Published: 21 செப் 2018
திறன் வாய்ந்த முகலாய மீனாகாரி கலையின் தோற்றம் மற்றும் வரலாறு.
இந்தியாவுக்கு முகலாயர்களால் பாரம்பரிய கலை வடிவமான மீனாகாரி வேலைப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?
பழமையான, நுணுக்கமான மீனாகாரி கலையில் ‘மீனாகாரர்கள்’ என்றழைக்கப்படும் கைவினைக் கலைஞர்களால் தங்கத்தின் மேற்பரப்பில் பிரகாசமான வண்ணங்களால் எனாமல் வேலைப்பாடு செய்யப்படுகிறது.
மிக நுணுக்கமான உலோக அலங்கார வேலைப்பாடாக கருதப்படும் இந்தக் வண்ணப்பூச்சு கலையில் மிகச் சிறந்த திறமை, துல்லியம், மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தேவைப்படுகிறது.
இந்தியாவில் மீனாகாரி வேலைப்பாடு எப்படி அத்தகைய முக்கிய பாணி நகைகளாக மாறியது என்பதன் பின்னணியில் உள்ள கதையைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
சுருக்கமாக சொல்லப்போனால், தங்கத்தின் மீனாகாரி வேலைப்பாட்டை செய்யும் செயல்முறையில், பல்வேறு எனாமல் வண்ணங்கள் மற்றும் தூளாக்கப்பட்ட கனிமங்களை பதிக்கும் முன், நகையின் மேற்பரப்பில் வெவ்வேறு வடிவமைப்புகள் செதுக்கப்படுகின்றன. அழகான நுணுக்கமான வடிவமைப்புகள் திறமையான வடிவமைப்புகளை உருவாக்கும் துடிப்பான நிறங்களை காட்டுகிறது, அவை எடுப்பாகவும் பாரம்பரியமாகவும் தோற்றமளிக்கின்றன.
பாரசீக படைப்ப
‘மீனாகாரி’ என்கிற வார்த்தை பாரசீக வார்த்தையான மினா அல்லது மினூவிலிருந்து பெறப்பட்டது. அதற்கு அந்த மொழியில் ‘சொர்க்கம்’ என்று பொருள். இன்றளவும் கூட நவீன மீனாகாரி நகைகளில் பாரசீக பாணியின் தாக்கத்திற்கான தடயங்கள் இருப்பதைக் காணலாம்.
மீனாகாரி வேலைப்பாடு இந்தியாவிற்கு அறிமுகம்
16 ஆம் நூற்றாண்டில், ஷாஜகானின் அரசவையில் இருந்த ராஜா ராம் சிங் என்கிற மேதை ராஜஸ்தான் மாநிலத்துக்கு மீனாகாரி கலையை அறிமுகப்படுத்தினார். இந்தக் கலையின் நிபுணத்துவம் கைவினைக் கலையின் அழகால் தாக்கம் ஏற்பட்டு, மேவார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பட்டறைகள் அமைக்க லாஹுரிலுள்ள திறமையான கைவினைக் கலைஞர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டது. விரைவில், ராஜஸ்தான் இந்தியாவில் மீனாகாரி வர்த்தகத்தின் தலைநகரமாக உயர்ந்தது
ஆரம்பத்தில் மீனாகாரி கலை சுவர்கள், தூண்கள் மற்றும் மேற்கூரைகளை அலங்கரிக்க கட்டிடக்கலையில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் சாம்ராஜ்ஜியத்தின் பேகம்களுக்கு இந்தக் கலையின் மீது பேரார்வம் வளர்ந்ததால் அவர்களின் நகைகளின் ஒரு பகுதியாக வேண்டுமென்று கேட்டனர்.
மேம்பட்ட ராஜஸ்தான்
ராஜஸ்தானில் ஆதிக்கத்தைப் பெற்ற பிறகு, மீனாகாரி பாரம்பரியம் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் இதரப் பகுதிகளான லக்னோ, பஞ்சாப் மற்றும் டெல்லியிலும் பரவத் தொடங்கியது. விரைவில் இந்தியா முழுவதிலும் தங்கத்தின் மீது வண்ணப்பூச்சு செய்யும் கலை புகழ்பெற்றது, தொழில்நுட்பத்திலும் பாணியிலும் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் அதன் சொந்த சிறப்பம்சம் இருந்தது.
லக்னோ மீனாகாரர்களிடையே பச்சை மற்றும் நீல வண்ணப்பூச்சு வேலைப்பாடு பிரபலமாக இருந்தது, அதே சமயத்தில் பனாரஸ் கைவினைக் கலைஞர்கள் தாமரை பதக்கத்துடன் மங்கிய இளஞ்சிவப்பு அல்லது தங்க-ரோஸ் சாயல் நிறங்களை முதன்மையாகப் பயன்படுத்தினர். இந்தக் குறிப்பிட்ட பாணி 17 ஆம் நூற்றாண்டில் பாரசீக கைவினைக்கலைஞர்களால் லக்னோ அவாத்தின் அவைக்கு வருகை தந்த போது அறிமுகப்படுத்தப்பட்டது, பிரதாப்கர் என்பது மீனாகாரி கலையில் கண்ணாடியில் வண்ண்ம தீட்டும் பாணியாக அறியப்படுகிறது. அதேசமயம், ஜெய்ப்பூரில் திகைப்பூட்டும் நகைகள் காணப்படுகின்றன, அங்கு இன்றளவும் தொடர்ந்து அளவுக்கதிகமான மீனாகாரி நகைகள் தயாரிக்கப்படுகிறது.
முகலாயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் மீனாகாரி வேலைப்ாடுகள் இந்தியா முழுவதும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது மேலும் இன்றளவும் கூட நகைப் பிரியர்களால் நாடு முழுவதும் பரவலாகக் கொண்டாடப்படுகிறது.
உலகெங்கிலும் வெவ்வேறு ஆட்சியாளர்கள் மற்றும் கலாச்சாரங்களின் தாக்கத்தால் இந்த கலை பல்வேறு பொருட்களின் மீது காட்சிப்படுத்தப்படுகிறது, வங்கிகள், அலங்கார ஆடை ஊசிகள், காதணிகள் மற்றும் இதர நகைகள் முதல் கோவில் இருக்கைகள், நாற்காலிகள், நகைப்பெட்டிகள், புகைப்படச் சட்டங்கள் மற்றும் சாவிக் கொத்துக்கள் வரை பல்வேறு பொருட்களில் இன்றும் சந்தையில் கிடைக்கிறது. இந்த வகை நகைகளை செய்ய தங்கம் முதன்மையான உலோகமாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக தங்கள் தோற்றத்தை மேம்படுத்திக் காட்டிக் கொள்ள விரும்பும் இந்தியர்களுக்கு விருப்பமானதுமாகும்.