Published: 22 ஏப் 2019
சில்லரை முதலீட்டாளர்கள் தங்கத்தை எவ்வாறு அணுக வேண்டும்?
இந்தியர்களின் இதயங்கள் மற்றும் இல்லங்களுக்கு எப்போதுமே தங்கத்திற்கு ஒரு நிலையான இடமுண்டு. ஆனால், உங்களின் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் அதனால் வகிக்க முடிந்த பங்கு பற்றி உங்களுக்குக் குழப்பமிருந்தால், இன்வெஸ்ட்மெண்ட் குரு - ஹன்ஸி மெஹ்ரோத்ரா தங்கமானது தற்காலத்து சில்லரை முதலீட்டாளர்களுக்கு தங்கமானது மிகப்பொருத்தமான தேர்வு என நம்புவது ஏன் என்பதை அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பல்வகைப்படுத்தல் – உங்களின் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை நீங்கள் பல்வகைப்படுத்த முற்படுகிறீர்கள் என்றால், தங்கமானது மிகவும் உதவிகரமான விருப்பத்தேர்வு ஆகும். தங்கமானது, பங்குச்சந்தைகள் மற்றும் பத்திரங்கள் போன்ற பெரும்பாலான நிதி சொத்துக்களுடன் மிகக்குறைந்த ஒட்டுறவைக் கொண்டுள்ளது. இதன் .விளைவாக, இது ஒரு சிறந்த டைவர்சிஃபயர் ஆக மாறுவதுடன், வீழ்ச்சியடைகின்ற பங்குச்சந்தையில் கூட உங்கள் முதலீட்டின் இலாபத்தன்மை மாறாமலிருப்பதை உறுதி செய்கிறது. உங்களின் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்த நீங்கள் முற்படுகிறீர்கள் என்றால், நீங்கள் எக்ஸ்சேஞ்-டிரேடட் ஃபண்ட்ஸ் (ETFs), கோல்டு ஃபண்ட்ஸ் அல்லது நிஜ தங்கம் போன்ற பல்வேறு வடிவங்களில் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.
போர்ட்போலியோ காப்பீடு – எதிர்பாராமல் நேரக்கூடிய தற்செயல் நிகழ்வுகளிலிருந்து உங்கள் உயிர், உடலாரோக்கியம் அல்லது கார் ஆகியவற்றைப் பாதுகாக்க, நீங்கள் காப்பீடு வாங்குவது போல், உங்களின் போர்ட்போலியோவை காப்பீடு செய்வது அத்தியாவசியமாகும்.
எனவே, நீங்கள் பொருளாதார மந்தநிலைக்கு முந்தைய காலத்தில் பங்குகள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்திருந்தீர்கள் என்றால், பொருளாதார மந்தநிலையால் உங்கள் பங்கு போர்ட்ஃபோலியோவால் உங்களுக்கு நேரிட்ட நஷ்டத்தை, உங்களின் தங்கக் கையிருப்பு கணிசமான அளவில் ஈடுகட்டியிருக்க வாய்ப்புகள் இருந்திருக்கும்.
தொடர்புடைய கட்டுரை: பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடையும் போது தங்கம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது?
எளிதில் பணமாக மாற்றத்தக்கத் தன்மை – ஒரு முதலீட்டு சொத்து என்ற வகையில், தங்கம் எளிதாகக் கிடைக்கிறது, எளிதில் பணமாக மாற்றத்தக்கதாக, பொதுவெளியில் வாங்கக்கூடியதாக வெளிப்படைத்தன்மை கொண்டதாக உள்ளது. ப்ளு சிப் நிறுவனப் பங்குகள் போலில்லாமல், நீண்ட காலத்திற்கு தங்கமானது தனது மதிப்பைத் தக்கவைத்துக் கொள்வதுடன், பொருளாதாரத்தை சார்ந்திருப்பதில்லை அல்லது நிறுவனத்தின் செயல்திறனைப் பொருத்திருப்பதில்லை. தங்கம், நீடித்திருக்கக்கூடியது மற்றும் நீண்ட கால முதலீட்டு உத்தியின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக அதனால் செயல்பட முடியும். இந்த இயல்பினை கொண்டிருக்கும் போதிலும், தங்கத்தைப் பணமாக மாற்றுவது எளிது – நீங்கள் வட்டிக் கடையில் அதன் பேரில் பணம் வாங்குவதோ அல்லது ஒரு அடைமானக் கடன் வாங்குவதோ மிகவும் எளிதானது.
புலப்படும்தன்மை – தங்கம் கண்களால் பார்க்க முடிகின்ற சொத்தாக இருப்பதால் அது விரும்பத்தக்க முதலீட்டு வடிவமாக உள்ளது. நிஜ தங்கமானது மக்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை அளிப்பதாக அறியப்பட்டுள்ளது. மற்றும், நிலம், வீடு போன்ற இதர கண்களால் பார்க்க முடிகின்ற சொத்துக்களை வாங்குவதில் சிக்கல்கள் உள்ளது போலில்லாமல், தங்கம் வாங்குவது எளிதானது மற்றும் சவுகரியமானது.
இந்த சமயத்தில் தான் தங்கத்தின் செல்வ மதிப்பை தக்கவைத்துக்கொள்ளும் இயல்பு செயலாற்றத் தொடங்குகிறது. உள்ளூர் நாணயத்தின் வாங்கும் திறன் வீழ்ச்சியடையும் போது, தங்கத்தின் மதிப்பு பொதுவாக ஏறுமுகமாக இருக்கும். இதன் தொடர்ச்சியாக, மக்கள் தங்களின் சொத்தை தங்க வடிவில் வைத்திருக்க விரும்புகிறார்கள்.
தொடர்புடைய கட்டுரை: தங்கம் ஏன் பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு அரணாக விளங்குகிறது?
பூகோள அரசியல் காரணிகள் – தங்கமானது உலகளாவிய பூகோள புவிசார் அரசியல் பிரச்சினைகளின் போது சாதகமாக எதிர்வினையாற்றுகிறது. சமீபத்தில், கொரியாவின் அணு ஆயுதங்கள் தொடர்பாக ஏற்பட்ட அரசியல் பதற்ற சூழ்நிலை பங்குச்சந்தையில் அதிர்ச்சியலைகளை உருவாக்கியது, ஆனால் தங்க விலையோ உண்மையில் அதிகரித்தது. இத்தகைய நிச்சயமற்ற சூழ்நிலைகளில், மீண்டும் ஒரு நிதி நெருக்கடி ஏற்படலாம், தங்களின் சொத்து மதிப்பு சுருங்கிவிடலாம் என்ற மக்கள் அச்சமே இந்த நிலவரத்திற்குக் காரணமாக உள்ளது. எனவே, சொத்தைத் திறமையாக தக்கவைத்துக் கொள்ளும் வாகனம் தங்கம் என்பதை மக்கள் அறிந்துள்ளதாலேயே, அவர்கள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்யத் தொடங்குகிறார்கள்.
வழக்கமாக, இந்தியாவில் தங்கத்தை வாங்குவது கலாசாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்புடையதாக இருக்கிறது. ஆனால் அதன் கொள்முதலுக்கு மேலே குறிப்பிட்டிருப்பது போன்ற ஏற்கத்தக்க காரணங்களும் பக்கபலமாக உள்ளன. இது ஓர் அறிவார்ந்த கண்ணோட்டத்தை நமக்களிக்கிறது. எனவே, நீங்கள் இதுவரை தங்கத்தில் முதலீடு செய்யவில்லை என்றால், அதற்கான சரியான நேரமாக இது இருக்கக்கூடும்.