Published: 10 செப் 2018
பங்குச் சந்தை வீழ்ச்சி அடையும் போது தங்கம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது
பங்குச் சந்தை வீழ்ச்சி அடையும் போது தங்கத்தின் விலை சரியும் என்பது பொதுவாகக் கருதப்படும் தவறான எண்ணமாகும். உண்மை நிலை அதற்கு எதிர்மாறானது . சந்தை கணிக்க இயலாமல் தாக்கும்போது அதற்கு மாற்றாகவும் சொத்தை பன்முகமாக முதலீடு செய்யவும் தங்கத்தை சிறந்த தேர்வாக முதலீட்டாளர்கள் பார்க்கிறார்கள்.
வரலாற்றை நோக்கினால் சந்தை வீழ்ச்சி அடையும் போது தங்கம் பங்குகளை விட பல மடங்கு சிறப்பானதாகவும் மதிப்பு மிக்கதாகவும் உள்ளது.
தங்கத்திற்கு எதிராக நிஃப்டி
பிப்ரவரி 2008 -2009 இல் சென்செக்ஸ் 38% விழுந்தபோது தங்கம் 24.58 சதவீதம் உயர்ந்தது. குறிப்பாக 2012-13 ம் ஆண்டில் இந்தியாவில் தங்கம் விலை விரைந்து உயர்ந்தபோது பங்குச்சந்தை அட்டவணைகள் (நிஃப்டி) சரிவைச் சந்தித்தன
கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தை ஆய்வு செய்தால் கடந்த பத்தாண்டுகளில் பங்குச்சந்தை அட்டவணைகள்(நிஃப்டி) எவ்வாறு செயல்படுகிறதோ அதற்கு நெருக்கமாக தங்கம் செயல்படுகிறது என்பதை நீங்கள் கவனிக்கலாம்.
Source
தங்கத்திற்கு எதிராக எஸ் &பி500
தங்கம் மற்றும் 500 பெருநிறுவனங்கள் சந்தை நிலைமை மோசமாகும் போது செயல்படுவதை ஒப்பிட்டால் கடந்த 1976 லிருந்து 7 அல்லது 8 முறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளன, அப்போதெல்லாம் தங்க விலை பங்குகளை விட உயர்ந்தே இருந்தது.சந்தை அட்டவணை
2008 பொருளாதார நெருக்கடி தாக்கத்தால் தங்க விலை வீழத் துவங்கிய காலத்தில் விலை மீண்டும் உயர்ந்தது அந்த வருட இறுதியில் 5.5 சதவீதம் உயர்ந்தது, பெரு நிறுவனங்கள் தொடர்ந்து சரிவில் இருந்தன. அந்த 18 மாத காலத்தில் பங்குச் சந்தை விற்பனை வாய்ப்புகள் 25 சதவீதம் உயர்ந்தது.
நவீன வரலாற்றில் மிகப்பெரிய காளை நிலைச் சந்தைக்குப் பிறகு தங்கம் மட்டுமே குறிப்பிடத்தக்க விற்பனை வாய்ப்பை கொண்டிருந்தது (1986 களின் துவக்கத்தில்- 46% ). 1970க்குப் பின் பத்தாண்டுகளில் அதன் குறைந்த புள்ளியிலிருந்து 2300% தங்கம் விலை உயர்வை சந்தித்தது.
ஒட்டுமொத்த வரலாற்றிலிருந்து கிடைக்கும் செய்தி என்னவெனில் பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும் போது தங்கத்தின் விலை வீழ்ச்சி பொது மக்கள் எதிர்பார்ப்பை விட மிகவும் குறைவாக இருக்கும். எனவே, பொருளாதார நிலைப்புத்தன்மை மற்றும் வளர்ச்சியின் போது பங்குகள் நல்ல பயனைத் தருகின்றன. அதேபோல பொருளாதார நெருக்கடி மற்றும் சரிவின் போது தங்கம் நல்ல பலனைத் தருகின்றது. பங்குச்சந்தை விழும்போது பதற்றம் உயர்கிறது, முதலீட்டாளர்கள் பாதுகாப்புத் தேடுகின்றனர் ,தங்கம் மட்டுமே எல்லாவற்றையும் விட பாதுகாப்பாக உள்ளது.
பிப்ரவரி 2018 பங்குச்சந்தை முறிவு
பிப்ரவரி 5 2018 திங்களன்று ‘வோல்மகிடன்’ எனப்படும் மிகப்பெரிய தாக்குதலின் போது 500 பெரும் நிறுமங்களின் 113.19 புள்ளிகள் விழுந்தன. இதுவே வரலாற்றில் ஒரே நாளில் நிகழ்ந்த அதிக புள்ளிகள் வீழ்ச்சியாகும் . அந்த 24 மணிநேர விற்பனையில் மொத்த இழப்பு 124.2 புள்ளிகளாகும். பிரச்சனையின் மற்றொரு கூடுதலாக மூலதன இயக்கத்தில் பிட்காயின் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அதன் மதிப்பு 6000 அமெரிக்க டாலரைத் தொட்டது.
பிப்ரவரி 6 அன்று மும்பை பங்குச் சந்தையானது துவக்க வர்த்தகத்தில் ஆயிரத்து 200 புள்ளிகள் சரிந்து கடைசியில் 168 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை 10 ஆயிரத்து 498 புள்ளிகளில் முடிந்தது.
ஆரம்ப காலத்தில் விற்பனை வாய்ப்புகளில் தங்க விலையில் பெரிய மாற்றம் இல்லை, ஆனால் பங்கு விலைகள் உயரும் போது தங்கம் முன்னேறியது. குறுகிய கால அளவில் சிறந்த கருவூலமாக மாறியது. மீண்டும் பங்குச்சந்தை சிறப்பாகும்போது குறுகிய காலமே நீடித்தது. டவ் ஜோன்ஸ் இன் தொழில்சராசரி 4.6% விழும்போது , முந்தைய மணித்துளிகளிலேயே ஆசியப் பங்குகள் பிப்ரவரி 6 ல் விழுந்தன. உலகளாவிய பங்கு அட்டவணைகள் (stock indices) கடைசி நேரத்தில் சிறிது ஏற்றம் கண்டன. மீண்டும் பிப்ரவரி 8 ,9 ல் சந்தை உயர்வுடன் ஆரம்பித்து விழுந்தது. 12 பிப்ரவரி திங்கள் அன்று திங்களன்று டவ் ஜோன்ஸ் தனது வார இழப்பில் பாதி அளவை மீண்டும் பெற்றது. ஐரோப்பிய பங்குகள் 30 சதவிகிதம் உயர்ந்தன, ஆசிய பங்குகள் தனது இழப்பில் பெருமளவை இக்காலத்தில் சரி கட்டியது.
அடிப்படையில் தங்கம் வீழ்ந்த போது பிப்ரவரி 2 முதல் 12 வரை 0.8 சதவீத இழப்பு ஏற்பட்டது. அது கருவூலங்களில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டது. இதன் பொருள் என்னவெனில் நிதிசொத்துக்களில் (portfolio) இழப்பை குறைத்து, சந்தை மீண்டு எழுந்த போது முதலீட்டாளர்களுக்கு மேலும் எளிதாக பணமாக மாற்றத்தக்கதானது, ஐரோப்பிய நாணயங்கள் அமெரிக்க டாலருக்கு எதிராக பலவீனமாகிய இந்த வாரத்தில் தங்க விலை தொடர்ச்சியாக 0.9% யூரோவிலும் 1.8% ஸ்டெர்லிங்கிலும் அந்த பத்து நாட்களில் நிச்சயமாக உயர்ந்தது.
தங்கம் அமைப்பு ரீதியான ஆபத்திற்கு எதிரான அரண்
ஒரு புகலிடமாக, தங்கம் முதல்தரமான பலன்களை தருகிறது. தங்கத்திற்கும் பங்குகளுக்குமான உறவின் பொருள் சந்தை மீண்டெழும் போது தங்கத்தின் முன்னிலை வலுவாக உள்ளது. தங்கம் விலை மீண்டும் உயர்கிறது, வரலாற்றுப் பாணிக்கு இணையாக பிப்ரவரி 5 ஆம் தேதி விற்பனையில் தங்கத்தின் தொடர்பு பங்குச் சந்தை விலைகள் வீழ்ந்ததால் மேலும் மேலும் எதிர்மறையாக மாறியது.
இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. சந்தை சீர்த்திருத்தங்களுக்குப் பிறகு தங்கம் ஒரு திறன் வாய்ந்த காப்பரணாக இருக்கிறது, ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளை பாதிக்கிறது அல்லது நீண்ட நாட்களுக்கு நீடிக்கிறது. 2001 இல் ‘டாட் காம் பபுள்’ வெடித்த போது தங்கத்தின் உடனடி எதிர்வினைக்கு அபாயங்கள் போதுமானதாக இல்லை. அமெரிக்க எல்லைப் பொருளாதாரம் மந்தமடைந்த போது தங்கத்தின் விலைகள் குறிப்பிடத் தகுந்த அளவு பதிலளித்தன. அதே போல, ஐரோப்பாவுக்கு வெளியிலிருக்கும் முதலீட்டாளர்கள் 2015 கிரேக்க செயலற்ற நிலையினால் ஏற்படவிருந்த மறைமுக பொருளாதார பாதிப்பிற்கான சாத்தியங்களைக் குறைத்தனர்.
முதலீட்டாளர்களுக்கான யுக்தி
(பின்வரும் உரை விளக்கப்படும்)
தங்கம் சொத்துக்களில் ஆறு முக்கிய பங்குகளை ஆற்றுகிறது.
- நீண்ட கால முதலீட்டு லாபங்களை அளிக்கிறது
- பல்வகைப்பட்ட வாய்ப்புகளை வழங்குகிறது
- சந்தை விழும்போது எளிதில் பணமாக மாற்றத்தக்க வாய்ப்புகளை அளிக்கிறது
- உயர் அபாய சீரமைக்கப்பட்ட வருவாயின் மூலம் சொத்துக்களின் செயலாற்றலை மேம்படுத்துகிறது.
- வரலாற்று ரீதியில் மிகச் சிறப்பாக செயல்படும் ரொக்க மற்றும் பணச் சந்தை நிதிகளைக் கொண்டிருக்கிறது.
- ரியல் எஸ்டேட் மதிப்பும் கூட பாதி நேரம் தங்கத்தையே பின்தொடர்கின்றன.
அதீத ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் பங்குகளின் செயல்பாடுகளைப் பொருட்படுத்தாமல், தங்கம் வகிக்கும் பல்வேறு பாத்திரங்களை பார்க்கும் போது உங்களது முதலீட்டுத் தொகையில் கணிசமான அளவு தங்கத்தில் முதலீடு செய்வது சாமர்த்தியமானதாகும்.
கட்டுரை ஆதாரம்:
கோல்ட் டாட் ஓஆர்ஜி- ஆய்வறிக்கை : சந்தை நெருக்கடி விற்பனை உயர்வு – தங்கத்திற்கான வேற்றுமை