Published: 20 பிப் 2018
சுதந்திரத்துக் பிறகு முதல் பத்தாண்டுகளில் இந்தியாவின் தங்கக் கொள்கை
1947ல் அந்நியச் செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட 2 மில்லியன் பவுண்டுகள். 1947 முதல் 1962 க்கு இடையில், இந்தியத் தங்கச் சந்தையை கட்டுப்படுத்தும் நோக்கிலான கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டம் 1947 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. 1947ல், அந்நியச் செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தை கூடுதல் கட்டுப்பாட்டு வடிவில் அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால் தங்கத்தின் தேவை மிக அதிகமாக இருந்தது, இது சட்டத்துக்குப் புறம்பாக எடுத்துவருதல் மற்றும் கள்ளக்கடத்தலை ஊக்குவித்தது.
இந்திய அரசு தங்க இறக்குமதியைத் தடைசெய்து, புதிய உரிம முறையைக் கொண்டு வந்தது. இது விரும்பிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, கடத்தல் இன்னும் அதிகரித்தது. 1947ல், 10 கிராம் தங்கத்தின் விலை 88.62 ரூபாய் ஆக இருந்தது. தடையை அறிவித்த பிறகும் விலை குறையவில்லை. 1949ல் அது 95.87 ரூபாயாக அதிகரித்தது, ஆனால் 1955ல் 79.18 ரூபாயாக குறைந்தது.
சுதந்திரம் பெற்ற பிறகு முதல் 15 ஆண்டுகளில் பிரிட்டன் உள்பட ஐரோப்பா முழுவதும் 2ஆம் உலகப்போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது, இதனுடன் இந்திய வளர்ச்சியும் ஒருங்கே நடந்தது; இது தான் யுஎஸ் வழங்கிய மார்ஷல் திட்டம் எனப்பட்டது. பிறகு, யுஎஸ் டாலரின் மதிப்பு தங்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால், உலகம் முழுவதும் தங்கத்தை தரநிலையாகக் கொண்டு செயல்பட்டது. இந்தச் சூழலில் இந்தியாவுக்கு தேவைப்படக்கூடிய எந்த உதவியும் கிட்டவில்லை.
1956ல் கோலார் தங்கச்சுரங்கத்தை அரசு தேசிய உடமையாக்கியது, இந்தியாவின் தங்க உற்பத்தியில் 95% இங்கிருந்துதான் கிடைத்தது, ஆனால் இந்தச் சுரங்கத்தில் தங்கம் கிடைப்பது குறையத் தொடங்கியது. 1958ல், அரசு இந்தச் சுரங்கத்திலிருந்து கிடைக்கும் தங்கத்தை அதிகாரபூர்வமற்ற கையிருப்பாக வைத்துக்கொள்ள முயற்சித்தது. அப்போது தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 90.81 ரூபாய், 1963ல் 10 கிராமுக்கு 97 ரூபாய் என்ற அளவை எட்டியது. தேவை தொடர்ந்து அதிகமாக இருந்துவந்ததால், கடத்தல் அதிகரிக்கத் தொடங்கியது.
1948-1949 காலத்தில் கிட்டத்தட்ட 27.36 டன் தங்கம் இந்தியாவுக்குள் கடத்தப்பட்டதாக மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. இது 1950-51ல் 35.35 டன்னாகவும், பின்னர் 1952-53ல் 53.27 டன்னாகவும் அதிகரித்தது. ஆனால் 1955-56ல் கடத்தல் 50 சதவீதத்துக்கும் அதிகமாக கிட்டத்தட்ட 26.27 டன்னாகக் குறைந்தது, ஆனால் இது சிறிது காலத்திற்கே நீடித்தது. 1958 க்கும் 1963க்கு இடையில் 520 டன் தங்கம் அதிகாரபூர்வமற்ற முறையில் இந்தியாவுக்குள் வந்துள்ளது. தங்கத்தைப் போன்று சிறந்தது வேறொன்றுமில்லை.