Published: 27 செப் 2017
தங்கம் எப்பொழுதும் திருப்திப்படுத்தும் என்று பீர்பால் எப்படி நிரூபித்தார்?
பேரரசர் அக்பரின் அரசவையில், பீர்பாலின் புத்திசாலித்தனத்தைப் பார்த்து பொறாமை கொண்டிருந்த பலர் இருந்தனர். அக்பரின் மைத்துனர் அவர்களில் ஒருவர் ஆகும். பீர்பாலை பணியில் இருந்து விலக்குமாறும், அவரது பணியை தான் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்தும் அவர் பேரரசருக்கு கோரிக்கை விடுத்தார். அக்பர் முடிவெடுப்பதற்கு முன்பே, பீர்பால் ராஜினாமா செய்து, வெளியேறினார். அதனால் அக்பரின் மருமகன் மந்திரி ஆனார்./p>
பேரரசர் தனது புதிய அமைச்சரைப் பரிசோதிக்க முடிவு செய்தார். அவர் 300 தங்க நாணயங்களைக் கொடுத்து பின்வருமாறு அறிவுறுத்தினார்: "இந்த நாணயங்களைப் பின்வரும் வகையில் செலவழிக்கவும் - இந்தப் பிறவியில் எனக்கு 100 நாணயங்கள் கிடைக்க வேண்டும். அடுத்தப் பிறவியில் எனக்கு 100 நாணயங்கள் கிடைக்க வேண்டும் மற்றும் 100 நாணயங்கள் எனக்கு எங்கேயும் கிடைக்கக்கூடாது.”
அமைச்சர் மிகவும் குழப்பமடைந்தார். தூக்கமில்லாமல் சில இரவுகளைக் கழித்த பிறகு, பீர்பாலிடம் ஆலோசனை கேட்குமாறு அவரது மனைவி கூறினார். அவர் கேட்ட போது, "என்னிடம் தங்க நாணயங்களைக் கொடுங்கள். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று மட்டும் பீர்பால் கூறினார்.
பீர்பால் நகரத்தின் தெருக்களில் நடந்துகொண்டிருந்தபோது, ஒரு பணக்கார வியாபாரி அவரது மகனின் திருமணத்தை கொண்டாடுவதைக் கவனித்தார். அவர் வியாபாரியிடம் 100 தங்க நாணயங்களை வழங்கிவிட்டு, பேரரசர் அக்பர் தனது நல்வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் உங்களுக்கு அனுப்புகிறார் என்று அவரிடம் கூறினார். வணிகர் மரியாதைக்குரியதாக அதைக் கருதி, அவருக்கு விலையுயர்ந்த பரிசுகளையும், பேரரசருக்கு தங்க நாணயங்கள் கொண்ட பையையும் வழங்கினார்.
பின்னர், பீர்பால் ஏழைகள் வாழ்ந்த இடத்திற்கு சென்றார். அங்கு அவர் 100 தங்க நாணயங்களை ஏழைகளுக்கான உணவு மற்றும் துணிகள் ஆகியவற்றை அளித்து பேரரசரின் பெயரில் செலவிட்டார். இறுதியாக, கடைசி 100 தங்க நாணயங்களுடன், அவர் நகரத்தை அடைந்து இசை மற்றும் நடனம் கொண்ட இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.
அடுத்த நாள் பீர்பால் அக்பரின் அரசவைக்குள் நுழைந்து, அரசர் தனது மைத்துனர் செய்ய வேண்டுமென்று கூறிய அனைத்தையும் தான் செய்துள்ளதாக அறிவித்தார்.
பீர்பால் எப்படி செய்தார் என்பதை அறிய பேரரசர் ஆர்வம் காட்டினார். பீர்பால் பின்வருமாறு விளக்கினார், "வியாபாரிக்கு வழங்கப்பட்ட 100 தங்க நாணயங்களானது உங்களுக்கு இந்தப் பிறவியிலேயே திரும்பக் கிடைத்துள்ளது. ஏழைகளுக்குச் செலவிட்ட 100 தங்க நாணயங்களானது உங்களுக்கு அடுத்தப் பிறவியில் கிடைக்கும். இசைக் கச்சேரியில் செலவழித்த 100 தங்க நாணயங்களானது உங்களுக்கு எங்கேயும்,எப்போதும் திரும்பக் கிடைக்காது.”
பல வழிகளில், இது இன்றும் உண்மையாகவே உள்ளது:
- நண்பர்களுக்காக செலவழிக்கப்படும் பணமானது சில வழிகளில் அல்லது வேறுவழியில் திரும்பி வருகிறது.
- தானமாக அளிக்கப்படும் பணமானது கடவுளின் ஆசியாக மாறி நமக்குக் கிடைக்கிறது.
- மகிழ்ச்சிக்காக செலவழித்த பணத்தை வெறுமனே அனுபவிக்க மட்டுமே முடியும்!