Published: 21 ஆக 2018
தூய்மை தொழில்நுட்பத்தில் தங்கத்தின் பங்கு
பல தசாப்தங்களாக தங்கமானது தொழில்நுட்பத் துறையின் ஒரு முழுமையான அங்கமாக இருந்துவருகிறது. ஆனால், நானோ தொழில்நுட்ப பரிணாமத்துடன் தங்கமானது மேலும் பல நம்பிக்கையளிக்கின்ற மற்றும் வர்த்தக ரீதியில் சாத்தியமான தொழில்நுட்பப் பயன்பாடுகளில் இடம்பெற்றது.
தூய்மை தொழில்நுட்பத்தில் தங்கம் உதவக்கூடிய பல்வேறு வழிகள் பின்வருமாறு:
ஒரு கிரியாஊக்கியாக
பாதரசத்தை நீக்குதல்
இரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் தொழிற்துறையில் தங்க நானோதுகள்கள் மிகச்சிறந்த கிரியாஊக்கியாக செயல்படுகின்றன. வினைல் குளோரைடு மோனோமெர் (VCM) கலவையை மேம்படுத்த உதவிய தங்க அடிப்படையிலான முதல் கிரியாஊக்கி 2016ல் வடிவமைக்கப்பட்டது. VCM ஆனது பாலிவினைல் குளோரைடு (PVC) உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. பாலிவினைல் குளோரைடு ஆனது இண்டஸ்ட்ரியல் குழாய்கள் தயாரிக்கவும், மின் கேபிள்களுக்கு காப்புறையாகவும் பயன்படுத்தப்படுகிறது.
நீண்ட காலமாக, பாதரச அடிப்படையிலான கிரியாஊக்கிகள், பிவிசி கலவையை உருவாக்க பயன்படுத்தப்பட்டு வந்தன. VCM இன் பெருமளவிலான உற்பத்தியை கணக்கிலெடுத்துக்கொண்டால், பாதரசத்தை கணிசமான அளவில் பயன்படுத்தும் ஒரேயொரு துறையாக இருந்துவந்தது. தங்க அடிப்படையிலான கிரியாஊக்கியின் வருகையானது உற்பத்தியாளர்களுக்கு ஒரு தீவிர நச்சு இரசாயன மூலகத்தை கைவிட்டு, தூய்மையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான ஒரு மாற்றத்தை அரவணைக்க உதவுகிறது.
மேலும், இந்த கண்டுபிடிப்பானது, மெர்க்குரி குறித்த மினமட்டா சாசனத்திற்கு (இது அனைத்து தொழிற்சாலைகளும் 2022 ஆம் ஆண்டளவில் பாதரசம் பயன்படுத்தாததாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது) இந்தத் தொழில்நுட்பமானது எவ்வளவு விரைவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதைப் பொருத்து, இந்த மாபெரும் கண்டுபிடிப்பானது, இப்பிராந்தியத்தில் 1-5 டன் அளவிற்கான மொத்தத் தேவையை உருவாக்க முடியும்.
தூய்மை வழி மின்சார உற்பத்தி
தங்க அடிப்படையிலான கிரியாஊக்கிகளின் மற்றோர் புதுயுகப் பயன்பாடு எரிபொருள் செல்கள் ஆகும். எரிபொருள் செல்கள் என்பன சுற்றுச்சூழலுக்கு இணக்கமான, தண்ணீரை மட்டுமே உடன்விளை பொருளாக உருவாக்கும் மின் உற்பத்தி அலகுகள் ஆகும். ஆனால், அவற்றின் செயல்பாட்டிற்கு தூய்மையான ஹைட்ரஜன் ஓட்டம் அவசியமாகும்; குறைந்த வெப்பநிலையில் செயல்படத்தக்க ஒரு கிரியாஊக்கி இல்லாமல் இதனைப் பராமரிக்க முடியாது.
தங்க அடிப்படையிலான கிரியாஊக்கிகள் இந்தத் தேவையினை பூர்த்தி செய்வதில் முன்னிலை வகிப்பதால், மின்னுற்பத்தியில் தங்கத்தின் பயன்பாட்டிற்கு ஒரு பிரமாண்ட வாய்ப்பளவைக் கொண்டிருக்கிறது.
தொடர்புடையது:அறிவியலில் தங்கம் பயன்படும் 10 வழிகள்
சூரிய ஆற்றலின் அறுவடை
1960 முதல் கண்ணாடியின் மீது ஒரு மெல்லிய பூச்சாக தங்கம் பயன்படுத்தப்பட்டுவருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
இதன் அகச்சிவப்பு-பாதுகாப்புத் திறனானது, கட்டிடங்கள் அதிக சூடேறாமல் தவிர்ப்பதன் மூலம், மின் செலவைக் குறைக்கிறது.
குறைக்கிறது இதே கருத்தை முன்வைத்து, சூரிய ஆற்றலை அறுவடை செய்ய தற்போது சோலார் செல்களில் தங்க நானோ துகள்கள் முனைப்புடன் சேர்க்கப்படுகின்றன. பெரோவ்ஸ்கைட் என்ற மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சோலார் செல்களில் தங்க மின்முனைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அலைபேசிகள், தொலைகாட்சிகள், கால்குலேட்டர்கள் என ஏறக்குறைய எல்லாவற்றிலும் தங்கத்தை மின்னணுவியல் துறை பயன்படுத்துவது போலவே, சோலார் துறையும் தங்கப் பயன்பாட்டினை அரவணைத்துள்ளது. நானோ துகள்கள் வடிவமோ அல்லது பூச்சு வடிவமோ, இனி சோலார் பேனல்களில் தங்கம் பெருமளவில் பயன்படுத்தப்படும் சாத்தியத்தை தற்போது நம்மால் முன்கூட்டியே உணர முடியும்.
தொடர்புடையது: தங்கம் பற்றிய அறிவியல்
தொழிற்துறை வினையூக்கத்தில் தங்கத்தின் பயன்பாடு, எரிபொருள் செல்கள் தயாரிப்பு – இறுதியாக சோலார் தொழில்நுட்பம் ஆகியவை தூய்மை தொழில்நுட்பம் என்ற ஒரு புதிய அலையை ஏற்படுத்துகின்ற ஆற்றல் கொண்டிருக்கின்றன. இந்த காலகட்டத்தில், இது அத்தியாவசியமான தேவையும் ஆகும்.