Published: 17 ஆக 2017
மணமகளாகும் பெண்ணுக்கு தங்கம் வாங்கும்போது கேட்கப்பட வேண்டிய கேள்விகள்
உங்களுக்கு எந்த காரட் மதிப்பு கொண்ட தங்க மோதிரம் சிறந்தது?
தங்கத்தின் சுத்தத்தையும் துல்லியத்தையும் வரையறுக்க பயன்படும் உலகளாவிய அலகு காரட். ஒரு தங்கத்தால் செய்யப்பட்ட பொருளில் எத்தனை சதவீதம் தங்கம் பயன்பட்டுள்ளது என்று உணர்த்துவதே காரட்.
எடுத்துக்காட்டாக, 24 காரட் எனப்படுவது தங்கத்தின் சுத்தமான வடிவம். ஏனெனில் அதன் 24 அங்கங்களும் தங்கம்தான். இது மிகவும் மென்மையானது. வளையக்கூடியது. தங்க கட்டிகளும் நாணயங்களும் செய்யப் பயன்படுவது.
22 காரட் தங்கத்தில் 22 பங்கு தங்கமும் 2 பங்கு மற்ற உலோகமும் கலந்திருக்கும். இந்த உலோகம் வெள்ளியாகவோ, துத்தநாகமாகவோ மற்ற உலோகக் கலவையாகவோ இருக்கும். இதனால் தங்கம் சற்று கெட்டியாகவும் நீடித்து உழைக்கக்கூடியதாகவும் இருக்கும். இந்தத் தன்மைதான் ஒரு நகைக்கு தேவையான தன்மை. நீங்கள் அன்றாடம் அணிந்தாலும் பல ஆண்டுகள் நீடித்திருக்கும்.
தொடர்புடையது: நீங்கள் தங்கம் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை சொற்கள்எந்த நிற தங்கத்தை நான் வாங்க வேண்டும்?
பல உலோகங்களுடன் தங்கம் கலந்திருப்பதால் பல்வேறு வடிவங்களில் மோதிரங்கள் கிடைக்கும். சுத்தமான தங்கம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். வெள்ளை தங்கம் என்பது வெள்ளி அல்லது பலேடியம் கலந்த தங்கக் கலவை. ரோஸ் நிற அல்லது பிங் நிற தங்கமானது தங்கமும் தாமிரமும் கலந்த கலவை. ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்க உங்களுக்கு நேரமாகினால், நீங்கள் இரட்டை அடுக்கு மோதிரத்தை தேர்ந்தெடுக்கலாம். அதில் இரண்டு நிறங்கள் இருக்கும்.
மோதிரத்தின் வடிவம் எப்படி இருக்க வேண்டும்?தங்கத்தின் மென்மையை மனதில் வைத்துக்கொண்டு அடிக்கடி அணிந்து அதனை பயன்படுத்தாமல் இருப்பதானால் மொத்தமான பட்டை உள்ள மோதிரத்தை அணியுங்கள். இதனால் அந்த மோதிரமானது நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கும்.
மோதிரத்தை நீங்கள் உங்களுக்கென பிரத்யகேமாக வடிவமைக்க வேண்டுமா?
உங்களுக்குப் பிடித்த உலோகம், கற்கள், பெயர் பொறித்தவை போன்று உங்களுக்கென பிரத்யேகமாக செய்யப்பட்ட தங்க மோதிரத்தை எதனாலும் அடித்துக்கொள்ள முடியாது. உங்களது திருமண நாள், முதல் எழுத்துக்கள் அல்லது ஓர் அர்த்தமுள்ள பேச்சு ஆகியவை பொறிக்கப்பட்ட ஒரு மோதிரத்தை நீங்கள் வைத்துக்கொள்ளலாம். உங்களது சிறப்பு நபர் அல்லது தருணத்திற்கேற்றவர்க்கு தங்கத்தை பரிசளிப்பதற்காக உங்களுக்கென பிரத்யேகமாக உள்ள சில வழிகள் இதோ.
உங்களது மண நாள் அழைப்பிதழ்கள் விரைவில் வெளி வரும் என்பதற்கான நம்பிக்கைகள் இதோ.!