Published: 10 செப் 2018
ஒரு திட்டமிடப்பட்ட சொத்தாக தங்கத்தின் தொடர்பு
மதிப்பின் இருப்பிடம், நம்பிக்கை மற்றும் உணர்வுகளை தாங்குபவர், பணம் , தங்கம் மாறுபட்ட மனிதர்களிடம் மாறுபட்ட பொருளைக் கொண்டிருக்கிறது. அதன் பன்முகத்தன்மையை தவிர, மிகப்பெரிய வளர்ச்சியை இந்திய பொருளாதாரம் கடந்த 20 ஆண்டுகளில் சந்தித்ததன் முக்கிய காரணம் நுகர்வு மற்றும் முதலீட்டு அடிப்படையில் தங்கத்தின் விலை கணிசமான அளவு உயர்ந்ததாகும்.
எந்த வகையான நிதிகளிலும் தங்கம் நான்கு அடிப்படை பங்கை வகிக்கிறது:
- நீண்டகால முதலீட்டில் சிறந்த லாபமீட்டும் வளமாக உள்ளது
- அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் போது முதலீட்டின் மீதான பாதுகாப்பின்மையை குறிப்பாக குறைக்கிறது.
- கடன் ஆபத்தற்ற எளிதில் பணமாகக்கூடிய சொத்தாகும்.
- இது மதிப்புகளின் இருப்பிடமாக ஃபியட் கரன்சிகளை போல சிறப்பாக செயலாற்றியது. ஃபியட் நாணயம் என்பது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பணமாகும். இது திட சரக்குகளின் ஆதரவை கொண்டதல்ல. வியாபாரப் பொருள் செய்யப்பட்ட மூலப்பொருளை காட்டிலும் தேவை மற்றும் விநியோகத்திற்கு இடையிலான உறவில் ஃபியட் நாணயங்கள் அவற்றின் மதிப்பைப் பெறுகின்றன.
சமீபத்திய உலக தங்க கவுன்சில் ஆய்வு வெளிப்படுத்துவது என்னவெனில் கடைசி பத்து ஆண்டுகளில் ஓய்வூதிய நிதியில் முதலீடு தொகுப்பில் தங்கமானது சராசரியாக 10 சதவிகிதம் கூடியுள்ளது. லாபத்தை அதிகப்படுத்தி நிலையற்ற தன்மையை குறைத்து ஆபத்து சரிகட்டப்பட்ட முதலீடாக இதன் விளைவுகள் உள்ளது.
நுகர்வும் முதலீடும் இயக்குபவர்கள்
தங்கச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இரண்டு கவர்ச்சிகரமான அம்சங்களை தருகிறது: (அ)பற்றாக்குறை மற்றும் (ஆ) நிறுவன முதலீட்டாளர்களை ஈர்க்க போதுமான பெரிய சந்தை – மத்திய வங்கிகளும் இதில் அடங்கும். நீண்டகால அடிப்படையில் தனிப்பட்ட மற்றும் தேசிய செல்வம் விரிவடைவதால், ஒரு முதலீடாகவும் நகையாகவும் தங்கத்திற்கான தேவையும் அதிகரிக்கிறது.
தங்கத்தின் பல்வகைப் பயன்பாடுகள் – ஆடம்பரப் பொருட்கள், மின்னனு தொகுப்புகள், முதலீடு அல்லது பல்வேறு சொத்துக்கள் - தேவையில் பன்முகத்தன்மையை அளிக்கிறது.. பொருளாதார நெருக்கடிகளின் போது தங்க விநியோகம் நிலையாகவும் சீராகவும் தொடர்ச்சியாக இருப்பது கூடுதல் அம்சமாகும்.
ஆபத்து தவிர்த்த முதலீடு சார்ந்த அம்சம் உலகெங்கிலுமுள்ள மத்திய வங்கிகளுக்கு கவர்ச்சிகரமான முன்மொழிவாக இருக்கிறது. 2010 முதல் மத்திய வங்கிகளின் அதிகரிக்கும் சந்தைப் பொருளாதாரம் தங்கத் தேவைகளின் நிகர கொள்முதலாக இருக்கிறது.
தங்கம் ஒரு பாதுகாப்புக் கவசம்
தங்கத்தின் விலை கடந்த 30 ஆண்டுகளில் முறையான அபாயத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. எப்போதெல்லாம் சந்தை தவறான சீர்த்திருத்தங்களால் பாதிக்கப்படுகிறதோ, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துறைகளில் இழப்பு ஏற்படுகிறதோ அப்போது ஆற்றல்மிக்க பாதுகாப்பு அரணாக உள்ளது.
எப்பொழுது அமெரிக்கப் பொருளாதாரம் பரந்த அளவில் வீழ்ச்சியையும் பின்னடைவையும் சந்தித்ததோ அதன் விளைவாக தங்கத்தின் விலையானது மேலும் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் அடைந்தது. 2015ஆம் ஆண்டு கிரீசில் ஏற்பட்ட பொருளாதார வெடிப்புக்குப் பின் ஐரோப்பாவுக்கு வெளியில் உள்ள முதலீட்டாளர்கள் பாதிப்பை குறைத்தனர்.
பெரும்பாலான சரக்குகளை விட தங்கம் எப்போதும் எளிதில் விலை குறையாததாக பங்கு அட்டவணையில் உள்ளது. 2007 -2017 காலத்தில் உணரப்பட்ட விலை மாறுபாடுகள் பங்குகள் ,பங்கு அட்டவணை மற்றும் ஆகியவற்றின் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒப்பீட்டு வரைபடத்தில் தங்கம் வெளிப்படையானதாக உள்ளது.
தங்க விலையின் உண்மை நிலைவரம் விற்பனை செயல்பாடு பங்கு விலையை விடவும் பல மடங்கு நீடித்த விரைவான விற்பனை வாய்ப்பை கொண்டுள்ளது .மற்ற சொத்து முதலீட்டினை விடவும் பாதுகாப்பானதாக தங்கத்தையே முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர்.
லாபமீட்டும் வளமாக தங்கம்
தங்கத்தின் மதிப்பு நிலையற்ற காலங்களில் நன்றாக நிறுவப்பட்டுள்ளது. ஆனால் குறைவாக அறியப்பட்ட தகவல் என்னவெனில் நீண்ட கால முதலீட்டு வருவாயில் பங்குகளோடு ஒப்பிடுகையில் உலோகங்கள் சிறந்தது. பத்திரங்கள் மற்றும் சரக்குகளை விட தங்கம் லாபகரமானது.
தங்க வர்த்தகம் பெரிய மற்றும் பணச் சந்தையில் அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இன்றும் பற்றாக்குறையுள்ள தங்கச் சுரங்க உற்பத்தி தொழிலில் கடந்த 20 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 1.6 % வளர்ச்சி அடைந்துள்ளது. நுகர்வோர், முதலீட்டாளர் மற்றும் மத்திய வங்கி ஆகியவை தங்கத்தை நிலையான சொத்து திட்டமாக அதிக அளவு வர்த்தக பங்கேற்பு செய்வதால் தேவை உயர்கிறது. தங்க நுகர்வானது இந்தியா சீனா மத்திய மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் உலகளாவிய தேவையில் 60% ஐ கொண்டுள்ளது.
தங்க விலை 14% உயரும்போது முதலீட்டாளர்கள் 3% பணவீக்கம் உயரும் போது பாதுகாக்கப்படுகிறார்கள் .
பண மதிப்பு உயரும் காலத்தில் தங்க நிலவரம் சிறப்பாக இருப்பதாக ஆக்ஸ்போர்டு பொருளாதார ஆய்வு வெளிப்படுத்துகிறது.
இந்த சொத்து எல்லா சொத்துக்களையும் தோற்கடிக்கிறது
நிறுவன முதலீட்டாளர்கள் பெருமளவில் குறுகிய கால லாபங்களை அதிகரிக்க விரும்புகின்றனர். தனி நபர்கள் குறைந்த அளவு ஆபத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். மேலும் நீண்ட கால அளவில் லாபம் ஈட்டுவதை விரும்புகின்றனர். உங்களுக்கு ஒரு எளிதில் பணமாகும் சொத்தாக, தங்கம் வைத்திருப்பது - ETF களாகவோ, தங்கக் கட்டிகளாகவோ, நாணயங்களாகவோ எந்த வடிவத்தில் இருந்தாலும். – அது தனிநபர்கள், நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றிற்கு இது நெகிழ்வுதன்மையை வழங்குகிறது. ஏனெனில் தேவைப்படும் காலங்களில் விரைவில் பணமாக மாற்றக் கூடியதாக உள்ளது.
நீண்டகால அடிப்படையில் ஒரு ஆபரணமாக மட்டுமின்றி மிகச் சிறந்த முதலீட்டு வாய்ப்பாகவும் உள்ளது.
கட்டுரை ஆதாரம் - உலக தங்க கவுன்சில் ஆய்வறிக்கை - திட்டமிடப்பட்ட சொத்தாக தங்கத்தின் தொடர்பு.