Published: 06 செப் 2017
உலகின் தங்க நகரங்கள்
மிகவும் பிரபலமான தங்க நகரம் எல் டொராடோ (பொன்னுலகம்). பல்வேறு ஆண்டுகளாக, இலக்கியத்தின் மீது நூற்றுக்கணக்கான வரலாற்றாசிரியர்கள் ஆராய்ச்சி செய்து இதன் பின் உள்ள கதை என்ன என்று கண்டுபிடிக்க முனைந்திருக்கிறார்கள். தங்க நகரம், அல்லது தங்கத்தின் நகரம் என்ற பெயருடன் உலகில் பல்வேறு நகரங்கள் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா? இதன் பின் உள்ள கதைகளை நாம் காண்பதற்கு முன்பு, நீங்களே ஒரு தங்க நகரத்தில் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் என்று நீங்கள் கண்டறிவீர்கள்!
-
ஜோகன்னஸ்பெர்க், தென் ஆப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பெர்க், இகோலி என்று அழைக்கப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? இகோலி என்றால் தங்கத்தின் நகரம் என்று ஜூலு (Zulu) மொழியில் பொருள். தங்க சுரங்க நகரமாக இந்த நகரம் தோன்றியதால் இந்த நகரம் அவ்வாறு அழைக்கப்படுகிறது. தங்க வர்த்தகம் அதிக அளவில் இங்கு நடைபெறுகிறது.
-
துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
தங்கத்திற்கான மாபெரும் கடைத்தெரு இலக்கு துபாய்தான். கோல் சோக் என்று பிரபலமாக அழைக்கப்படும் இடத்தில் ஆயிரக்கணக்கான பயணிகளும் குடிமக்களும் தங்கத்தின் பல வடிவங்களையும் கண்டு வாங்குகின்றனர். இந்த தங்க சௌக்கில் 300 சில்லறை வியாபாரிகளுக்கும் மேம்பட்டோர் உள்ளனர். இங்கு எந்த நேரத்திலும் 10 டன்கள் தங்கம் உள்ளது என்று மதிப்பிடப்பட்டது. உலகளாவிய தங்க வர்த்தகத்திற்கு பெரும் பங்காற்றுகிறது துபாய். 2016ஆம் ஆண்டு தங்கத்திற்கான தேவை ஐக்கியஅரபு அமீரகத்தில் 49 டன்களாக உயர்ந்துள்ளது
-
காஞ்சிபுரம், இந்தியா
தமிழ் இலக்கியத்தின் படி காஞ்சி என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் தமிழகத்தில் உள்ள நகரம். காஞ்சிபுரம் என்றால் தங்கத்தின் நகரம் என்று பொருள். தனித்துவமான காஞ்சிபுரம் பட்டு புடவைகளுக்கு இந்த நகரம் பெயர்பெற்றது. இவற்றின் தனித்துவம் என்ன? காஞ்சிபுரம் புடவைகளில் நீங்கள் காணும் தங்கம் அசல் தங்கம். இனிமையான ஜரிகை வேலைப்பாடுக்காக தங்க நூல்களைப் பயன்படுத்தி இந்த புடவைகள் நெய்யப்படுகின்றன. இப்படித்தான் நீங்கள் காஞ்சிபுரம் புடவையைக் கண்டறிய வேண்டும். ஒரு புடவையை சோதித்தால் அதன் உடலும் கரையும் வேறு துண்டுகளாக இருக்கவேண்டும. அவை ஒன்றாக நெய்யப்பட வேண்டும். அப்படியென்றால் நீங்கள் வாங்கியது அசல் காஞ்சிபுரம் புடவைதான் என்று நீங்கள் உறுதிப்படுத்த முடியும்.
-
அமிர்தரஸ், இந்தியா
இந்தியாவின் பஞ்சாபில் உள்ள ஒரு நகரம் அமிர்தசரஸ். அது இந்தியாவின் தங்க நகரம் என்று அறியப்படுகிறது. இங்கு சீக்கியர்களின் புனித ஸ்தலமான பொற்கோவில் உள்ளது. 90களில் இந்தக் கோவில் 500 கிலோகிராம் எடை கொண்ட 24 காரட் சுத்த தங்கத்தினால் ஆனது என்று உங்களுக்குத் தெரியுமா?
தொடர்புடையது: 7 Amazing facts about the Golden Temple
-
ஜெரூசலம், இஸ்ரேல்
ஜெரூசலம் தங்க நகரம் என்று அழைக்கப்படுகிறது, குறிப்பாக பாடல்களில். மிகவும் பழமையான இஸ்லாமிய நினைவுச் சின்னமான டோம் ஆஃப் தி ராக்('Dome of the Rock') அங்கு உள்ளதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. அசல் தங்கத்தில் கட்டப்பட்ட இந்த வழிபாட்டுதளத்தின் மாடத்தில் உள்ள தங்கம் தாமிரத்தாலும் அலுமினியத்தாலும் மூடப்பட்டிருந்தது. பின்னர் தங்க இலைகளால் மூடப்பட்டது.
-
பல்லாரட் மற்றும் பென்டிகோ, ஆஸ்திரேலியா
பல்லாரட் மற்றும் பென்டிகோ ஆகிய நகரங்கள் ஆஸ்திரேலியாவின் தங்க நகரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 1800களில் அனுபவித்த தங்க ஓட்டத்திற்குப் பிறகு அவை கொண்டு வந்த பணியால் இந்தப் பெயர் ஏற்பட்டது. தங்க ஓட்டம் என்பது, எந்த இடத்திலாவது தங்க வயல் கண்டுபிடிக்கப்பட்டால் அங்குள்ள தங்கத்தை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்வதாகும். 1851ஆம் ஆண்டில், பல்லாரட்டில் உள்ள தங்க வயல்களை ஜேம்ஸ் ரீகன் (James Regan) என்பவர் கண்டறிந்தார். அவர் அவரது நண்பரின் வீட்டிற்குப் புறப்பட்டபோது சற்று வயல்வெளியைக் கண்டு செல்லலாம் என்று நினைத்தார். இப்படித்தான் பல்லாரட்டில் தங்க ஓட்டம் துவங்கியது. 1853ஆம் ஆண்டு பல்லாரட்டில் 9000 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. பல்லாரட்டில் 1856ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்ட்ட தங்கத் துண்டு குறித்த படம் இங்கே.
-
விசென்சா, இத்தாலி
வட கிழக்கு இத்தாலியில் உள்ள மாநகரமான விசென்சாவிற்கும் தங்க நகரம் என்று பெயர். பொற்கொல்லர்களின் உலகத் தலைநகரம் என்றும் விசென்சா அழைக்கப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில் இத்தாலியில் உள்ள மொத்த தங்கத்தில் ஐந்தில் ஒரு பங்கு இங்கு உற்பத்தியாகிறது. உலகின் மிகப் பிரபலமான தங்க நகரங்களுள் இதுவும் ஒன்று. இந்த மாணிக்கங்களைக் காண இவற்றை உங்கள் பயணப்பட்டியலில் வைத்துக் கொள்ளவும். தங்கத்தின் வரலாற்று பெருமை குறித்து மேலும் அறிந்து கொள்ளவும்.
இந்த தங்க நகரங்களை உங்கள் பட்டியலில் வைத்துகொண்டு காலம் செல்லச் செல்ல தங்கத்தை அகழ்வாராய்ச்சி செய்யவும்!