Published: 01 செப் 2017
ஸ்ரீ பூர்ணத்ராயீசர் கோவிலின் தங்க நுழைவாயில்
முன்னாள் கொச்சின் ராஜ்ஜியத்தின் எட்டு ராஜாங்க கோவில்களில் புகழ்பெற்ற பழமையான கோவிலான ஸ்ரீபூர்ணத்ராயீசர் கோவிலும் ஒன்றாகும். கேரளாவின் தலைநகரான கொச்சியின் புறநகர் பகுதியில் உள்ள திரிபுனிதுராவில் விஷ்ணு பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த கோவில், 5,000 ஆண்டுகளாக வலுவாக உள்ளது. இங்கே விஷ்ணு பகவான் சந்தனகோபால மூர்த்தி வடிவில் வடிக்கப்பட்டுள்ளார், அதற்கு "குழந்தைகளின் மீட்பர்" என்று அர்த்தமாகும். விஷ்ணுவின் தனித்துவமான பெயரான "பூர்ணத்ராயீசர்" என்பது மூன்று சொற்களின் கலவையாகும், அதாவது ‘பூர்ண’ என்றால் முழுமையான என்று அர்த்தமாகும், ‘த்ராய்’ என்றால் மூன்று என்று அர்த்தமாகும் மற்றும் ‘ஈஸா’ என்றால் ஈஸ்வரன் அல்லது அறிவின் கடவுள் என்று அர்த்தமாகும்.
1920ஆம் ஆண்டில், இந்தப் பழங்கால கோவில் ஒரு தீ விபத்தால் அழிக்கப்பட்டது; பின்னர் கொச்சி மாநில அரசர், மரத்தின் பயன்பாட்டைக் குறைத்து, உலோகங்களுடன் கோவிலை புனரமைப்பு செய்ய உத்தரவிட்டார். இந்தப் புனித கோவிலை மறுசீரமைப்பதற்கான பணியை பிரதான புகழ்பெற்ற கட்டட வடிவமைப்பாளர் காலஞ்சென்ற ஸ்ரீ ஈச்சர வாரியரிடம் ஒப்படைத்தார். விஷ்ணு பகவானின் தெய்வீக ஒளி மற்றும் பக்தர்களின் பக்தி உணர்வை கருத்தில் கொண்டு ஸ்ரீ வாரியர் அவர்கள், பாரம்பரிய பழமையான கோவிலின் அனுபவத்தை மறுசீரமைக்க கோவிலின் உறுதியான கான்கிரீட் கட்டமைப்பை வடிவமைத்தார். கடவுளின் சொந்த நாடான கேரளாவில், இந்த கான்கிரீட் கோவிலானது அந்த வகையில் முதன்மையான கோவிலாக கருதப்படுகிறது.
இந்தக் கோவிலின் தற்போதைய கட்டமைப்பு என்பது இரண்டு அடுக்கு கோபுரம் (நினைவுச்சின்ன கோபுரம்) ஆகும். கருவறையின் நுழைவாயிலானது திறமையான கலைஞர்களால் நுட்பமாக பொறிக்கப்பட்ட தங்க தகடினால் மூடப்பட்டிருக்கும். கோவிலின் கட்டுமானத்தில் தங்கத்தின் பயன்பாடு என்பது முன்னாள் கொச்சின் சமஸ்தானத்தின் அரச குடும்பத்தை நினைவூட்டுகிறது.
கம்பீரமான மற்றும் பாரம்பரிய கட்டிடக்கலையுடன், இந்த கோவில் பல்வேறு திருவிழாக்களுக்குப் பிரபலமாக உள்ளது. ஸ்ரீபூர்ணத்ராயீசர் கோவிலானது மூசாரி உற்சவம், அத்தசமயம், ஒன்பதாந்தி உற்சவம், விருச்சிக உற்சவம், சங்கர நாராயண விளக்கு, பாரா உற்சவம் மற்றும் உத்திரம் விளக்கு போன்ற புகழ்பெற்ற திருவிழாக்களை நினைவூட்டுகிறது. அனைத்து திருவிழாக்களிலும், விருச்சிகோத்ஸவம் அல்லது விருச்சிக உற்சவம் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அழகிய ஒன்றாகும். இந்த எட்டு நாட்கள் திருவிழாவானது நவம்பர்-டிசம்பர் மாதத்திற்கு இடையில் வரும் மலையாள மாதமான விருச்சிகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில், ஐந்து புனிதமான கோவில் யானைகளானது சிலைகளை சுமந்து செல்வதற்காக ஊர்வலத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த யானைகள் தங்கக் கவசம், மணிகள் மற்றும் கழுத்தணிகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்படும். கூடுதலாக, சடங்குப்படி, நன்கொடையாளர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் ஒரு "தங்க பானை" மேடையில் வைக்கப்படுகிறது.
கோவில் கட்டுமானத்திலும், பல்வேறு வடிவங்களிலும் பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் பயன்பாடு என்பது வரலாறு முழுவதும் மஞ்சள் உலோகத்தின் முக்கியத்துவத்தை நிரூபிக்கிறது. தங்கத்துடன் கூடிய பாரம்பரிய சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவை இன்றும்கூட தொடர்கின்றன, இது மஞ்சள் உலோகத்தின் மீது இந்தியாவின் நேசத்தையும், மோகத்தையும் வெளிப்படுத்துகிறது.