Published: 12 செப் 2017
பண்டைய காலங்களில் ஆண்கள் தங்கத்தை எவ்வாறு அணிந்தார்கள்?
பண்டைய காலம் முதலே ஆண்களும், பெண்களும் பல்வேறு ஆபரணங்களால் தங்களை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றனர். தங்க ஆபரணங்கள் மீது பெண்களுக்கு ஒரு சிறப்பு ஈர்ப்பு இருந்தது; அவர்களின் நகைகள் கவனத்தை ஈர்க்கக்கூடியவையாகவும், நாடு முழுவதும் பரவலாகக் கிடைப்பவையாகவும் உள்ளன. இருப்பினும், ஆண்களுக்கான நகைகள் குறைந்த அளவில் இருந்தாலும், அவை தனித்துவமான அழகுடன் உள்ளன.
பண்டைய காலங்களில், ஆற்றல், ஆதிக்கம் மற்றும் ஆண்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் ஆண்களுக்காக வடிவமைக்கப்பட்ட தங்க நகைகளின் நேர்த்தியான கலைப்படைப்பு பற்றி இந்தக் கட்டுரை பேசுகிறது.
ஜொலிக்கும் சர்பேச்சர்பேச் ஒரு ஆண்களுக்காக செய்யப்படும் ஒரு ஆபரணமாகும். இது நீளமான மரகத துளிகளுடன் பட்டுக் முகடு கொண்ட ஒரு பக்ரி (தலைப்பாகை) ஆபரணம் ஆகும். இது ஒரு தனிப்பட்ட பாணியிலான ஜெய்ப்பூர் வேலைப்பாட்டைக் காட்சிப்படுத்துகிறது. பண்டைய காலங்களில் தங்கம் சர்பேச் மிகவும் புகழ் பெற்று விளங்கியது.
விசேஷமான ஷிங்காகனமான தங்கச் சங்கிலிகளால் வரிசையாக இணைக்கப்பட்ட ஷிங்கா என்பது, குறிப்பாக பண்டைய இந்தியாவின் அரசர்கள் மற்றும் முகலாய பேரரசர்கள் ஆகியோரால் அணியப்பட்டதாகும். ஷிங்கா என்பது சர்பேச் போல் பக்ரியில் (தலைப்பாகை) அலங்கரிக்கப்பட்டது, இருப்பினும் இது மேலும் அழகிய, கம்பீரமான தோற்றத்தை அளித்தது. இந்த ஆபரணங்கள், தங்க வடிவமைப்பில், சங்கிலிகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறிய தங்க மணிகளால் மூடப்பட்ட விளிம்புகளை கொண்டிருந்தன. இவை ஒரு அரசகுல மற்றும் மதம் சார்ந்த தோற்றத்தை அளித்தன.
வெல்லும் திறன் கொண்ட கடாஸ்கடாஸ் என்பது வளையலின் ஒரு வடிவம் ஆகும். கடாவின் உள்புறமானது வண்ணமயமான கண்ணாடிகளின் மலர் வடிவமைப்புகளால் மூடப்பட்டுள்ளது. இந்த ஆபரணமானது இணைத்துக் கட்டமைக்கப்பட்ட யானைத் தந்தங்கள், மயில்கள் அல்லது முதலைகள் போன்றவை கொண்ட ஒரு வியத்தகு வடிவமைப்பு அல்லது வடிவத்தால் வகைப்படுத்தப்படுகிறது.
விருப்பத்திற்குரிய வாங்கிவரலாற்றுரீதியாக ஆண்களால் அணியப்பட்ட நகைகளின் பட்டியலானது, பாசு-பேண்ட் (கைப்பட்டை) என அழைக்கப்படும் வாங்கி பற்றிக் குறிப்பிடாமல் முழுமையடையாது. வாங்கி என்பது அவற்றின் தலைகீழ் வி-வடிவ வடிவமைப்புக்காக அறியப்படுகிறது. இரண்டு பக்கங்களிலும் தங்க வேலைப்பாடுகள் காணப்படுகின்றது. இது ஒரு பொதுவான தாமரை வடிவிலான பதக்கத்தைப் போல் உள்ளது.
இந்த ஆபரணங்கள் தவிர, அரசர்கள் மற்றும் பிற அரச குடும்பத்தினர்கள் ஆகியோர் ஃபிராங்கி (வாள்), கதார் (கத்தி), கஞ்சார் மற்றும் கேடயங்கள் போன்ற ஆயுதங்களின் வடிவத்தில் தங்களின் செல்வச் செழிப்பை வெளிப்படுத்தினர். இந்த ஆயுதங்களின் கைப்பிடிகள், பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. இந்த ஆயுதங்களை அவர்கள் தங்கள் ஆடைகளின் பெல்ட்டில் செருகியிருந்தனர், இது கைப்பிடி மற்றும் வாள் உறையை சிறப்பம்சத்துடன் காட்சியளிக்கச் செய்தது.
இந்தக் கம்பீரமான தங்க ஆபரணங்கள், அணிந்திருப்பவருக்கு ஒரு ஆடம்பரமான மற்றும் வசீகரிக்கும் தோற்றத்தை அளித்து தனித்துவமாகக் காண்பித்தது. பழமையான மற்றும் தனித்துவமான ஆண்களின் ஆபரணங்களைக் கொண்டு, வளமான மற்றும் சிறந்த இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை ஒருவர் எளிதில் அனுபவிக்க முடியும்.