Published: 01 செப் 2017
தங்க நாணயங்கள் வாங்குவதற்கான ஒரு வழிகாட்டி
பொருட்களை வாங்குவது என்பது பேரானந்தம் மிக்க நடவடிக்கை. நீங்கள் பொருட்கள் வாங்கும்போது எற்படும் இந்த பேரானந்தத்திற்கு காரணம் டோபோமைன் என்ற நரம்புசெல் கடத்தி (neurotransmitter) . இது மூளையின் ஆனந்த மையத்தைக் கட்டுப்படுத்துகிறது. தங்க நாணயங்கள் போன்ற மதிப்பு மிக்க பொருட்களை வாங்கம்போது, சரியான வாங்கும் முடிவை இந்த இரசாயணம் பாதிக்காத அளவிற்கு பார்த்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் ஏன் தங்க நாணயங்களை வாங்க வேண்டும்?
- தங்க நாணயங்கள் நல்ல முதலீடு. முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் தங்கம் இருக்க வேண்டும் என்று முதலீட்டு நிபுணர்கள் கருதுகிறார்கள்
- தங்கம் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருகிறது என்றும் நம்பப்படுகிறது. திருமணங்கள் போன்ற புதிய துவக்கங்களுக்கும் இந்திய பண்டிகைகளுக்கும் பரிசளிக்க எற்றவை தங்க நாணயங்கள். இவற்றை பரிசாக அளிக்கும்போது இதன் மதிப்பு இரட்டிப்பாகும்.
- இந்திய பண்டிகைகளான அக்ஷய திரிதியை, தந்தேராஸ், தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகளின் அங்கமாகியுள்ளது தங்க நாணயங்கள். மத நம்பிகைகள் சார்ந்த பண்டிகைகளில் தங்க நகைகள் அணிவது வழக்கம் என்று நம்பப்படுகிறது.
- மதிப்பு மிக்க தொகுப்புகளாக தங்க நாணயங்கள் விளங்குகின்றன. நுண்ணிய வேலைப்பாட்டுடன் அளவிற்குட்பட்ட பதிவுகளில் இவை கிடைக்கின்றன. வரலாற்று ரீதியான கலைப்பொருட்களாக இவை உள்ளன.
தொடர்புடையது: தங்க நகை வாங்குவதற்கான சிறந்த நாட்கள்
கார்ப்பரேட் உலகம் தங்க நாணயங்களைப் பயன்படுத்துகிறது. பணி ஓய்வு விழாவிற்கான எற்ற பரிசாக இவை கருதப்படுகின்றன. பாராட்டின் ஒட்டுமொத்த வடிவமாக இவை நடத்தப்படுகின்றன.
தேசத்தின் பெருமிதத்தின் சின்னமாகக் கருதப்படும் இந்திய தங்க நாணயத்தை Indian Gold Coin (IGC), நீங்கள் சொந்தமாகப் பெற்றிருக்கலாம். இதுதான் இந்தியாவின் முதல் தேசிய தங்க நாணயம். IGC வாங்குவதற்கு உங்களுக்கு மிகவும் அருகில் உள்ள சில்லரை வியாபாரியைத் தொடர்பு கொள்ள இங்கே க்ளிக் செய்யவும், click here.
தங்க நாணயங்களை எவ்வாறு வாங்குவது?
ஒரு வங்கியிலிருந்தோ அல்லது தங்க நகைக்காரரிடமிருந்தோ நீங்கள் தங்க நாணயங்களை வாங்கலாம். மாற்றாக, நீங்கள் டிஜிட்டல் வழியில் செல்லலாம்.
தங்க நாணயத்தை வாங்கும் முன்பு இந்த விஷயங்களை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்:
வங்கிகளிடமிருந்து வாங்குவது
-
பாதுகாப்பு
பாதுகாப்பான விற்பனையாளர்களாக வங்கிகள் கருதப்படுகின்றன. வங்கிகளிடமிருந்து நீங்கள் இந்திய தங்க நாணயங்களைப் பெறலாம். பிஐஎஸ் தரங்களின்படி இவை ஹால்மார்க் முத்திர பெற்றவை. பழுதில்லாத பொட்டலமிடல் முறையின் மூலம் நவீனமான, போலிக்கு எதிரான, அம்சங்களைக் கொண்டது. நீங்கள் 5 கிராம் அல்லது 10 கிராம் தங்க நாணயங்களை வாங்கலாம். இதில் 24 காரட் தூய்மையும் 999 துல்லியமும் இருக்கும்.
-
விலை
வங்கிகளிடமிருந்து நீங்கள் 10 கிராம் தங்க நாணயம் வாங்க ரூ.31,359 * செலவாகும். உண்மையான இந்திய தங்க நாணயத்தின் விலையை இங்கே )சோதிக்கவும்.
* 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4ஆம் தேதியின்படி.
-
நாணயங்களின் விற்பனை
தங்க நாணயங்களை வங்கிகள் திரும்ப வாங்குவதை இந்திய ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. நீங்கள் வங்கியிடமிருந்து வாங்கிய தங்க நாணயத்தை விற்க விரும்பினால், நீங்கள் ஒரு தங்க நகை வியாபாரியை சந்திக்கலாம். ஆனால் நீங்கள் அந்த தங்க நாணயத்தை தள்ளுபடியில் விற்கக்கூடிய சாத்தியமும் உண்டு.
-
பாதுகாப்பு
நகைக்கடைக்காரர்களிடமிருந்து நீங்கள் பல்வேறு வகையான தங்க நாணயங்களை வாங்குவதை தேர்வு செய்ய முடியும். எனினும் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நாணயங்கள் வாங்குவதை தேர்ந்தெடுக்கவும். இதனால் தூய்மையும் உண்மையும் கிடைக்கும்.தூய்மைக்கான பிஐஎஸ் முத்திரை பதித்த, ஹால்மார்க் தங்கம் 958 சுத்தத்தை உறுதிப்படுத்துகிறது. ஹால்மார்க் முத்திரை பெற்ற நகைகளை விற்பவர்கள் தங்களது நகைகளை பிஐஎஸ் பதிவு பெற்ற ஹால்மார்க் மையங்களில் சோதனை செய்வார்கள். இதில் பிஐஎஸ் ஒப்புதல் பெற்ற சான்றிதழ் வழங்கும் திட்டம் உள்ளது .இந்தத் திட்டத்தின்படி தங்கத்தின் தூய்மையை உறுதி செய்யும் உரிமம் வழங்கப்படும்.
-
விலை
தங்கத்தின் தற்போதைய விலையின்படி(price of gold.* கிராம் தங்க நாணயத்திற்கான விலை ரூ. 31,000-35,000லிருந்து வேறுபடுகிறது. ஒரே நேரத்து பணம் செலுத்துதலையோ (one-time-payment) அல்லது சரிசமமாக்கப்பட்ட மாதாந்திர தவணை [Equated Monthly Instalments (EMI)] முறையையோ, எதனை அந்த நகைக்கடைக்காரர் அளிக்கிறாரோ அதனை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இது நகைக்கடைக்காரருக்கு நகைக்கடைக்காரர் வேறுபடும்.
* 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4ஆம் தேதியின்படி.
-
நாணயங்கள் விற்பனை
நீங்கள் வாங்கிய தங்க நாணயத்தை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீங்கள் நகைக்கடைக்காரரிடம் திரும்ப விற்கலாம். வங்கிகளிடமிருந்து வாங்கிய தங்க நாணயங்களையும் நகைக்கடைக்காரர்கள் வாங்கிக்கொள்வார்கள். நெருக்கடியான தருணங்களில், நகைக்கடைக்காரரிடமிருந்து வாங்கிய தங்க நாணயங்களை நீங்கள் எளிதில் பணமாக மாற்றலாம். ஒரு நாளைக்கு ரூ.10,000 வரை உடனே பெறமுடியும். அதனை எங்கு வாங்கியிருந்தாலும் பரவாயில்லை. எனினும் தங்கத்தை வாங்கும் விலையை விட விற்கும் விலை குறைவாகவே இருக்கும். அதனை விற்பதற்கு முன்பு, அதனைத் திரும்ப வாங்கும் விலை என்ன என்பதை நீங்கள் சோதித்துக் கொள்ள வேண்டும்
மின்னணு மேடைகக்ன் மூலம் நீங்கள் தங்க நாணயங்களை வாங்க முடியும். நீங்கள் வாங்குவதற்கு முன், ஆன்லைன் மூலம் தங்கம் வாங்குவதற்கான இந்த வழிகாட்டி நூலைக் காணவும். guide to buying gold online.
அடிமட்டக் கோடு
தங்க நாணயங்கள் எப்போதுமே அதிக மதிப்பு கொண்டவை. உங்களது முதலீட்டு போர்ட்ஃபோலியோவிற்கு கூடுதல் வசதி சேர்ப்பவை. இந்திய தங்க நாணயங்கள் தங்கத்தின் கெளரவத்ததுடன் பாதுகாப்பையும் நவீன தொழில்நுட்பத்தின் புதுப்பித்தலையும் அளிப்பவை. இதனால் படைப்பின் மதிப்பு பொருளாதார ரீதியாகவும் உணர்வு பூர்வமாகவும் உத்தரவாதம் அளிக்கப்படும்.