Published: 15 மே 2018
அமெரிக்காவில் தங்கத்தின் மீதான ஹால்மார்க் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்
நகைகளில் உள்ள தங்கத்தின் உள்ளடக்கம் மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் தூய்மைக்கான சர்வதேச தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பதே தங்கத்தின் மீதான ஹால்மார்க். தங்கத்தின் மீது ஹால்மார்க் செய்யப்படும் முறையானது ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்துவமானது என்று உங்களுக்குத் தெரியுமா?
நீங்கள் வெளிநாட்டில் தங்கம் வாங்கினால், ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கம் எதுவென்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் செலுத்தும் பணத்திற்கு உரிய நகைகயைத்தான் நீங்கள் வாங்குகிறீர்கள் என்று நீங்கள் உறுதிசெய்து கொள்ளலாம்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தங்கத்தின் மீதான ஹால்மார்க் குறித்த ஒரு வழிகோட்டி இதோ.
அமெரிக்காவில், ஒரு தங்க நகையின் மீதான காரட் மதிப்பினை அந்த நகைக்கு அருகிலுள்ள ஒரு தனியான அறிவிப்புப் பலகையிலோ அல்லது ஒரு சொற்றொடர் மூலமோ கண்டறியலாம். அந்த நகையிலேயே அதற்கான மதிப்பு இருக்காது.
மேலும் அத்தகு குறியிருந்தால், அதன் பூர்வீகத்தைக் கண்டறியும் பொருட்டு அதற்கு மிக அருகிலேயே அதன் டிரேட்மார்க் முத்திரையும் இருக்கவேண்டும். அமெரிக்காவில், காரட் மதிப்பைவிட, ஆயிரங்களின் மடங்குகளில் துல்லியம், தூய்மைக்கான அளவீடாக எடுத்துகொள்ளப்படுகிறது.
ஆனால் அமெரிக்காவின் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கம் பார்ப்பதற்கு எப்படி இருக்கும்?
அமெரிக்காவில், தங்க நகையை ஹால்மார்க் செய்வதற்காக எந்த தனிப்பட்ட அரசு சார்ந்த நடைமுறையும் கிடையாது மாறாக, நகர்ப்புறங்கள் மற்றும் மாநிலங்கள் முழுவதும் பல்வேறு தரமதிப்பீட்டு முகமைகள் உண்டு.
ஜூவல்லர்ஸ் ஆஃப் அமெரிக்கா என்பது அத்தகைய ஒரு முகமை. தங்க நகைகளின் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் தங்கள் கடைகளின் நுழைவாயிலில் இந்த அமைப்பின் உறுப்பபினர்கள் “J” என்ற எழுத்தை பெற்றிருப்பார்கள். நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளைக் கடைபிடிக்கும் பொறுப்பு அவர்களுக்கு உண்டு.
நகைத் தொழிலுக்கான வழிகாட்டுதல்களை வழங்கும் எஃப்டிசி (ஃபெடரல் டிரேட் கமிஷன்) எனப்படும் ஃபெடரல் வர்த்தக ஆணையம், பின்வரும் முத்திரைகளை வழங்குகிறது.
- காரட் தரச்சான்று முத்திரை அந்த நகையின் தூய்மையை உரைக்கிறது.
- 10k – 10 காரட் தங்கமானது அமெரிக்காவில் உள்ள மிகக்குறைந்த பட்ச காரட் கொண்ட தங்கம் . இது மற்ற உலோகங்களுடன் 41.7% தங்கம் உள்ளது.
- 14 காரட் - 14 காரட் தங்கமானது தங்க நகைகளிலேயே மிகவும் பிரபலமான தங்கத்தின் தூய்மை. இதில் 58.5% சதவீதம் தங்கம் உள்ளது
- 18 காரட்- 18 காரட் தங்கத்தில் 75% சதவீதம் தங்கம் உள்ளது
- 24 காரட்- நீங்கள் காணும் தங்கத்திலேயே மிகவும் தூய்மையானது 24 காரட் தங்கம். இதில் 99.9% சதவீதம் தங்கம் உள்ளது
- நகைக்கடைக்காரரின் பெயர் அல்லது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட டிரேட்மார்க் (பெயர், குறியீடு அல்லது முதல் எழுத்துக்கள்) அல்லது தர நிர்ணயத்திற்கான பொறுப்பை ஏற்றுள்ள மற்ற நிறுவனத்தின் பெயர் ஆகியவை காரட் தர முத்திரைக்கு அருகில் பொறிக்கப்பட்டிருக்கும்.
தொடர்புடையது: தங்கம் வாங்குவதற்கு முன்பு அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்
அமெரிக்காவில் நீங்கள் தங்கம் வாங்கியிருந்தால், அதனை நீங்கள் இந்தியாவிற்கு எடுத்துச்செல்வதாக இருந்தால், இந்த அவசியமான விதிமுறைகளையும் ஒழுங்குமுறைகளையும் படித்து தெரிந்து கொள்ளவும்: தங்கத்துடன் பயணம் செய்யும்போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்.