Published: 20 பிப் 2018
ஒரு தங்க விவகாரம்
புனித பைபிளின் புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாடு ஆகிய இரண்டிலும் தங்கம் மற்றும் வெள்ளி சுத்திகரிப்பு குறித்த எண்ணற்ற குறிப்புகளை நீங்கள் காணலாம். வலி தரும் சோதனைகள் மூலம் மக்களை அப்பழுக்கற்றவர்களாக்கும் இறைவனின் செயல் போன்றதாக பல ஆன்மிகத் தலைவர்கள் இதனைப் பார்க்கின்றனர். இந்து புராணமும் இதில் மாறுபட்டதாக இல்லை. கடவுள் ஆகப்பட்டவர் நெருப்பின் விதையாக கருதப்படுகிறார் (அக்னி தேவன்).
சடங்குகளில் தீ இன்றியமையாத ஒன்றாகும் என்பது பெரும்பாலான இந்துக்கள் அறிந்ததே. அதே போல் தான் அலங்கரிப்புகளும்; குறிப்பிட்ட சமயச் சடங்குகள் மற்றும் நிகழ்வுகளுக்காகவே தயாரிக்கப்பட்டு அணிந்துகொள்ளப்படுவதாகும். பாரம்பரியம் மற்றும் மங்களகரம் இடையிலான கூட்டணியானது தங்கத்தை இந்தியத் திருமணங்களில் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாக வைத்திருக்கிறது. சில திருமணங்களில், தங்கத்தை வைத்திருப்பது, அந்த மங்கள் நிகழ்வில் கடவுள்கள் வருகைத் தந்திருப்பதைக் குறிப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தங்கம் அதிகளவில் வாங்கப்படும் முக்கியத் தருணங்களின் பட்டியலில் முதலிடம் திருமணமாகவே இருக்கக்கூடும். மணமகள் மற்றும் மணமகனுக்கான ஆபரணங்கள், குடும்பத்திலுள்ள நெருங்கிய சொந்தங்களுக்கு ஆபரணங்கள், குடும்பத்திலுள்ள மூத்தோருக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் புடைப்புரு நாணயங்கள் அல்லது ஆண் மற்றும் பெண் கடவுள் உருவம் பதித்த நினைவுச்சின்னங்கள் மற்றும் இதர பொருட்களுக்காக தங்கம் வாங்கப்படுகிறது.
திருமணங்களின் போது அன்பளிப்பு தருவதற்காக அல்லது சொந்த பயன்பாட்டிற்காக தங்கம் வாங்கப்படுவது அதிகரித்துவருகிறது. இரு தரப்பினராலும் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்வதற்கு இது ஒரு சாக்காக உள்ளது. மேலும், மகாலக்ஷ்மி - மணப்பெண், தங்கத்துடன் வீட்டிற்கு பிரவேசம் செய்வதை அவளது மாமனார் மற்றும் மாமியார் ஒரு சுப சகுனமாகக் கருதுகின்றனர். திருமணங்களின் போது, குறிப்பாக தென்னிந்தியாவில் நுணுக்கமான தங்க எம்பிராய்டரி வேலைப்பாடுகள் கொண்ட பிரபல மணமகள் உடையான கசவு புடவை வாங்கப்படுவதும் அதிகரித்துவருகிறது.
தங்கமானது ராசியான நிறத்தைக் கொண்டிருப்பதால், தங்கத்தில் மூலகங்கள், மணப்பெண் உடைகளில் கூட பயன்படுத்தப்படுகிறது. திருமண உடைகளில் படைப்புத்திறன் மிளிர்கிறது; மணப்பெண் உடைகளில், குறிப்பாக, லெஹெங்கா மற்றும் புடவைகளில், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தங்க நூல்களால் உருவாக்கப்பட்ட அழகிய பேட்டர்ன்கள் மற்றும் டிசைன்களை நம்மால் பொதுவாக காணமுடிகிறது.
உங்களிடம் எவ்வளவு சொத்து உள்ளது என்பது ஒரு பொருட்டே அல்ல – ஒரு நபர், குறைந்தபட்சம் அவரது பொருளாதார அந்தஸ்திற்கு ஏற்றவாறு தங்கம் வைத்திருப்பது ஒரு கோட்பாடாக உள்ளது. தங்களின் செல்வச் செழிப்பு மற்றும் வளமையை வெளிப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக மக்கள் திருமண நிகழ்ச்சிகளை பயன்படுத்துகின்றனர். ஆக, இந்தியத் திருமணங்களில் ஒருவர் அணிந்திருக்கும் தங்கம் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது.
மேலை நாடுகளில் கருப்பு நிறம் போல இந்தியாவில் தங்கமானது, அனைத்துத் தருணங்களுக்கும் பொருத்தமானது.