Published: 21 ஆக 2018
ராஜபுதன நகைகள் – ராஜஸ்தானி கலாசாரத்தின் அடையாளம்
7 முதல் 19ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்த ராஜபுதன வம்சமானது, திறமை மிகுந்த கலைஞர்களை கொண்டிருந்தது. இவர்கள் அதிஅற்புதமான தங்க நகை டிசைன்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தினர். ராஜஸ்தானை பிறப்பிடமாகக் கொண்ட ராஜபுதன தங்க நகைகள், இந்தியாவிலேயே மிக நுட்பமான நகை பாணிகளில் ஒன்றாகும். ராஜபுதன பாணியிலான தங்க நகைகள், அவற்றின் அரச பாரம்பரியம் மற்றும் உயரிய கலாசாரத்திற்கு பிரதிபலிப்பதுடன், இன்றளவும் ராஜஸ்தானி கலாசாரத்தில் ஒரு அங்கமாகத் திகழ்கிறது. இதோ ராஜபுதன தங்க நகைகளில் பிரபலமான சிலவற்றைப் பார்ப்போம்:
ஹத்ஃபூல்
விரல்களுக்கான நகை என்ற பொருளில் பஞ்சாங்காலா என்றும் அறியப்படும் ஹத்ஃபூல் ஆனது, ஒரு பெரிய பூ வடிவம் பதித்த (ஜடாவ் அல்லது மீனாகாரி வேலைப்பாட்டால் ஆனது) ஒரு தங்க மோதிரம் ஆகும். இது மணிக்கட்டில் அணியப்பட்டிருக்கும் பிரேஸ்லெட் உடன் பிணைக்கப்பட்டு, உள்ளங்கையின் மேற்புறத்திற்கு அழகு சேர்க்கும். இந்த ஆபரணத்தை, குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடுதல் அல்லது சக பணியாளர்களுடன் கொண்டாடுதல் போன்ற செமி-ஃபார்மல் நிகழ்ச்சிகளில் அணிவது உங்களின் தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்க்கும்.
ஆட்
ராஜபுதன நெக்லஸ் என்றும் அறியப்படும் ஆட் என்பது ஒரு பாரம்பரிய செவ்வக அல்லது சதுர வடிவ கழுத்தில் இறுக்கமாகப் பொருந்தும் நெக்லஸ் (சோக்கர்) ஆகும். குந்தன் (நவரத்தின கற்கள் பதித்த நகை) ஆல் செய்யப்பட்ட இந்த சோக்கரில், கழுத்தின் பின்புறம் இறுக்க பயன்படுத்துவதற்கு இரட்டை கயிறுகள் பிணைக்கப்பட்டிருக்கும். இந்த ஆட், ராஜஸ்தானி திருமணங்களில் தலையாயது. ஏனெனில், இது மணமகன் வீட்டாரால், மணமகளுக்கு அளிக்கப்படுவதாகும். இன்று, ஆட் ஆனது, சமகாலத்து டிசைன்களிலும் கிடைக்கிறது மற்றும் புதுயுக மணப்பெண்களால் அணியப்படுகிறது.
பாஜுபண்ட்
ராஜஸ்தானி மணமகள்கள் அணியும் வங்கியானது (பாஜுபண்ட் மற்றும் அங்கடா என்றும் அழைக்கப்படுகிறது) மீனாகரி வேலைப்பாட்டால் வடிவமைக்கப்பட்டதாகும். ஆரம்பத்தில் ஆண்களால் அணியப்பட்ட பாஜுபண்ட், பிறகு பெண்களிடையே பிரபலமானது. ராஜபுத்திரர்களின் ஆட்சிக்காலத்தின் போது முதலை மற்றும் பாம்பு உருவ டிசைன்களே பிரபலமாகயிருந்தன, ஆனால் தற்பொழுது அவை நவீன பாணிகளிலும் கிடைக்கின்றன.
டக்டி அல்லது கர்தானி
இடுப்பில் அல்லது வயிற்றில் அணியும் டக்டி ஆனது பொதுவாக தங்கத்தாலும், சில சமயங்களில் குந்தன் (நவரத்தின கற்கள் பதித்த நகை) வேலைப்பாடுகளாலும் செய்யப்பட்டிருக்கும்.
போர்லா அல்லது ரக்டி
பெரும்பாலும் மணி போன்ற வடிவம் அல்லது கோளக வடிவத்தில் நெற்றிச் சுட்டி என்ற குறியடையாளமுள்ள போர்லா ஆனது, தங்கத்தாலும், சில சமயங்களில் குந்தன் (நவரத்தின கற்கள் பதித்த நகை) வேலைப்பாடுகளாலும் செய்யப்பட்டிருக்கும்.
நத்
ஒரு வட்ட வடிவ தங்க மூக்கு வளையமான நத், பொதுவாக மூக்கின் இடதுபுற துவாரத்தில் அணியப்படுகிறது. இது ஒரு தங்க செயின் மூலமாக இடதுபுற காதுடன் பிணைக்கப்பட்டிருக்கும். சிறிய வட்ட வடிவ பேட்டர்ன்கள் முதல் பாரிய குந்தன் வேலைப்பாடுகள் வரையில், நத் ஆனது வெவ்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது மற்றும் பெரும்பாலான வட இந்திய மணமகள்களால் விரும்பி அணியப்படுகிறது.
கான்பலி அல்லது ஜாலெ
ராஜஸ்தானி தங்க ஜிமிக்கைகள் அல்லது காதணிகள் வட இந்தியாவில் மிகவும் பிரபலம். குந்தன் அல்லது மீனாகாரி வேலைப்பாடு மற்றும் புராதன டிசைன்கள் இவற்றின் விசேஷத்திற்கும் தனித்துவத்திற்கும் காரணமாகும்.
இன்றைக்கும், ராஜபுதன நகைகள், சில அழகிய டிசைன்களுடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளில், நகைப்பெட்டிகளில் மதிப்புவாய்ந்த சேகரிப்பாக உள்ளன.