Published: 20 பிப் 2018
தங்கச் சட்டைகள்
சட்டைகள் தங்க புரோகேட் அல்லது ஜர்தோஸி அல்லது தங்க துணியால் செய்யப்படுகின்றன. ஆனால், முழுக்க முழுக்க தங்கத்தாலேயே செய்யப்பட்ட சட்டை என்றால்?
21 ஆம் நூற்றாண்டில், ஒன்றல்ல, இரண்டு இந்தியர்கள், மகாராஷ்ட்ரத்தை சேர்ந்தவர்கள், தங்கத்தால் செய்யப்பட்ட சட்டையின் பெருமைமிகு உரிமையாளர்களாக இருக்கிறார்கள். முழுக்க முழுக்க தங்கத்தாலேயே செய்யப்பட்ட சட்டை.
2016ம் ஆண்டு கொல்லப்பட்ட இந்தியத் தொழிலதிபரான தத்தாத்ரை புகே, 15 பொற்கொல்லர்கள், பல நாட்கள் பணியாற்றி உருவாக்கிய தங்கத்திலான சட்டையை வைத்திருந்தார். கலப்படமில்லாத, தூய்மையான மின்னும் தங்கத்தால் உருவாக்கப்பட்டிருந்தது, இந்தத் தங்கச்சட்டை. கொலையான சமயத்தில், நகைக்கடை உரிமையாளர் ஒருவரிடம் பத்திரப்படுத்தி வைத்திருந்ததால் அந்தத் தங்கச் சட்டை தப்பித்தது.
இன்னொருவர் பங்கஜ் பராக். தொழிலதிபராக இருந்து அரசியல்வாதியாக ஆனவர். உலகத்திலேயே மிகவும் விலையுயர்ந்த சட்டையின் உரிமையாளர் என்ற வகையில் இவர் 2014ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். 2014ம் ஆண்டில், தூய்மையான தங்கத்தில் தயாரிக்கப்பட்ட அந்த சட்டையின் மதிப்பு ரூ.98,35,099/-. அதன் தற்போதைய மதிப்பு ரூ.1 கோடியைத் தாண்டும்.
புகேயின் சட்டையானது ஒரு கவசம் போன்ற பாங்குடன் 14000 தங்க புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்டு, 100.000 ஸ்பான்கிள் -ஐ குறுக்கு இழையாக நெய்யப்பட்டு சட்டையை பிணைப்பதற்கு ஸ்வர்வோஸ்கி பொத்தான்கள் சேர்த்து தயாரிக்கப்பட்டது. இந்த நபர் பெரும்பாலும் புகைப்படங்களில் இந்தத் தங்கச் சட்டை அணிந்து, குறைந்த 10 கனத்த தங்கச் சங்கிலிகள், 6 பிரேஸ்லெட்கள் மற்றும் ஒவ்வொரு விரலிலும் குறைந்தது 2 மோதிரங்களாவது அணிந்தபடி காணப்படுவார்.
பராக்கின் சட்டையை பொருத்தவரை, அது 4 கிலோவிற்கு அதிகமான எடையுடன், அதன் மதிப்பு ரூ.1.30 கோடியை தாண்டும் என்று தெரியவருகிறது. இந்தத் தங்கச் சட்டை மட்டுமின்றி, புகேவை போலவே இவரும் பல தங்கச் சங்கிலிகள், பெரிய தங்க மோதிரங்கள் அணிவது வழக்கம். தங்க மொபைல் கவர் எடுத்துச் செல்வதும் தங்க பிரேமிலான கண் கண்ணாடி அணிவதும் உண்டும்.
பராக்கிற்காக, இந்தத் தங்கச் சட்டை, 20 திறமையான் பொற்கொல்லர்களின் 3,200 மணி நேர உழைப்பின்ல் தங்க இழைகளைப் பிணைத்து உருவாக்கப்பட்டது. இந்த சட்டையை துவைக்க (கையால் மட்டும்) முடியும் மற்றும் கொடிக்கயிற்றில் காயவைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தர்ப்பவசமாக கிழிந்தாலோ, சேதமுற்றாலோ, இதனை சரி செய்ய முடியும் என்பதோடு, உடலுக்குப் பொருந்தும் வகையில் இதனை மாற்றியமைக்கவும் முடியும்.
பார்வையாளர்களை நெருங்கவிடாமல் தடுக்கவும், பாதுகாப்பிற்காகவும் புகே, (கொல்லப்படுவதற்கு முன்பு வரை) மற்றும் பராக் ஆகியோர் பாதுகாவலர்களுடனே வலம் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு தங்கச் சட்டைகளும் நெளியக்கூடியதாகவும், உராய்வினை தடுப்பதற்கு லைனிங் உடன் ஆயுட்கால உத்தரவாதத்தையும் கொண்டுள்ளன.