர்கள் விவாதம் செய்கிறார்கள், ஆனால் அதனுடைய சிறப்புகளை பலரும் ஒப்புக்கொள்கிறார்கள்.