Published: 04 செப் 2017
பத்மநாபஸ்வாமி கோவிலின் தங்க பொக்கிஷங்கள்
பண்டைய பொக்கிஷங்களைத் தேடி ஏழு கடல்களை சிலர் கடந்து செல்லும் நிலை ஒரு புறமிருக்க, இந்தியாவிலோ அதன் சிறிய புதையல்கள் பெரும்பாலும் அடைய முடியாத இடத்தில் பூமிக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன.
திருவனந்தபுரத்தில் உள்ள பழங்காலத்தை சேர்ந்த ஸ்ரீ பத்மநாபஸ்வாமி கோவில், பல ஆண்டுகளாக அழகான பொக்கிஷங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக புராணக்கதை கூறுகிறது. கடந்த காலத்தில், இந்திய அரசர்கள் ஒரு விழாவை மேற்கொண்டனர், அதில் உள்ளூர் இளவரசர்கள் பருவ வயதை அடையும்பொழுது அவர்களை எடையிட்டு, அவர்கள் எடைக்கு நிகரான தங்கத்தை கோவிலுக்கு தானமாக அளித்தனர். இந்த அளவிட முடியாத மற்றும் பாதுகாக்கப்படாத செல்வங்களானது, இன்னும் அடித்தளத்தில் உள்ளது என்று நம்பப்படுகிறது.
2011-ல், ஒரு உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஆறு கோவில்களின் கஜானாக்கள் திறக்கப்பட்டது. இந்த பழங்கால அறைகளில், 12 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வரலாற்றின் பல்வேறு காலப்பகுதிகளில் சேகரிக்கப்பட்ட பொக்கிஷங்கள் காணப்பட்டன. மகாவிஷ்ணுவின் தங்கச் சிலை மற்றும் 30 கிலோகிராம் வரை எடையுள்ள ஒரு தங்க 'அங்கி' ஆகியவை இந்தப் பொக்கிஷங்களில் மிகவும் விரும்பத்தக்கது ஆகும்.
மகாவிஷ்ணுவின் தங்கச் சிலை என்பது 'உத்சவ விக்கிரகத்தின்' பிரதிபலிப்பு, அல்லது திருவிழாக்கள் மற்றும் விசேஷ சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் சிலை வடிவம் என்று நம்பப்படுகிறது. இது ஒரு அடி உயரத்தில் உள்ளது. தூய தங்கத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மற்றொரு சிலை, மற்றும் அற்புதமான மாணிக்கக் கற்கள், மரகதம் மற்றும் பிற விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட இரண்டு தங்க தேங்காய் ஓடுகள் ஆகியவை இந்தக் கோவிலினுள் கண்டுபிடிக்கப்பட்ட மற்ற பொக்கிஷங்கள் ஆகும். முக்கிய தெய்வத்தை அலங்கரிக்கும் ஆபரணமாக பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் ஒரு தங்க 'அங்கி' என்பது 16 பாகங்களாகக் கண்டறியப்பட்டது.
முக்கிய தெய்வத்தை அலங்கரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் வெவ்வேறு அரசாங்கங்களால் வெளியிடப்பட்ட பல்வேறு நாணயங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் ஆகியவை கண்டறியப்பட்டன. இந்த ஆபரணங்கள் மற்றும் நாணயங்கள் ஆகியவற்றின் தேதிகளானது, பண்டைய காலங்களிலிருந்து சமீபமாக 1914 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதி வரை இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.
சுரங்கம் ஏ என்பது, கி.மு 200ஆம் ஆண்டுக்கு முற்பட்ட சுமார் 800 கிலோகிராம் தங்க நாணயங்களின் குவியல்களைக் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு நாணயத்தின் விலையும் ரூபாய் 2.70 கோடி (0.5 மில்லியன் அமெரிக்க டாலர்) அளவில் இருப்பதாகவும் இந்தியாவின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆடிட்டர்-ஜெனரல் வினோத் ராய் கூறியுள்ளார்.
ஸ்ரீ பத்மநாபஸ்வாமி கோவிலில் இன்னமும் திறக்கப்படாத சுரங்கங்கள் உள்ளன, மேலும் பல கண்டுபிடிக்கப்படுவதற்காகக் காத்திருக்கின்றன. ஆயினும், இந்தக் கோவிலானது விலைமதிக்க முடியாததாக இருக்கிறது.