Published: 20 பிப் 2018
தங்கப் பறவை நிச்சயம் உயரப் பறக்கும்
நேர்த்தியான கோஹினூர் வைரம் முதல் காமசூத்ரா போன்ற முற்போக்கான எழுத்துகள் வரையிலும், அதிநவீன விவசாயத் தொழில்நுட்பங்கள் முதல் அதி அற்புதமான இயற்கைக் காட்சிகள் வரை, 17ஆம் நூற்றாண்டு இந்தியாவில் எல்லாம் இருந்தன. அந்தக் காலத்தில், உலகின் செல்வச்செழிப்பு மிக்க நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியா, தங்கப் பறவை என்று அழைக்கப்பட்டது, இதற்கு சரியான காரணம் இருந்தது.
இந்தியாவில் கிழக்கு இந்திய கம்பெனி கால் வைத்து அதன் பிறகு ஆங்கிலேயர் வசம் செல்லும் வரை உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்து வந்தது. விவசாய வளர்ச்சி பரந்து விரிந்து பெருமளவில் இருந்தது, அயல்நாடுகளுடனான வர்த்தகம் எப்போதும் போல அதிகமாக இருந்தது மேலும் ஆன்மீக மற்றும் தத்துவ அறிவின் மையமாக முக்கியத்துவம் பெற்றுவந்தது, பல வகைகளிலும் இந்தியா முன்னணியில் இருந்தது.
1 AD முதல் 1000 AD க்கு இடையில் இந்தியாதான் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தது. உலக வர்த்தகத்தில் 2% பங்களிக்கும் இன்றையை இந்தியாவின் மோசமான நிலை போலன்றி, 1500ADல் உலகப் பொருளாதாரத்தில் நம்முடைய பங்களிப்பு 24.5% என்ற அளவில் ஐரோப்பாவின் பங்களிப்புக்குச் சமமாக இருந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒருமுறை இவ்வாறு கூறினார், "பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிரான நமது மனக்குறைகளுக்கு திடமான அடிப்படை இருந்தது. உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 1700ல் கிட்டத்தட்ட ஐரோப்பாவின் பங்களிப்புக்கு சமமாக இருந்த 22.6% லிருந்து 1952ல் 3.8% என்ற மிகக் குறைந்த அளவுக்கு வந்துவிட்டது."
துணிகள், நறுமணப் பொருட்கள், முத்துக்கள், சர்க்கரை மற்றும் இரும்பு உலோகங்கள் ஆகியவற்றின் முக்கிய ஏற்றுமதியாளராக இந்தியா இருந்தது (இவற்றில் பெரும்பாலான பொருட்களுக்கு இப்போதும் அப்படியே உள்ளது). அப்படியான பெரும் வளங்கள் எளிதாக கிடைத்ததில், இந்தியாவுக்கு அதிகமாக ஆதரவு தேவைப்படவில்லை.
வர்த்தகம் பற்றி நாம் அறிந்த முந்தைய காலம் 800 BC, அப்போது வர்த்தகங்கள் உருவாக்கப்பட்டு நிறுவனங்கள் கட்டமைக்கப்பட்டன. உண்மையில், 5-BC நூற்றாண்டின் எழுத்துக்களில், வர்த்தகர்களின் கூட்டுறவு அமைப்பான ஸ்ரெனி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது, அவர்கள் மூலப் பொருட்களை வாங்குவது, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் தரத்தையும் அவற்றின் விலை நிர்ணயம் ஆகியவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
இந்தக் காலத்தில் கட்டப்பட்ட நினைவுச் சின்னங்களையும் உருவாக்கப்பட்ட கலைப்பொருட்களையும் கருத்தில் கொள்ளுங்கள் - செங்கோட்டை, தாஜ்மகால், தங்க மயிலாசானம் இன்னபிற. முகலாயர்கள் ஆட்சியின் போது இந்தியாவின் வருமானம் கிரேட் பிரிட்டனின் கருவூலத்தை விட 17.5 மில்லியன் பவுண்டுகள் அதிகமாக இருந்தது.
உலகில் பெரும்பான்மையோர் பண்டமாற்று முறைப் பொருளாதாரத்தைப் பின்பற்றிவந்த நிலையில், பணம் அடிப்படையிலான வர்த்தகத்தை உருவாக்கிய சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. காலப்போக்கில், வரலாறு வருத்தமளிக்கும் வகையில் மாறியது, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாடும் இந்தியா மீது படையெடுத்து அதை ஆட்சி புரிந்தது. நாம் நம்மிடையே ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்ததால், நாட்டின் பெருவளங்கள் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது.
இன்று, இந்தியா சரியான பாதைக்குத் திரும்பியுள்ளது, உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. மேலும் முன்பிருந்தது போல் ஒரு தங்கப் பறவையாக ஜொலிக்க முயற்சிக்கிறது.