Published: 09 பிப் 2018
தென்னிந்தியாவிலிருந்து குறியீட்டு தங்க நகைகள்
இந்தியாவில் உள்ள நகைகள் அணிகலன் சேர்ப்பதற்கும் மேலானதாகும். இது மட்டுமின்றி, இவை மத ரீதியான மற்றும் சடங்கு ரீதியான முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளன. அணிகலன்களின் உலோகங்கள், அளவுகள் மற்றும் வடிவங்கள் ஆகியவை சமூகம், சாதி, இனம், இவை மட்டுமின்றி ஒரு மாநிலம் அல்லது பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. தங்கத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள் தினசரி அடிப்படையில் போற்றப்படுகின்றன மற்றும் அணிந்துகொள்ளப்படுகின்றன. இது தவிர, சடங்கு முறைமை ஆபரணங்கள், பண்டிகைகள் மற்றும் இன்னப்பிற சிறப்பு நிகழ்ச்சிகளுக்காகவும் வடிவமைக்கப்பட்டன.
’இந்தியாவின் தங்க பூமி’ எனப்படும் தென்னிந்தியாவிலிருந்து கிடைக்கப்பெற்ற ஒப்பனைக்கூறுகளே இந்திய ஆபரணங்களின் மதிப்புமிக்க மற்றும் புகழ்பெற்ற வரலாற்றின் பெருமை ஆகும். இந்தக் கட்டுரையின் மூலமாக, தென்னிந்தியாவின் குறியீட்டு நகைகளை உங்களுக்கு அறிமுகம் செய்யப்போகிறோம்.
நாக சடை -
Image source
கூந்தல் நாகம் என்ற பொருள் உடையது. இது ஒரு பாம்புகள் பின்னிப்பிணைவது போன்றதொரு சடை. சடை என்பது முடியையும் நாக என்பது நாகத்தையும் குறிக்கிறது. ஒரு பெண்ணின் முழங்காலின் பின்புறம் வரை தொங்கும் கூந்தலானது ஒரு கருநாகத்திற்கு ஒப்பிடப்படுகிறது.
தென்னிந்திய பெண்கள் தங்கள் சடைகளில் பூக்களால் அலங்கரித்துக் கொள்வர். ஆகவே, பெரும்பாலான கூந்தல் ஆபரணங்கள் பூக்களைப் போலவே வடிவமைக்கப்படுகின்றன.
தாலி அல்லது மாங்கல்யம் –
Image Source
தென்னிந்தியா முழுவதும் திருமணமான பெண்ணிற்கு ஒரு பாரம்பரிய அடையாளமாக மங்கள்சூத்ரா விளங்குகிறது. திருமணத்தின் போது மணமகன், இந்தத் தாலியை, மணமகள் கழுத்தில் கட்டுவார். இதனால், அந்த மணப்பெண் சுமங்கலி, அதாவது, ராசியான திருமணமாகியப் பெண் என்று குறிக்கப்படுவார். உள்ளூர் பாரம்பரியத்தை ஒட்டி தயாரிக்கப்பட்ட பதக்கத்துடன் கூடிய தங்கச்சரடு தாலி எனப்படுகிறது.
கலட்டா உரு –
இந்த நெக்லெஸை திருமண நாளன்று மட்டுமே மணப்பெண் அணிந்திருப்பார் – இந்த எடை மிக்க ஆபரணத்தை தினந்தோறும் அணிந்திருக்க இயலாது. தென்னிந்தியப் பெண்கள், இந்த கலட்டா உருவை தங்களின் மகன் திருமணத்தின் போது மற்றும்/அல்லது கணவரின் 60 ஆம் பிறந்த நாளின் போது அணிந்திருப்பார்கள்.
காசு மாலை –
Image Source
இந்த நெக்லெஸ் ஆனது, ஆண் மற்றும் பெண் கடவுள் உருவங்கள் பொறித்த 100 தங்கக் காசுகளைக் கொண்டு செய்யப்பட்டதாகும்.
பாம்படம் –
Image source
இந்தக் காதணிகள் வளையம், கோளம், கூம்பு முதலான பல்வேறு ஜியோமெட்ரிக் வடிவங்களில் வடிவமைக்கப்பட்டது. இதில் பம்பா என்பது பாம்புகளையும், ’பாம்படம்’ என்பது பாம்புப் படம் என்பதையும் குறிக்கும். இந்தக் காதணிகள் பார்ப்பதற்கு பாம்புகளைப் போன்றே இருக்கும்.
இந்தக் காதணிகள் எடை மிகுந்தவை, இதை அணிவதற்கு காதின் மடல்கள் ஒரு விசேஷமான கத்தியால் துளைக்கப்படும், கடைசியில் பாம்படம் காரணமாக துளை பெரிதாகிவிடும்.
முடிச்சு – இந்தக் காதணிகள், பின்னிப் பிணைந்த பாம்புகளின் தோற்றமுடையவை. தென்னிந்தியாவில் மிகப்பிரபலமான ஆபரணங்களில் இவையும் அடங்கும். இந்த வளையங்களை உருவாக்க தங்கக் கம்பிகள் பின்னப்படுகின்றன.
தென்னிந்தியாவின் ஊரகப் பகுதிகளில் நீண்ட காது துளைகளுடன் பெண்களை சர்வசாதாரணமாக காண முடியும். தூயத் தங்கத்தில் உருவாக்கப்படும் இந்த எடை மிக்க காதணிகள், விசேஷமான கத்தியால் காது மடல்களில் துளையிடப்பட்டு பொருத்தப்படும்.
குறவர் இனத்தைச் சார்ந்த பெண்கள், இளம் வயதிலேயே தங்களின் காது மடல் துளைகளை பெரிதாக்குவதற்காக பெரிய அளவிலான காதணிகளை அணியும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
தண்டட்டி என்பது திருமணமாகாத பெண்கள் அணியும் பெரிய அளவிலான காதணிகள் ஆகும். இந்தக் காதணிகள் தங்கத் தகடால் செய்யப்பட்டு பின்னர் காய்ச்சிய அரக்கால் நிரப்பப்படும்.
இவை தங்கத்திற்கும் பாரம்பரியத்திற்கும் இடையிலான வலிமையான உறவினை வெளிப்படுத்துகின்ற ஒரு சில கலை நயமிக்க வேலைப்பாடுகள் ஆகும். இந்த கலை நயமிக்க வேலைப்பாடுகளில் ஒரு சில வழக்கொழிந்து வருகின்றன அல்லது நவீன ஆபரணங்களால் மாற்றப்படுகின்றன. ஆனாலும், தென்னிந்தியாவில் உள்ள கைவினைஞர்களின் குடும்பக்குழு நடத்திவரும் பாரம்பரிய நிறுவனங்களில் இவற்றை இன்றும் உங்களால் காண முடியும்.