Published: 10 ஆக 2017

தங்கத்தின் மினுமினுப்புடன் ச ஷ்டிபூர்த்தியை சிறப்பானதாக மாற்றுங்கள்

தென்னிந்தியாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் விழா ச ஷ்டிபூர்த்தி. ஒரு மனிதன் 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது. இதற்கு சஷ்டியப்தபூர்த்தி என்றும் பெயர். சஷ்டி என்றால் 60, அப்த என்றால் ஆண்டுகள், பூர்த்தி என்றால் நிறைவடைந்தது என்று பொருள். 60 ஆண்டுகள் நிறைந்தவர் என்று சமஸ்கிருதத்தில் சொல்வதையே சஷ்டியப்தபூர்த்தி என்று அழைக்கிறோம். ஒரு மனிதரது வாழ்வில் ஒரு முக்கியமான கட்டம் முடிந்து அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கே சஷ்டியப்தபூர்த்தி என்று பெயர்.

ஒரு நபரும் அவரது மனைவியும் எடுத்துக்கொண்ட திருமண உறுதிமொழிகளை புதுப்பிப்பதற்கே இந்த விழா நடத்தப்படுகிறது.

 

ச ஷ்டிபூர்த்தியை கொண்டாடும் தம்பதியருக்கு மிகவும் புனிதமான இனிய பரிசாக இருப்பது தங்கம். எப்படிப்பட்ட பரிசுகள் அளிக்கவேண்டும் என்ற உங்கள் பரிசீலனைக்காக சில கருத்துக்களை அளித்துள்ளோம்.:

 
  1. தங்க நாணயங்கள்

    இத்தகைய தருணங்களில் இலக்ஷ்மி அம்மன் அல்லது பகவான் கணேசரின் உருவம் பொறித்த தங்க நாணயங்களை வழங்குவது ஏற்ற பரிசு. ஒரு தம்பதியரின் வெள்ளி விழா கொண்டாட்டங்களுக்கு உண்டான அதே முக்கியத்துவம் இந்த விழாவிற்கும் உண்டு. நீங்கள் விழா நாயகர்களின் பெயர் பொறித்த தங்க நாணயங்களையும் அவர்களுக்கு வழங்கலாம். இந்திய தங்க நாணயம் பிரபலமான பரிசுப் பொருள். இதற்கு 24 காரட் தூய்மையான தங்கமும் 999 நேர்த்தியும் உள்ளது. இந்திய தங்க நாணயத்தில் ஒரு புறம் அசோகச்சக்கரமும் மறுபுறம் மகாத்மா காந்தி உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொண்டவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இவ்வாறு அமையப்பட்டுள்ளது.

    Gold Coin

  2. தங்க விக்கிரகங்கள்

    இந்த விழாவின் ஆன்மீக முக்கியத்துவத்தைக் குறிக்கும் பொருட்டு கிருஷ்ண பகவான், ராதை, பகவான் கணேஷர், இலக்ஷ்மி அம்மன் ஆகியோரின் தங்க விக்கிரகங்களை அளிக்கலாம்.

    Ganeesha Idol

  3. அவளுக்காக தங்க நகைகள்

    Old Woman

    தங்க நகையை எந்த வடிவத்தில் அளித்தாலும் ஒரு பெண்ணுக்கு அது விலைமதிப்பற்ற பரிசுப்பொருள் . அவள் பொக்கிஷமாக வைத்திருக்கும் தொகுப்பில் சேர்ந்து கொள்ளும். பெறுபவரின் முதல் எழுத்துக்கள், பெயர் அல்லது விருப்பமான கருத்து ஆகியவை இந்த நகைகளில் பொறிக்கப்பட்டிருக்கும். ஒருவருக்கு இதனை பரிசாக அளிக்கும்போது நாம் விரும்பிய விளைவு கிடைக்கும். சிறப்பு தருணங்களிலோ அல்லது அன்றாடமோ இத்தகைய மோதிரங்களை அணிந்து கொள்ளலாம். எவ்வளவு அழகாக உள்ளதோ அவ்வளவு பயன் அளிக்கக்கூடியது. தங்கம், தங்க நெக்லஸ், தங்க கைச்செயின், தங்க தோடுகள் என்று பாரம்பரிய நகைகளாகவோ அல்லது மெட்டி அல்லது மூக்குத்தி என்று சிறிய பொருட்களையோ பரிசாக அளிக்கலாம்.

    Ring

  4. அவருக்கான தங்க பொருட்கள்

    தங்கத்தால் உருவான சட்டை ஊக்குகள் கம்பீரமாக தோற்றமளிக்கும். ஒருவரது மணிக்கட்டில் கம்பீரமாக இவை அமர்ந்திருக்கும். திருமணங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள், சமூக, மதரீதியான வட்டங்கள் ஆகியவற்றில் இதனை அணிந்துகொள்ளலாம். ஒருவரது பணிஓய்வு நிகழ்ச்சிக்கு நினைவுகூரத்தக்க பொலிவை அளிக்க இது பயன்படுகிறது.

    Tie Pin

    தங்கத்தால் ஆன ‘டை பின்’(Tie pin) எப்போதுமே இனிதானது. நவநாகரிகம் நீங்காதது. ஒருவரது ஸ்டைலை உணர்த்த தங்க ‘டை பின்னை’ பரம்பரை பரம்பரையாகக் கொண்டு செல்லலாம். பல்வேறு சிறப்பு தருணங்களில் அணிந்துகொள்ளலாம். உங்களது பிரியமான நபருக்கு சிறப்பாக .

    Keychain

    அளிக்கும் வகையில் ஏதாவது சிறப்பு குறியீடுகளை வழங்கலாம். உங்களுடன் அவர் மேற்கொண்ட பயணம், படித்தல் என்று ஏதாவது ஒரு நினைவை பகிர்ந்துகொள்ளலாம்.

    ச ஷ்டிபூர்த்தியன்று ஒருவர் அணிந்துகொள்ளும் உடையில் சட்டை பொத்தான்களையோ அல்லது குர்தா பொத்தான்களையோ தங்கத்தில் வைக்கலாம். இத்தகைய பொத்தான்கள் பூ வடிவத்திலிருந்து பல்வேறு மாதிரிகளில் நுண்ணிய வேலைப்பாடுடன் வருகின்றன. பிங்க் நிறம், பச்சை நிறம், மஞ்சள் நிறம், வெள்ளை நிறம் என்று பல்வேறு தங்க நிறங்களில் இவை வெளிப்படுகின்றன

    Traditional Button

  5. தங்க தொகுப்புகள்

    தங்க முலாம் பூசப்பட்ட பேனாக்கள், பேனா முனைகள், தங்க நிறமிடப்பட்ட பூந்தொட்டிகள், புகைப்பட சட்டங்கள்,தஞ்சாவூர் ஓவியங்கள் என்று ஒரு தம்பதியருக்கு அவர்களது பொன்விழாவின் போது அளிக்க எண்ணற்ற பரிசுப்பொருட்கள் உள்ளன.

    Golden Pen

    பாரம்பரிய நகையின் விளைவு தங்க கைக்கடிகாரங்களில் கிடைக்கும். ஒரு முதிய சீமானுக்கு பிராண்டட் தங்க கடிகாரத்தை அளிப்பது சாலச் சிறந்தது.

    Golden Watch

    மின்னுவதெல்லாம் பொன்னல்ல. ஆனால் பொன் மின்னும்போது ஒப்பிடும் எல்லாமே மங்கலாகும். சஷ்டிபூர்த்தி போன்ற சிறப்பு தருணங்கள் ஒருவரது வாழ்வில் ஒருமுறை வருபவை. இந்த அற்புதமான நாளைக் கொண்டட ஏற்ற பரிசு தங்கமாகும்.