Published: 11 செப் 2017
மும்பையின் செல்வச் செழிப்பு மிக்க கோவில் – ஸ்ரீ சித்திவிநாயகர்
மும்பையில் நீங்கள், "கணபதி பாபா" என்று கூச்சலிட்டால், "மோரியா" (கூட்டமாக) என்ற பதிலை நிச்சயமாகப் பெறுவீர்கள், அந்த அளவுக்கு கணேஷ் பகவானின் புகழ் பரவியுள்ளது.
மும்பையில் உள்ள அனைத்து புனித ஸ்தலங்களிலும், ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் என்பது மிகவும் பிரபலமானதாகும் மற்றும் அடிக்கடி பார்க்கப்படும் கோவிலாகும். இந்தக் கோவிலானது கணேச பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இது குழந்தை பாக்கியம் இல்லாத டூபாய் பாட்டீல் என்பவரால் 1801ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. குழந்தை பெற முடியாத பெண்கள், தங்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக விநாயகருக்கு பிரார்த்தனை செய்யும் இடமாக, இந்தக் கோவிலை டூபாய் கட்டினார்.
ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் என்பது பாலிவுட் நடிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிற தேசிய மற்றும் சர்வதேச பிரமுகர்கள் விஜயம் செய்யும் திருத்தலம் ஆகும். இதன் காரணமாக, இந்த புனிதமான வழிபாட்டு தலம், மும்பையின் மிகவும் பாதுகாக்கப்பட்ட இடங்களில் ஒன்றாக உள்ளது. இந்த கோவிலானது காலப்போக்கில் விரிவடைந்து, இப்போது மும்பையில் உள்ள மிகவும் பணக்கார மற்றும் மிகவும் பிரபலமான கோவிலாக உள்ளது.
ஆரம்பத்தில் சிறிய வழிபாட்டு ஸ்தலமாக இருந்த ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயமானது, 1993-ல் ஒரு பிரமாண்டமான கோவிலாக மாற்றப்பட்டது. இந்த நம்பமுடியாத மாற்றத்தில், கோவிலின் கட்டிடக்கலையானது பழங்கால கட்டிடக்கலை பாணியை பின்பற்றப்பட்டது. ஆலயத்தின் செழிப்பானது அதன் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் என்பது இப்பொழுது தங்கம் பூசப்பட்ட கலசத்தைக் (கோபுரம்) கொண்ட பல கோண அமைப்பு ஆகும். மையத்தில் உள்ள முக்கிய கலசமானது கணேஷ் விக்கிரகத்திற்கு மேலே கோவிலின் உச்சியில் அமைந்துள்ளது. இந்த 1500 கிலோகிராம் எடை கொண்ட கலசமானது தங்கத்தால் பூசப்பட்டிருக்கும், இது பிஸியான மும்பையின் பரபரப்பான நேரங்களில், தூரத்திலிருந்தே கணேஷ் பகவானை பக்தர்கள் தரிசிக்க உதவுகிறது. கோவிலின் மற்றொரு கலசமும் தங்கத்தால் பூசப்பட்டுள்ளது, இது கருவறை வளாகத்தின் மேல் எண்கோண வடிவில் உட்புறத்தில் தங்கத்தால் மூடப்பட்டிருக்கும், இது விநாயகர் சிலைக்கு வலதுபக்கத்தில் மேற்புறத்தில் அமைந்துள்ளது.
மற்ற நன்கொடைகளில், கோவிலானது தங்கக் கட்டிகள் மற்றும் ஆபரணங்கள் உட்பட அதிக அளவிலான தங்கத்தைப் பெறுகிறது. சில நேரங்களில், இந்த மஞ்சள் உலோகத்தை ரொக்கமாக மாற்றுவதற்கு, பக்தர்களால் நன்கொடையாக அளிக்கப்பட்ட ஆபரணங்களை கோவில் நிர்வாகத்தினர் ஏலம் விடுகிறார்கள். முக்கியமாக அட்சய திருதியை, சதுர்த்தி போன்ற பண்டிகை நாட்களில், புகழ்பெற்ற பிரபலங்களின் முன்னிலையில் ஏல விற்பனைக்கு கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்கிறார்கள். 2016-17ஆம் ஆண்டுகளில், இந்த கோவில் நிர்வாகத்தால் 11 இலட்ச ரூபாய் அளவிலான தங்க நகைகள் ரொக்கமாக மாற்றப்பட்டது.
தங்க ஏலம் தவிர, 2016-ல், ஸ்ரீ சித்திவிநாயகர் கோவிலானது அரசாங்கத்தின் தங்க நாணயமாக்கல் திட்டத்தில் (ஜிஎம்எஸ்) பங்கேற்கும் முதல் கோவிலாக மாறியது. கோவில் கமிட்டியானது, ஜிஎம்எஸ்-ன் கீழ் 12 காரட்டில் இருந்து 24 காரட் வரையிலான 50 கிலோ கிராம் தங்கத்தை பாரத ஸ்டேட் வங்கி கிளை ஒன்றில் டெப்பாசிட் செய்தது. இந்த நடுத்தர-கால அளவிலான வைப்புக்கு 2.25 சதவிகிதம் வட்டியை கோவில் சம்பாதிக்கிறது, மேலும் இந்தக் கோவிலானது அதை 12 மாத காலத்திற்கு நீட்டிக்கும் உத்தேசத்தில் உள்ளது. இந்த நேர்மறையான நடவடிக்கையானது, கோவில்களிடமிருந்தும் மற்ற புனித இடங்களிலிருந்தும் தீவிரமான பங்கேற்பதை வலியுறுத்தும் இந்திய அரசால் வரவேற்கப்படுகிறது.