Published: 26 அக் 2018
புதிதாக அப்பா ஆனவருக்கான தங்க முதலீட்டு வழிகாட்டி
நீங்கள் அப்பா ஆனதும், உங்களின் நிதி முன்னுரிமைகள் மற்றும் முதலீட்டு எல்லைகள் மாறத் தொடங்குகின்றன.
உங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்காக உங்களிடம் பணம் இருந்தால் மட்டும் போதாது; அவர்களின் எதிர்காலத்திற்காக நீங்கள் திட்டமிடவும் தொடங்க வேண்டும். அவர்களின் உயர் கல்வி, கெரியர், பயணம் – அவர்களின் நல்வாழ்க்கைக்காக நீங்கள் போதுமானதை திட்டமிட்டு செய்வதை உறுதிசெய்ய விரும்புகிறீர்கள். வாழ்க்கையின் இந்த சவாலான பகுதியில், நம்பகமான ஒரு முதலீடு உங்களுக்குத் தேவை.
தலைமுறை தலைமுறையாக ஒரு நம்பகமான முதலீடு
இந்தியக் குடும்பங்கள், தலைமுறை தலைமுறையாக தங்கத்தை சார்ந்திருந்தது. பரந்த வாய்ப்புகளைக் கொண்ட இந்த முதலீடு, பல வடிவங்களில் கிடைப்பதுடன், பல்வேறு வாழ்க்கை இலக்குகளைத் திட்டமிடவும் உதவுகிறது. பணவீக்கத்தால் உண்டாக்கக்கூடிய நஷ்டத்திலிருந்து பாதுகாக்கக்கூடியதாக தங்கம் நிரூபித்த வரலாறு உள்ளது. விலைவாசி உயரும்போது தங்கமும் விலை உயரும் போக்கைக் கொண்டுள்ளது. கடந்த 50 ஆண்டு காலத்தில் பணவீக்கத்தின் போது, பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்ததும் தங்கத்தின் விலை ஏறுமுகமானதையும் முதலீட்டாளர்கள் அறிவர். ஒரு சிலர் தங்கத்தை கட்டிகள் மற்றும் நாணயங்களில் முதலீடு செய்ய விரும்புகின்ற வேளையில், பலர் தங்க நகைகள் வாங்குவதைத் தேர்ந்தெடுக்கின்றனர். காலப்போக்கில், பல குடும்பங்கள், எக்ஸ்சேஞ் ட்ரேடட் ஃபண்ட்ஸ் (ETFs) அல்லது டிஜிட்டல் தங்கம் போன்ற பரிணாம வளர்ச்சி பெற்ற தங்க முதலீடுகளை நாடுகின்றனர்.
இருப்பில் உள்ள தங்கம்
இந்தியாவில் தங்கமானது, சொத்தைப் பாதுகாத்து, அடுத்தத் தலைமுறையினருக்கு கொடுக்கக் கூடிய ஒரு வழியாக பார்க்கப்படுகிறது. ஒரு அப்பாவாக, உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் செய்யக்கூடிய மிகவும் நம்பகமான முதலீடுகளில் ஒன்றாக இருக்கும். உங்களிடம் சிறிதளவு பணம் எஞ்சியிருக்கும் பொழுதெல்லாம் தங்க நாணயங்களில் முதலீடு செய்வதை நீங்கள் பரிசீலிக்கலாம். இன்று, ஹால்மார்க் தங்க நாணயங்கள், 1 கிராம், 2 கிராம் மற்றும் 5 கிராம் ஆகிய சிறு எடையளவுகளில் கிடைப்பதால் நீங்கள் பெருந்தொகையை சேமிப்பதற்காக காத்திருக்கத் தேவையில்லை. இவற்றை, பின்னாளில் உங்கள் குழந்தையின் உயர் கல்வி, திருமணம் அல்லது வேறு ஏதாவது முக்கிய நிகழ்வுகளுக்காக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
தங்க முதலீட்டின் புதிய வடிவங்கள்
உங்களுக்கு குழந்தை பிறந்துள்ளது என்பது கூடுதல் செலவுகளை உள்ளடக்கியது. ஆக, உங்களிடம் எப்போதும் கையிருப்பில் அதிக ரொக்கம் இருக்க வாய்ப்பில்லை. சிறு தொகைகளை ஒழுங்கான இடைவெளிகளில் முதலீடு செய்து, பின்னாளில் பயன் தரக்கூடிய ஒரு முதலீட்டு வழி தான் உங்களுக்குத் தேவைப்படும். மிகக் குறைந்த அளவில் தங்கம் வாங்க தொடங்குவதற்கு, PhonePe மற்றும் Paytm அளிக்கும் கோல்டு எக்ஸ்சேஞ் ட்ரேடட் ஃபண்ட்ஸ் (ETFs) அல்லது டிஜிட்டல் தங்கம் போன்றவை ஒரு எளிய வழியாகும்.
கோல்டு ETF ஆனது, இதர மியூச்சுவல் ஃபண்ட்கள் போலவே தங்கத்தை வெளிப்படுத்தப்படாத சொத்தாகக் கொண்டு செயல்படுகின்ற ஒரு எல்லைகளற்ற முதலீட்டு திட்டம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், உங்கள் குழந்தையுடன் கூட்டாக ஒரு டீமேட் கணக்கைத் துவங்கி, முதலீடு செய்ய வேண்டியது தான். கோல்டு ETFகள் ஒரு சில பயன்களை அளிக்கின்றன. இந்த யூனிட்கள் டீமெட்டீரியலைஸ்டு வடிவத்தில் வைக்கப்படுவதால், அவற்றை கையிருப்பில் வைக்கக்கூடிய நிஜ தங்கமாக வாங்குதல், செய்கூலி மற்றும் சேமித்துவைத்தல் என எந்தப் பிரச்சினையும் இல்லை. ETF யூனிட் என்பது 1 கிராம் தங்கத்தைக் குறிக்கிறது. ஆக, தாங்கத்தகு அளவில் முதலீடு செய்ய நீங்கள் துவங்கலாம்.
இது தவிர, நீங்கள் டிஜிட்டல் கோல்டு முதலீட்டையும் ஆராயலாம். ஆப்-அடிப்படையிலான பேமெண்ட் மற்றும் மொபைல் வாலட் சர்வீஸ் வழங்குநர்கள், தங்கத்தில் முதலீடு செய்வதை மேலும் பிரபலமாக்கியுள்ளனர். காரணங்கள் பின்வருமாறு:
- இவை தங்க முதலீட்டை எளிதாகவும் வசதியாகவும் உங்கள் விரல்நுனியைக் கொண்டே செய்ய வைக்கின்றன. ஒரு பச்சிளம் குழந்தைக்கு அப்பா என்றால், உங்கள் கைகள் எதையாவது சுமந்துகொண்டே இருக்கும். டிஜிட்டல் கோல்டு வாங்குவது, முதலீடு செய்வதற்கான ஒரு எளிய வழியாகும்.
- இவற்றால், உங்களின் ஆன்லைன் தங்கக் கணக்கில் சேமிக்கும் வகையில், ரூ.1 அல்லது 0.001 கிராம் அளவிற்கு குறைவாகவும் தங்கம் வாங்க முடியும். இந்த லோ எண்ட்ரி பாயிண்ட் உங்களின் முதலீட்டு திட்டத்திற்கு உச்சபட்ச நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
- விலையை லைவ் ஃபீடில் காண முடிவது விவேகமாக முடிவெடுப்பதற்கு வசதியாகவும், வெளிப்படைத்தன்மை உள்ளதாகவும் இருக்கிறது.
- இதை நீங்கள் சேர்த்துக்கொண்டே போகலாம்; இதர முதலீடுகள் போல் வர்த்தகமும் செய்யலாம்; அல்லது 99.9% தூய்மையான தங்கத்தை கையிருப்பாகவும் எடுத்துச் செல்லலாம்.
ஒரு அப்பா என்ற முறையில் உங்களுடைய பல்வேறு நிதித் தேவைகளை நிறைவேற்ற தங்க முதலீடுகளால் முடியும் – தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் போன்ற பாரம்பரிய விருப்பத்தேர்வுகள் முதல் கோல்டு ETFs, கோல்டு ஃபண்ட்ஸ் மற்றும் டிஜிட்டல் கோல்டு போன்ற நவீன முதலீட்டு விருப்பத்தேர்வுகள் வரை உள்ளன. உங்கள் சொத்து வளர்கிறது மற்றும் தாக்குப்பிடிக்கிறது, எனவே குழந்தையின் எதிர்காலம் குறித்த உங்களின் கனவு, உங்கள் குழந்தைக்கு உண்மையாகவே கிடைக்கும் என்ற உத்தரவாதம் உங்களுக்கு நிம்மதி அளிக்கும். நீங்கள் எம்மாதிரியான அப்பாவாக இருக்க விரும்புகிறீர்களோ, அம்மாதிரியே இருப்பதற்காக உங்களுக்கு நீங்களே அளிக்கும் பரிசாக தங்கம் இருக்கட்டும்.