Published: 17 ஆக 2017

கையில் வைத்துக்கொள்ளாமல் தங்கத்தில் எப்படி முதலீடு செய்வது

How to Invest in gold without holding and storing physical gold?

இன்று, உடல் இருத்தலியலுக்காக புதுப்பிக்கப்பட்ட பல்வேறு வகையான மாற்றுக்கள் உள்ளன. ஒரு புதிய மொழியைக் கற்பது, அடுத்த பெரிய ஆடையை வாங்குவது, உங்களது சக ஊழியர்களுடன் பேசுவது, அல்லது பல இலட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ள நண்பர்களுடன் உரையாடுவது, இவை எல்லாவற்றையுமே நீங்கள் வீட்டின் வசதிகளிலிருந்து விடுபடாமல் ஒரு சில க்ளிக்குகளில் செய்ய முடியும். நிதி சார்ந்த விவகாரங்களுக்கு வரும்போது, நாம் முதலீடுகளை வாங்குகிறோம். அவற்றை இயல்பாக பெறாமலேயே நம்மால் இவற்றை செய்ய முடியும்.

எடுத்துக்காட்டாக பரஸ்பர நிதியை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு நிதியத்தின் மூலம் மறைமுகமாக ஆயிரக்கணக்கான சொத்துக்களில் நீங்கள் முதலீடு செய்கிறீர்கள். ஆனால் உங்கள் கையில் இருப்பது உரிமைக்கான மின்னணு ரசீது மட்டுமே. பங்குச் சந்தை முதலீடுகளிலும் இதே நிலைதான். நீங்கள் பங்குகளை வாங்குகிறீர்கள். ஆனால் அதற்கான இயல் சான்றிதழ்கள் எதுவுமே உங்களிடம் கிடையாது.

அதைப்போலவே, நீங்கள் வெளியே சென்று தங்கம் வாங்கி வந்து உங்களுக்காக பாதுகாத்து வைக்காமலேயே நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய முடியும்.

தங்கத்தை வாங்காமல் அதில் முதலீடு செய்வது

நீங்கள் தங்கத்தை வாங்க வேண்டும் என்றால், நீங்கள் நகைக்கடைக்கோ அல்லது வங்கிக்கோ செல்ல வேண்டும். அங்கு நீங்கள் தங்கத்தை எடை போட்டு, அதன் தரத்தை பரிசோதிக்க வேண்டும். அதில் ஹால்மார்க் முத்திரை உள்ளதா எவ்வளவு காரட் உள்ளது என்பதை எல்லாம் சோதித்த பின்புதான் அதற்கு பணம் செலுத்த வேண்டும். ஒரு சில ஆயிரங்களில் உள்ள மதிப்பில் நீங்கள் தங்கம் வாங்க வேண்டும். மிகவும் இலேசான தங்க நாணயம் 1 கிராம் எடை கொண்டது. இதற்கு ஏறத்தாழ ரூ.3000 செலவாகும். இந்த நேரத்தில் தங்க நகை அதிக எடை கொண்டதாக இருக்கும்.

நீங்கள் தங்கம் வாங்கும்போது நீங்கள் பரிசீலிக்க வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
 

Qஅளவு: நீங்கள் ரூ.500 அல்லது ரூ.1000 மதிப்புள்ள தங்கத்தை வாங்க விரும்புகிறீர்களா? ஒவ்வொரு மாதமும் ரூ.500 அல்லது ரூ.1000 மதிப்புள்ள தங்கத்தை நீங்கள் வாங்கிக் கொண்டே இருக்க முடியாது.
பாதுகாப்பு: தங்கம் மிகவும் பாதுகாப்பான பொக்கிஷமான உலோகம். எனவே தங்க நகைகளையும் நாணயங்களையும் வாங்கும்போது பாதுகாப்பு மிகவும் அவசியம்.
தங்கத்தின் விலை: உங்களிடம் 30 கிராம்கள் எடை கொண்ட தங்க நகைகள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதன் மதிப்பு ரூ.90,000 . அதற்கான செய்கூலியாக making charges. நீங்கள் ரூ.1,000 அதிகமாகக் கொடுக்க வேண்டும். உங்களுக்கு ஏதேனும் அவசர தேவை என்றால், உங்கள் தங்கத்தை விற்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்வீர்கள். அப்போது உங்களுக்கு வெறும் ரூ.90,000 மட்டுமே கிடைக்கும். இவ்வாறு செய்யும்போது செய்கூலி கிடைக்காது. ஒரு சிறிய தொகையைப் பெறுவதற்கு நீங்கள் தங்கத்தை விற்க முயன்றால், அது மிகவும் கடினமான பணியாகத் தோன்றும். அதற்குப் பதிலாக அந்தத் தங்கத்தை அடகு வைக்கலாம் என்று நீங்கள் முடிவு செய்வீர்கள். அத்தகு நேரத்தில் நீங்கள் தங்கத்தை மீட்பதற்கு அளிக்கும் தொகை அதன் விற்பனை விலையிலிருந்து வேறுபடும்.
தொடர்புடையது: நீங்கள் தங்கத்தை விற்பதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
சுத்தம்: நீங்கள் தங்கத்தை வாங்கும்போது, சான்றிதழ் பெற்ற பிஐஎஸ் ஹால்மார்க்கின் 4 சமிக்ஞைகளையும் நீங்கள் காண வேண்டும். இதன் உத்தரவாதம் என்ன என்றால் நீங்கள் வாங்கிய தங்கத்தின் தரம் சோதிக்கப்பட்டுள்ளது என்பதுதான். இல்லை என்றால் தங்கத்தை மற்ற விலை மதிப்பற்ற உலோகங்களுடன் கலந்துவிடும் வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் தங்க முதலீட்டின் மதிப்பு குறையும். ஹால்மார்க் முத்திரை தங்கம் தரமானது என்று சோதித்து சான்றளித்து அந்த தங்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கும்.

மேற்குறிப்பிட்ட எந்த காரணமும் இல்லாமல் நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய முடியுமா?

தங்கத்தைப் பொருளாக வாங்காமல் கீழே குறிப்பிடப்பட்ட மாதிரிகளைத் தேர்ந்தெடுத்து நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய முடியும்:

தங்கத்தைப் பொருளாக வாங்காமல் நீங்கள் எப்படி முதலீடு செய்ய முடியும்?

நீங்களும் உங்கள் நண்பரும் ஏதாவது ஒரு நகைக்கடைக்காரரிடம் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அங்கு நீங்கள் 5 கிராம் எடையுடைய தங்க நாணயத்தை வாங்குகிறீர்கள். நீங்கள் ஒரு மாத காலம் மற்றொரு நகருக்கு செல்கிறீர்கள். எனவே உங்களது தங்க நாணயத்தைப் பத்திரமாக வைத்திருக்குமாறு உங்கள் நண்பரிடம் வேண்டிக்கொள்கிறீர்கள். ஆனால் உங்களுடைய நண்பர்தான் இந்த நாணயத்தைப் பெற்றிருக்கிறார் என்று அர்த்தம் அல்ல. அந்த நாணயத்தின் உரிமையாளர் நீங்கள் என்பதற்கான ரசீது உங்களிடம் உள்ளது. நீங்கள் பயணிக்கும்போது உங்களிடம் இருப்பதெல்லாம் அந்த நகையின் உரிமைதாரர் நீங்கள் என்பதற்கான காகிதம். அந்த தங்கம் உங்களிடம் இயல்பாக இருந்ததே இல்லை.

தங்கத்தின் ஆதரவு பெற்ற பொருட்களில் முதலீடு செய்யும்போது ஏதாவது ஒன்று இதுபோல் நடக்கலாம். தங்க நிதியம் gold fund அல்லது எக்சேஞ்ச் டிரேடம் நிதியம் எனப்படுவது உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான முதலீட்டார்கள் முதலீடு செய்த பணம்தான். உங்கள் சார்பாக அவர்கள் தங்க புல்லியனை வாங்குவார்கள். நீங்கள் எவ்வளவு பணம் முதலீடு செய்துள்ளீர்கள் என்பதைப் பொறுத்து, முதலீட்டு கருவி அலகுகள் உங்களுக்கு ஒதுக்கப்படும். ஒவ்வொரு பொருளுக்கான அலகும் தங்க அலகுகளான கிராமில் இருக்கும். நீங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு இடிஎஃப் அலகும் தங்கத்தின் ஆதரவு பெற்றது. உங்களிடம் அதற்கான தங்கம் இயல்பாக இல்லை என்றால், உங்கள் சார்பாக அதனை ஒரு நிதி அமைப்பு சேமித்து வைக்கும்.

உங்களது முதலீட்டின் மதிப்பு தங்கத்துடன் தொடர்புடையது. தங்கத்தின் விலை அதிகரிக்கும் ஒவ்வொரு முறையும் உங்களது தங்க நிதியத்தின் மதிப்பும் அல்லது இடிஎஃப் பிடிப்பும் அதிகரிக்கும். இத்தகு முறையில் நீங்கள் தங்கத்திலிருந்து இலாபம் பெற முடியும்.

தொடர்புடையது: தங்கத்தின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?
அடிக்கோடு

தங்கத்தை புதிய முறையில் முதலீடு செய்யும் புதிய உலகம் அது. தங்கத்தை அடிப்படையாக வைத்த இந்த மூலதனங்கள் வாழ்க்கையை உங்களுக்கு மிகவும் எளிதாக்கும். தங்கத்தின் நம்பக்கூடிய பொருளாதார மதிப்பிலிருந்து நீங்கள் பலன் பெற வேண்டும். அத்தகைய மாதிரிகளில் முதலீடு செய்வதற்கான விலை மிகவும் குறைவு. மேலும் மிகவும் வசதியானது.

Sources:

Source1Source2Source3