Published: 12 செப் 2017

உலகெங்கிலும் இருந்து தங்கம் எவ்வாறு பத்மநாபஸ்வாமி கோவிலுக்கு வந்தது

இந்தியாவின் மிகச்சிறந்த சாம்ராஜ்யத்தின் வரலாறு மற்றும் செல்வச்செழிப்புமிக்க கலாச்சாரங்களின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, கடல் வாணிபம் செய்ததில் இந்தியா ஒரு புகழ்பெற்ற நாடு என்பதை எளிதில் மறந்துவிடலாம். 7,500-க்கும் அதிகமான கிலோமீட்டர் அளவுக்கு கடலோரப் பகுதியுடன், இந்தியா ஒரு வலுவான வர்த்தக அமைப்புமுறையைக் கொண்டிருந்தது, இங்கே பெருமளவிலான அபாயங்களை மேற்கொள்ளும் பெருங்கடல் வணிகர்கள் நிறைந்திருந்தனர்.

ஐரோப்பியர்களும், மேற்கில் இருந்த பிற சமூகத்தினர்களும் இந்தியாவின் வளமான வாசனைப்பொருட்கள், பருத்தி ஆடைகள் மற்றும் நேர்த்தியான ஆபரணங்கள் ஆகியவற்றின் மீது பேராவல் கொண்டிருந்தனர் – இதன்மூலம், மேற்கத்திய ஆடம்பரப் பொருட்களுக்காக தங்கள் பொருட்களை பரிமாற்றிக்கொள்வதற்கு இந்தியர்கள் குறைவான ஆர்வம் காட்டியதாகத் தெரிகிறது. கணக்கு வழக்குகளை சரிசெய்வதற்காக, கணக்கில் உள்ள வித்தியாசத்தை ஈடுகட்ட மேற்கத்திய வர்த்தகர்கள் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஸ்ரீ பத்மநாபஸ்வாமி கோவிலின் சுரங்கங்கள் 2011-ல் திறக்கப்பட்டபோது - இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமைவாய்ந்த 100,000 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் இதர ஆபரணங்கள் கண்டறியப்பட்டன.

சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய ரோமானியப் பேரரசின் தங்க நாணயங்களின் குவியல்; வெனிஸ் ஒரு பெரிய கடல் சக்தியாக இருந்தபோது, 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டுகளின் வெனிஸ்-ஐ சேர்ந்த தங்க நாணயங்கள்; 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியத்தின் புகழ்பெற்ற காலத்தின் போர்த்துகீசிய நாணயம்; 17 ஆம் நூற்றாண்டின் டச்சு கிழக்கு இந்தியக் கம்பெனி நாணயங்கள்; 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தின் நெப்போலியனின் தங்க நாணயங்கள்; மேலும் பல ஆகியவை, குர்சரன் தாஸ் அறிக்கையின்படி கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்களில் சில ஆகும். கேரி கீத் யங் என்பவர் எழுதிய புத்தகமான, ரோமின் கிழக்கு வர்த்தகம்: சர்வதேச வர்த்தகம் மற்றும் காலனியாக்க கொள்கை என்பதில் உள்ளபடி, கி.மு. 31 - கி.பி 305 ஆண்டுகளில், ரோமானிய அரசியல்வாதிகள் மற்றும் சரித்திர ஆசிரியர்கள் ஆகியோர், அவர்களது மனைவியரை மகிழவைக்க வாங்கிய வாசனைப்பொருட்கள் மற்றும் பட்டு ஆகியவற்றுக்கு ஈடாக, இந்தியாவில் உள்ள வியாபாரிகளிடம் அதிக அளவிலான தங்கத்தை இழக்க வேண்டியிருந்ததாக விமர்சித்துள்ளார்கள். இதன்மூலம், கடல் வர்த்தகம் மேற்கொண்டதன் காரணமான தங்கம் நமக்கு கிடைத்தது, அவை தென்னிந்தியாவின் செல்வச்செழிப்புமிக்க கடற்கரை நகரங்களில் பெருமளவில் சேர்ந்தது.

ஆனால், இவ்வளவு தங்கம் கோவிலுக்கு எவ்வாறு வந்தது?

விஷ்ணு கோவில் என்பது தென்னிந்தியாவின் மத, பொருளாதார மற்றும் சமூக வாழ்வின் மையமாக அறியப்பட்டது. 1741ல் குளச்சல் போரில் டச்சு இராணுவத்தை மன்னர் மார்த்தாண்ட வர்மன் தோற்கடித்த பின்னர், விஷ்ணு பகவானைக் கௌரவிக்க தனது முழு ராஜ்யத்தையும் அதன் பொக்கிஷங்களுடன் சேர்த்து கோவிலுக்கு அர்ப்பணித்தார்.

பல தசாப்தங்களாக வணிகர்கள், நிலப்பிரபுக்கள் மற்றும் மன்னர்களால் அது ஆதரிக்கப்பட்டது, அவர்கள் தங்கம் மற்றும் இதர விலையுயர்ந்த பொருட்களை நன்கொடையாக அளிப்பதில் மகிழ்ச்சியடைந்தனர். பல்வேறு காலகட்டங்களாக, இந்த நன்கொடைகளானது புண்ணியம் அல்லது 'மதரீதியான நன்மை' என்பதை மட்டும் குறிக்கவில்லை, ஆனால் மக்களுடைய பார்வையில் அவர்கள் படுவதை அது உறுதிப்படுத்தியது. இவ்வாறு ஒரு நீண்டகால பாரம்பரியம் உருவாகியது, இது ஸ்ரீ பத்மநாபஸ்வாமியை பூமியிலேயே மிகவும் செல்வச்செழிப்பான மத மையமாக தோற்றுவித்தது.