Published: 10 செப் 2018
தங்க சுரங்கப் பணியின் எதிர்காலம்
இந்திய தாதுப்பொருட்கள் கூட்டமைப்பின் (IndianMineralFederation) கூற்றுப்படி 5 லட்சத்து 75 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட 13 சதவீத நிலப்பரப்பில் மட்டுமே கனிமவள ஆதாரங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவெனில் இன்னமும் வெட்டி எடுக்கப்படாத பெருமளவு தங்கவள ஆதாரங்களுக்கான
வாய்ப்பை இந்தியா கொண்டுள்ளது. இருந்தாலும், முன்னேறிய தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவின் வேகம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் தங்கச் சுரங்கப் பணியில் புதியதும் நிலையானதுமான முறைகள் பயன்பாட்டுக்கு வரும்.
-
நிலத்தடி சுரங்கப் பணியில் கவனம்
வாழ்வாதாரத்திற்கான வேளாண்மைக்கு பதிலாக தங்கச்சுரங்கப் பணிகளுக்கு பெருமளவு நிலம் தேவைப்படுதால் திறந்தவெளி சுரங்கப் பணிகளால் விவசாயிகளின் வெறுப்பை உள்ளூர் சமூகத்தினரும் அரசும் அதிகம் சம்பாதிக்க வேண்டி உள்ளது. இதனால் மெல்ல மெல்ல நிலத்தடி முறையை முறை நோக்கி சுரங்கத்தொழில் நகர்கிறது.
-
பதப்படுத்துவதில் பயன்படுத்தப்படும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் நீக்கப்படுதல்
சுரங்கப் பணியில் ஆபத்தான ரசாயன உபயோகமானது குறிப்பாக சயனைட், அம்மோனியம் நைட்ரேட் போன்ற இரசாயனங்களை சுரங்கத்தில் பயன்படுத்தப்படுவது பெரும் கவலைக்குரியதாகும். தங்கத் தொழிலில் சயனைட் பயன்பாட்டை குறைப்பது மிக விரைவில் சாத்தியப்படக்கூடும். நிலத்தடி குடைவுக்கு பயன்படுத்தப்படும் வெடி பொருட்களுக்கு மாற்றாக எந்திரம் மூலம் குடைதல் பயன்படுத்தப்படும். இதனால் சுரங்ககளிலிருந்து அதிக செறிவான வடிவில் தங்கம் கிடைக்க வழி கிடைக்கும்.
-
முன்னேறிய இயந்திர குடைவுகள்
இன்றைய நாட்களில் பெரும்பாலான சுரங்கங்கள் இயந்திரம் மூலம் குடையப்படுகின்றன.ஏனென்றால் இது வெடி வைக்கும் முறையை விட சுருக்கமானது. இருந்தாலும், இயந்திர சாதனங்கள் அதிகப்படியான கடுமையான பாறைகளை பிளப்பதில் வரையறுக்கப்பட்ட வெற்றியை மட்டுமே பெறுகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் காட்சிகள் மாற்றமடைய வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் இயந்திரக் குடைவுகளே நடைமுறையாகலாம். மேலும் நகரக்கூடிய பதப்படுத்தும் ஆலைகளைப் பயன்படுத்தும் பதப்படுத்தும் இயந்திரங்கள் அதிகம் பயன்படுத்தப்படும்.
-
சாத்தியமான கடல் சார்ந்த திட்டங்கள்
உலகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான விநியோக முறையை தங்கம் கொண்டுள்ளது. உலகின் மூன்றில் இரண்டு பங்கு நிலமானது கடலுக்கடியில் உள்ளது. இந்தப் புள்ளிவிவரப்படி கடல் படுகையில் தங்க வளங்களை கண்டறியும் சாத்தியங்கள் அதிகமாகும். பெருமளவு சுரங்க நிறுவனங்கள் கடல்படுகையில் தங்க வளங்களை பிரித்தெடுக்க எதிர்காலத்தில் கடல் சார்ந்த திட்டங்களை விரிவுபடுத்தும் சாத்தியங்கள் அதிகம். ஆகவே துளையிடும் கருவிகள் மற்றும் உணர் தொழில்நுட்பங்களில் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. மேலும் இந்தப் படிமங்களின் இருப்பிடங்களைத் துல்லியமாகக் கண்டறிய பெரிய தகவல் பகுப்பாய்வு முறைகளையும் இயந்திரக் கல்வியையும் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் அடுத்த 30 ஆண்டுகளில் இவை நிச்சயமாக சாத்தியமாகக் கூடும்.
-
தானியங்கி இயந்திரத் தொழில்நுட்பத்தை தழுவுதல்
நிலமோ, கடலோ எதன் கீழும் தானியங்கி தொழில்நுட்பமே சுரங்கப் பணியின் முக்கிய அம்சமாகும். இது ஆபத்து மிகுந்த மனிதச் செயல் பாட்டிற்கு மாற்றானதாகும். மக்கள் இயந்திரங்கள் மற்றும் ரோபாட்டுகளை கையாளும் போதும் பராமரிக்கும் போதும் ஆக்கப்பூர்வமான, திட்டமிட்ட, உத்திகள் நிறைந்த வேலைகளில் கவனம் செலுத்துகிறார்கள்.
-
புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை தூண்டுதல்
ஆற்றல் தங்கச் சுரங்கத் தொழிலின் முக்கிய பிரச்சினையாக விரைவாக மாறிவருகிறது. சுரங்க நிறுவனங்கள் ஆனது புதைபடிம எரிபொருள் பயன்பாட்டை குறைத்து புதுப்பிக்கத்தக்க எரிபொருள் மற்றும் மின்தேக்கியின் மூலம் எரிபொருள் ஆதாரங்களின் பயன்பாட்டை அதிகரிக்க விரும்புகின்றன. டீசலைவிட சூரிய ஆற்றல் விலை குறைவானதாகும். புதிய சோலார் மின் தகடுகள் 14 மணி நேரம் வரை வேலை செய்யும், இதனால் இது வழக்கமான மின் ஆதாரத்திற்கு சிறந்த மாற்றாக மாறியுள்ளது.
-
நீடிப்புத்தன்மையை அதிகரித்தல்
புதிய தங்கச் சுரங்கங்கள் கண்டறிய படுவதை உள்ளூர்வாசிகள் பெரும் பின்னடைவாகவே கருதுகிறார்கள். இக்கருத்தின்படி திறன்சாராத மற்றும் குறைந்த அளவு திறன் கொண்ட வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை குறையும். இருந்தாலும், தொழில்நுட்பம் மற்றும் நேரத்தின் உதவியோடு சுரங்கப் பணியை அடிப்படையாகக் கொண்ட வேலைவாய்ப்பை உருவாக்குவதிலிருந்து, செல்வத்தை உருவாக்குதல், சுற்றிலும் கல்வி, வணிகம், தொழில் நிறுவனங்களை கட்டமைத்தல், ஆகியவற்றில் கவனம் திரும்பி, நிலையான மாற்றத்தை உருவாக்கும். பொதுவாக, தங்கம் கண்டறியப்பட்டு வணிகத்திற்கு வர பத்தாண்டு காலம் தேவைப்படுகிறது. இக்கால இடைவெளியை கல்வியை மேம்படுத்தவும், தகவல் தொடர்பை உயர்த்தவும், தொழில்நிறுவனங்களை ஊக்கப்படுத்தவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அடுத்த 30 ஆண்டுகளில் தங்கச் சுரங்கப் பணியானது சுற்றுச்சூழல், சமுதாய மற்றும் அரசாங்கம் சார்ந்த தேவைகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் இயக்கப்பட்டு ஒரு குறிப்பிடத் தக்க மாற்றத்தை அடையும் சாத்தியங்கள் இருக்கிறது. இதை விவேகமாக நடைமுறைப்படுத்தினால் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற முடியும்.