Published: 27 செப் 2017
முகலாயர்களின் பொற்காலம்
பழங்கால சாம்ராஜ்யங்கள் குறித்து எப்போதாவது நாம் நினைக்கும் போது, அதன் பெருமை மற்றும் பிரமாண்டம் ஆகியவை நம் மனதில் தோன்றுகிறது. நமது மூதாதையர்கள் வாழ்ந்த அரண்மனைகள் என்பது, அந்தக் காலத்தின் அரசர்கள் மற்றும் மகாராணிகள் ஆகியோரின் வாழ்க்கை முறைகளின் சாட்சியாக இருக்கின்றன. படிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டக்கூடிய அப்படியொரு சகாப்தமாக முகலாய காலம் இருக்கின்றது.
முகலாயர்கள் தங்களை நகைகளால் அலங்கரித்துக்கொள்ள விரும்பினர். தலையில் இருந்து கால் வரை, அரசர்கள், ராணிகள் மற்றும் அரச குடும்பங்களில் உள்ள மற்றவர்கள் ஆகியோர் தங்கம் மற்றும் விலையுயர்ந்த நகைகளை அணிந்திருந்தனர். எனினும், என்ன வகையான தங்க நகைகள் முகலாயர்களின் பொக்கிஷத்தில் இருந்தது? முகலாயர்கள், அவர்களுக்கு முன்பிருந்த ஆட்சியாளர்களால் ஈர்க்கப்பட்டனர். அதனாலேயே, அவர்களின் நகைகள் இஸ்லாமிய மற்றும் இந்து மதக் கலை வடிவங்களின் கலவையாக இருந்தன.
சரி, விலைமதிப்பற்ற ஆபரணங்களால் வடிவமைக்கப்பட்ட அவர்களின் கலைப்படைப்புகள் குறித்து முதலில் பார்க்கலாம்:
வடிவமைப்புகள் மற்றும் முறைகள்:
-
பூக்கள் மற்றும் விலங்குகளின் வடிவமைப்புகள்
இந்த வடிவமைப்புகளில் பெரும்பாலும் வடிவியல் வடிவங்கள், விலங்கு மற்றும் மலர் வடிவங்கள் ஆகியவை அடங்கும், மனித உருவங்களை சித்தரிப்பது என்பது இஸ்லாமியத்தில் தடைசெய்யப்பட்டதாகும்
-
குந்தன் முறை
குந்தன் உத்தியின் துல்லியத்தை இந்த அரசர்களின் காலகட்டத்தில் இருந்த பொற்கொல்லர்கள் அடைந்தனர். இந்த முறையில், நகைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தங்கமானது அறை வெப்பநிலையில் பற்றவைக்கப்படுகிறது.
-
கற்களைப் பதித்தல்
தங்கத்துடன் கற்களைப் பதிப்பது என்பது முகலாயர்களால் நிறுவப்பட்ட மற்றொரு முறையாகும்.
இந்த முறைகள் மூலம், பல்வேறு நேர்த்தியான ஆபரணங்கள் வடிவமைக்கப்பட்டன, அவை இன்றும் ஆராதிக்கப்படுகின்றன:
-
காதணிகள், தோடுகள் மற்றும் காதணி சரங்கள்
ஒரு பிறையின் மேல் உள்ள ஒரு சிறிய தண்டு கொண்டுள்ள காதணி என்பது முகலாய காதணிகளுக்கான ஒரு உதாரணம் ஆகும். இந்தப் பிறையில் இருந்து ஒரு மீன் மற்றும் ஒரு கொத்தான முத்துக்கள் ஆகியவை தொங்கிக்கொண்டிருக்கும், இது முகலாய நகைகளில் வழக்கமான அம்சமாக மாறியது.
-
காலணிகள்
அரசக் குடும்பத்தின் காலணிகள் தங்க நூல்கள் மூலம் எம்ப்ராய்ட்டரி செய்யப்பட்டன. இந்த காலணிகள் 'மோஜ்டி' என்று குறிப்பிடப்பட்டன.
-
மூக்கு வளையங்கள்
மூக்கு வளையங்கள் அணியும் போக்கைத் தொடங்கியவர்கள் முகலாயப் பெண்கள் ஆவர். இந்த பாணி, நவீன இந்தியாவிலும் தொடர்கின்ற ஒரு பாணியாகும். இந்தத் தங்க வளையங்களானது, சிறிய ஊசி போன்றவற்றில் இருந்து பெரிய வட்ட வடிவ வளையங்கள் வரை அளவிலும் வண்ணத்திலும் மாறுபட்டன. இந்த வளையங்கள் நீண்ட சரங்கள் மற்றும் சிறிய கொக்கிகள் மூலம் தலைமுடியுடன் முறுக்கிவிடப்பட்டன.
-
மோதிரங்கள் மற்றும் கை ஆபரணங்கள்
பெரிய மற்றும் ஆடம்பரமான மோதிரங்களை முகலாய வம்சத்தின் பேரரசர்கள் அணிந்திருந்தனர். அவை தூய தங்கம் அல்லது எனாமல் செய்யப்பட்ட தங்கம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டன. அவை வட்ட வடிவ மற்றும் சதுர மையத்திலான துண்டுகளைக் கொண்டிருந்தன. இந்த பெரிய மோதிரங்களில் சில, இரண்டு அல்லது மூன்று விரல்களைக் மூடிக்கொண்டிருந்தன. பெண்கள் அணிந்திருந்த சில மோதிரங்களில், பிரதிபலிக்கும் வகையிலான அழகான சிறிய கண்ணாடிகள் இருந்தன. பெண்கள் அணிந்திருந்த மற்ற கை ஆபரணங்கள், பெண்களின் கை முழுவதையும் மூடியிருந்தது. மோதிரங்களில் இருந்து வளையல்கள் வரை நீண்டிருந்த அந்த ஆபரணங்கள் "ஹாத்ஃபூல்" (கை-மலர்கள்) என்று அறியப்பட்டன.
-
கழுத்தணிகள் மற்றும் சங்கிலிகள்
கழுத்து ஆபரணங்களை ஆண்களும் பெண்களும் அணிந்திருந்தனர். இவை கனமான நெக்லஸ்களிலிருந்து இலேசான சங்கிலிகள் வரை இருந்தன, அவை நீளமானதாகவோ அல்லது குறுகியதாகவோ இருந்தன. எந்த அளவில் இருந்தாலும், இவை அணிந்திருப்பவருக்கு ஒரு நேர்த்தியான மற்றும் கம்பீரமான தோற்றத்தை கொடுத்தது.
-
வளையல்கள் மற்றும் பிரேஸ்லெட்டுகள்
முகலாய தங்க வளையல்களில் இருந்த கல் அமைப்பானது, அவற்றுக்கு ஒரு தனித்துவமான மற்றும் கண்ணைக் கவரும் வடிவத்தைக் கொடுத்தது. இந்த பிரேஸ்லெட்டுகள் ஒவ்வொன்றிலும் முனையில் பிடிகள் இருந்தன. இந்த மணிக்கட்டு ஆபரணமானது எனாமல் செய்யப்பட்ட தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது, மேலும் அது நேர்த்தியான மலர் வடிவமைப்புகளால் அழகாக்கப்பட்டிருந்தது.
இவை மட்டுமின்றி, மற்ற வகை அலங்காரம் மற்றும் ஆபரணங்களிலும் தங்கம் பயன்படுத்தப்பட்டது. அவை பின்வருமாறு:
- கிரீடங்கள்
- ஒட்டியாணம் மற்றும் இடுப்பு சங்கிலிகள்
- தலைப்பாகை ஆபரணங்கள் மற்றும் பிற தலையில் அணியும் நகைகள்
- கைப்பட்டைகள்
இந்த அரசகுல ஆபரணங்கள் என்பது இந்தியாவின் அரசகுல வரலாற்றின் சுவைகள் மற்றும் மரபுகள் குறித்து தெரிந்துகொள்ளவும், தங்கம் அங்கு கொண்டிருந்த முக்கிய பங்கையும் தெரிந்து கொள்ள உதவுகிறது.