Published: 11 செப் 2017
சிந்துப் பள்ளத்தாக்கில் இருந்து தங்கம்
சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் அதற்குரிய பிரத்தியேக அழகைக் கொண்டிருந்தது. வரலாற்றாசிரியர்களும் மற்றும் பிற ஆர்வலர்களும், முந்தைய காலத்தைச் சேர்ந்த நமது மூதாதையர்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்; அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள், என்ன சாப்பிட்டார்கள், என்ன அணிந்தார்கள், என்பது போன்ற பல விஷயங்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன், எல்லா காலங்களிலும் மிகச் சிறந்த நாகரிகத்தில் ஒன்றான சிந்துப் பள்ளத்தாக்கில் இந்த வினாக்கள் சிலவற்றுக்கான விடைகள் காணப்படுகின்றன.
இந்த நாகரிகத்தின் அகழ்வாராய்ச்சிகளானது நமது வேர்களைப் பற்றி மட்டும் நமக்குத் தெரிவிக்கவில்லை, அது பல நூற்றாண்டுகளாக மனிதர்களாகிய நாம் எவ்வாறு நகைகளால் ஈர்க்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் காட்டுகிறது. இந்த அகழ்வாராய்ச்சிகளானது நகைகளையும் மற்றும் பல்வேறு வடிவ நகைகளை அணிந்துள்ள சிற்பங்களையும் வெளிக்கொண்டு வந்தது. இந்த அகழ்வாராய்ச்சியில் கவர்ச்சிகரமான தங்க நகைகள் கிடைக்கப்பெற்றது.
தங்கத்தினால் கட்டமைக்கப்பட்ட ஆபரணங்களானது, மஞ்சள் உலோகத்தின் மீதான அன்பையும், சிந்து பள்ளத்தாக்கின் வாழ்வில் அதன் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகின்றன.
அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க நகைகளில் சில பின்வருமாறு:தலை-ஆபரணங்கள்
தங்கத்தினால் செய்யப்பட்ட கூம்பு வடிவிலான தலை ஆபரணங்களானது ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
நெக்லஸ்கள்சிந்து பள்ளத்தாக்கில் இருந்து தங்கக் கழுத்தணிகள் தோண்டியெடுக்கப்பட்டன. சிந்து பள்ளத்தாக்கை சேர்ந்த ஆண்களும் நகைகளை அணிந்திருப்பதாக நம்பப்படுவதால், இரு பாலாரும் இவற்றை பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது.
மோதிரங்கள்சிந்துப் பள்ளத்தாக்கில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட நகைகளில் ஒரு பகுதியானது தங்க மோதிரங்கள் ஆகும். இவை சிந்துப் பள்ளத்தாக்கு பெண்களின் விரல்களை அலங்கரித்திருந்திருப்பதாக நம்பப்படுகிறது.
பதக்கம்சிந்துப் பள்ளத்தாக்கில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட நகைகளில் ஒரு தங்கப் பதக்கமும் இருந்தது. அது எதற்காக அணியப்பட்டிருந்தது என்பது பற்றி நிபுணர்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை.
தாயத்துதோண்டியெடுக்கப்பட்ட நகைகளுக்கு மத்தியில், தீங்குகளைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தாயத்துகூட இருந்ததாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த ஆபரணமானது மெழுகுவர்த்தி வடிவத்தில் இருந்தது, அது ஒரு கழுத்து-ஆபரணமாகவும் தோன்றுகிறது.
பிற நகைகள்ஒரு சில தங்க நகைகளானது வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தன; அவை வீட்டு அலங்காரத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். கூடுதலாக, தங்களுடைய கழுத்து, காதுகள் மற்றும் கைகள் ஆகியவற்றில் நகைகளை அணிந்திருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களைச் சித்தரிக்கும் பல சிலைகள் மற்றும் சிற்பங்கள் ஆகியவையும் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆபரணப் பொருட்களில் பெரும்பாலானவை, இந்தியாவின் புது தில்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் நகைகள் காட்சியகமான அலம்காராவிலும், மற்றும் ஹரப்பா காட்சியகத்திலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அகழ்வாராய்ச்சியிலிருந்து கிடைக்கப்பெற்ற சிற்பங்களும் மற்றும் பிற பொருட்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இன்று நம்மிடம் உள்ள தங்க நகைகள் மீதான நம் மோகமானது, சிந்துப் பள்ளத்தாக்கு காலத்தில் நமது மூதாதையர்களில் இருந்தே தொடங்கியுள்ளது.