Published: 09 ஆக 2017

நகை வடிவமைத்தல் – அற்புதமான வேலைவாய்ப்பு

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு விலை உயர்ந்த கற்கள் மற்றும் நகைத் துறை 6-7% அளிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

இந்தத் துறையில்தான் உங்களது பிரியமான நகைகளுக்குப் பின்னால் உள்ள மூளையும் ஆற்றலும் உள்ளன. நகை வடிவமைத்தலை ஒரு தொழிலாக கற்க வேண்டுமென்றால் அதற்கு நிறைய படைப்பாற்றலும், நுணுக்கமும், விவரங்கள் குறித்த கவனமும் தேவை. மிகவும் அழகான, அதிக மதிப்புடைய ஒன்றை நீங்கள் படைத்துள்ளீர்கள், தலைமுறை தலைமுறையாக அவை பாதுகாக்கப்படும் என்ற உணர்வு கிடைக்கும்போது உங்களுக்குத் திருப்தி கிடைக்கும்


நம்பிக்கையான எதிர்காலம்

முன்பெல்லாம் நகை வடிவமைத்தலானது மிகவும் திறமையான ஒரு சில கலைஞர்களுக்கே சாத்தியம். நகையை எவ்வாறு செய்து வடிவமைப்பது, அதற்கான விலை உயர்ந்த கற்களையும் விலை உயர்ந்த உலோகங்களையும் எப்படி தர பரிசோதனை செய்து கண்டறிவது என்பதெல்லாம் அவர்களுக்கே தெரியும். இந்த கலைஞர்கள் தங்கள் கலையை இரகசியமாக வைத்திருப்பார்கள். பல்வேறு தலைமுறைகளுக்கு கொண்டு செல்வார்கள். ஒரு தனிப்பட்ட நபரின் நிதிநிலையையும் அதன் சுகத்தையும் உணர்த்தும் பொருட்டு அவர்களின் படைப்புகள் செல்வம் படைத்த பணக்காரர்களை அலங்கரித்தன.

இன்று, நகை வடிவமைத்தல், உற்பத்தி, விளம்பரம், வர்த்தகம் ஆகியவை முக்கிய தொழில்களாக மாறிவிட்டன. இந்த தொழில்துறை தனது வினியோகம் மற்றும் தேவைக்கான புள்ளி விவரங்களில் நீண்டு வளர்ந்துள்ளது. இதனால் வேலை தேடுபவர்களுக்கு புதிய பிரகாசமான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.


வேலை வாய்ப்புகளும் சம்பள தொகுப்புகளும்

வடிவமைப்பாளர், வர்த்தகம், பொருட்காட்சி பாதுகாவலர், கலைக்கூடத்தின் மேலாளர், ஆலோசகர், விளக்கம் அளிப்பவர், ஏலம் விடுபவர் என்று உங்களுக்கு தேவையான வேலையின் பட்டியல் வளர்ந்துகொண்டே உள்ளது. உங்களது திறமைக்கேற்ற வேலை வாய்ப்பை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். கல்வித் தகுதி மற்றும் நல்ல காட்சி திறன்கள், நிலையான கைகள், கணினி உதவியுடன் கூடிய வடிவத்திற்கான மென்பொருள், அதனைப் பயன்படுத்தும் அறிவு, தொலைநோக்கு பார்வை, அனுபவமிக்க நகை வடிவமைப்பாளர்கள் நல்ல மரியாதைக்குரிய சம்பளத்தை எதிர்பார்க்கலாம். நல்ல வளர்ந்த தொழில்துறையுடன் இது போட்டி போடக்கூடும்.

தேவை

உலகிலேயே தங்கம் அதிகம் வாங்குபவர்களின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியா 500லிருந்து 600 டன்கள் தங்க நகைகள் வரை பெறுகிறது. இந்தத் தேவையை சமாளிக்க, நகை வடிவமைப்பில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உண்மையில், நகை வடிவமைப்புத் துறையில் வளர வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு பல்வேறு குறிய, நீண்ட கால பட்டய படிப்புகளையும் திட்டங்களையும் பல்வேறு இந்திய நிறுவனங்கள் வழங்குகின்றன.


நகை வடிவமைப்பில் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்கள்

தொழில்நுட்ப உதவியுடன் கிடைக்கும் நகை வடிவங்கள் மற்றும் முத்திரை பெற்ற ஆபரணங்களுக்கு உள்ள வளர்ந்து வரும் தேவையானது 13 இலட்சம் பேருக்கும் வேலை வாய்ப்பளிக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளது. சர்வதேச நகை வடிவமைப்பு நிறுவனங்களும் ஏற்றுமதி சந்தைகளும் அனுபவமிக்க வடிவமைப்பாளர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை அளிக்க முடிவு செய்துள்ளன. இளைஞர்கள் புதுப்பித்தல் தொழிலும் வடிவமைப்பு துறையிலும் வேலை வாய்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவிலேயே உருவாக்குவோம் என்ற கொள்கை எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு இந்தியாவிலேயே வடிவமைப்போம் என்ற கொள்கையும் முக்கியமானது என்றார் அவர்.

உங்களிடம் படைப்பாற்றல் ஊக்கம் உள்ளதா, விவரங்களுக்கான பார்வை உள்ளதா, கடினமாக உழைக்கும் உத்வேகம் உள்ளதா, கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்கிறதா, பின்னர் எதற்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள்? நீங்கள் அனுபவிக்கக்கூடிய துறையாக நகை வடிவமைத்தல் இருக்கலாம்.

Sources:
Source1Source2Source3