Published: 20 ஆக 2018
தங்கப் பரிசுகளுக்கு வரி விதிப்புகள்
தங்கப் பரிசுகள் மங்களகரமானவையாகவும், மதிப்பு மிக்கதாகவும், விலையுயர்ந்ததாகவும் கருதப்படுகிறது. ஆனால் அதன் வரி விதிப்புகள் என்ன? அதைப் பற்றிய ஒரு பார்வை.
‘பரிசு’ வரையறுத்தல்ஆரம்பத்தில் ‘பரிசு’ என்கிற வார்த்தை வரி நோக்கத்திற்காக பரிசு வரிச் சட்டம் 1958 இன் கீழ் பயன்படுத்தப்பட்டது. பின்னர் ரத்து செய்யப்பட்டது. நிதிச் சட்டம் 1998 க்கு நன்றி. பின்னர், நிதிச்சட்டம் 2004 பரிசு வரிக்கு புத்துயிர் கொடுத்து அதை வருமான வரி அமைப்பில் வைத்தது.
அந்தச் சட்டம் என்ன சொல்கிறது?
இந்தச் சட்டத்தைப் பொறுத்த வரை, பரிசுகள் இப்படி இருக்கலாம்:
- சட்டப்பூர்வ ஒப்பந்தம்
- அசையாச் சொத்துக்கள் (சொத்து)
- அசையும் சொத்துக்கள் – பத்திரங்கள், நகைகள், தொல்பொருள் சேகரிப்பு, மற்றும் கலை வேலைப்பாடுகள், மற்றவை
விதிவிலக்குகள் என்ன?
- உறவினர்களிடமிருந்து பரிசுகள்: வாழ்க்கைத் துணைவர், சகோதரர்கள், பெற்றோர், அல்லது யாரேனும் நேரடி குடும்ப உறுப்பினர், ஒரு இந்துக் கூட்டுக் குடும்பத்திலிருந்து யாராவது தனிநபர்.
இருப்பினும், பரிசுகளிலிருந்து பெறப்பட்ட எந்த வருமானமும் வரி விதிப்புக்குட்பட்டது!
- திருமணப் பரிசுகள் அது நண்பர்களிடமிருந்து பெற்றாலோ அல்லது குடும்பத்திலிருந்து பெற்றாலோ அவற்றிற்கு வரிவிதிப்பு கிடையாது. பரிசை பெறுபவர் பரிசு பத்திரத்தின் மீது திருமணத் தேதியை (அல்லது நெருக்கமான தேதி) பெறும்படி அறிவுறுத்தப்படுகிறது, இது பரிசு கொடுப்பவரிடமிருந்து பெறுபவர் எந்தப் பணப் பரிமாற்றமும் இல்லாமல் பெறும் பரிசு பரிமாற்றத்தை விளக்கும் ஒரு ஆவணமாகும், இது பரிசு கொடுப்பவர், பெறுபவர், மற்றும் பரிசளிக்கப்பட்ட தங்க நகையின் விளக்கம் ஆகியவற்றை அடையாளப்படுத்துவதால் பரிசுடன் நாணயத்திற்கான அடையாளமாக கையடக்க சான்றாக வருகிறது. இது வேறொரு நபர் சொந்தமுடைமை தாக்கல் செய்வதற்கு எதிராக இரட்டிப்பு பாதுகாப்பைத் தருகிறது. இது தொடர்பான ஒவ்வொரு வரிவிதிப்பு ஆண்டிலும் பரிசு பெற்றவரின் மொத்த ஆண்டு வருமானம் பரிந்துரைக்கப்பட்ட வரையறையைத் தாண்டும் போது மட்டுமே நகையைப் பற்றிய விவரஙகள் வெளியிடப்பட வேண்டும். 2016 – 2017 நிதியாண்டுக்கு வரையறை இந்திய ரூபாய் மதிப்பில் 5 இலட்சம் ஆகும். மேலும் தம்பதியரின் பெற்றோரோ அல்லது உறவினர்களோ தங்கத்தை பரிசாகப் பெற்றால் அதற்கு வரிவிதிப்பு உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- உயில் அல்லது மரபுரிமை வழியாக பெற்ற பரிசுகள்
இருந்தாலும் இவை உங்களிடம் இருப்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்:
- உயிலின் நகல்
- பெறப்பட்ட நகையின் மதிப்பீட்டுச் சான்றிதழின் நகல் அல்லது
- அந்த நகைகளை அணிந்துள்ள இறந்த தனிநபரின் புகைப்படங்கள்
வரையறைகள்:
உறவினர்கள் அல்லாதவர்களிடமிருந்து இந்திய ரூபாய் மதிப்பில் 50,000 அல்லது அதற்கு குறைவான மதிப்புடைய பரிசுகளைப் பெற்றிருந்தால் பரிசு பெற்றவர் வரி செலுத்த வேண்டியதில்லை. நகை இந்திய ரூபாய் மதிப்பில் 50,000 க்கும் அதிகமான மதிப்புடையதாக இருந்தால், ஒட்டுமொத்தத் தொகையும் ‘இதர ஆதாரங்களிலிருந்து வந்த வருமானம்’ என்கிற பிரிவின் கீழ் வைக்கப்பட்டு, மொத்த வரிவிதிப்புக்குட்பட்ட வருமானத்தின் கீழ் இணைக்கப்படுகிறது, மேலும் உங்கள் வருமான வரி அடுக்கின் படி வரி விதிக்கப்படுக்கிறது.
கூடுதலாக, பரிசளிக்கப்பட்ட தங்கம் மூன்று வருடங்களுக்குள் விற்கப்பட்டால், கிடைக்கும் எந்த லாபமும் பொருந்தக்கூடிய வருமான வரி அடுக்கு விகிதத்தில் குறுகிய கால மூலதன லாபத்தைத் தூண்டும். மூன்று வருடங்களுக்குப் பிறகு விற்றால் கிடைக்கும் லாபங்கள் நீண்ட கால மூலதன லாபங்களாகக் கருதப்பட்டு 20.6% வீதத்தில் விலை குறியீட்டுடன் வரி விதிக்கப்படுகிறது. குறியீட்டு விகிதம் மத்திய நேரடி வரி வாரியத்தால் (சிபிடிடி) அறிவிக்கப்படுகிறது. அது நம்ப முடியாததாக இருந்தால், பரிசு கொடுத்தவர் பரிசை வாங்கிய தேதியன்று இருந்த நியாய சந்தை விலையே அடக்க விலையாக இருக்கும்.
ஆர்ஈசிஎல் (ஊரக மின்மயமாக்க கார்ப்பரேஷன் லிமிடெட்) பத்திரங்கள் அல்லது என்ஹெச்ஏஐ (இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்) பத்திரங்கள் அல்லது ஒரு குடியிருப்பு வீட்டு சொத்தில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட கால மூலதன லாபத்திற்கான வரிவிலக்கைத் தாக்கல் செய்யலாம். இந்த விதிவிலக்குகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.
சொத்து வரி
- வெளிப்படுத்தப்பட்ட வருமானம் அல்லது விவசாய வருமானம் போன்ற விலக்களிக்கப்பட்ட வருமானம், அல்லது வீட்டுச் சேமிப்பிலிருந்து பெறும் வருமானம் அல்லது சட்டப்படி வாரிசுரிமையிலிருந்து பெற்ற வருமானம் போன்ற வருமானங்களில் வாங்கப்பட்ட நகை/தங்கத்திற்கு எந்தவிதமான வரியும் விதிக்கப்படாது.
- உயிலின் படி கிடைத்த சொத்தான உங்கள் தங்கத்திற்கு மரபுரிமைக்கு சான்றாக உயிலின் ஒரு நகலை வைத்திருங்கள்.
- சொத்து வரி நீக்கப்பட்டிருந்தாலும், காலியான இரண்டாம் வீடு, நகர்ப்புற நிலம், தங்கம், தனிப்பட்ட கார், ஓவியங்கள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் போன்ற சொத்துக்களின் மொத்த மதிப்பு 30 இலட்சத்திற்கு அதிகமாக இருந்தாலோ அல்லது வரிவிதிக்கக்கூடிய வருமானம் 50 இலட்சத்திற்கு மேல் இருந்தாலோ விவரங்களை வெளிப்படுத்த வேண்டியது கட்டாயமாகும். எனவே, வெளிப்படுத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு சட்டப்படி சொந்தமானதாகக் கருதப்படும்.
-
வருமான வரிச் சோதனையின் போது தங்கத்தின் ஆதாரம் விளக்க முடியாததாக இருந்தால் பின்வரும் வரையறைகள் இருந்தால் பறிமுதல் செய்ய முடியாது.
- திருமணமான பெண்களுக்கு 500கி
- திருமணமாகாத பெண்களுக்கு 250கி
- ஆண்களுக்கு – 100கி
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இந்த வரையறைகளானது:
- தங்க நகைகளுக்கு மட்டுமே பொருந்தும் நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகளுக்குப் பொருந்தாது.
- மரபுரிமை பெற்ற மற்றும் வாங்கிய தங்கம் இரண்டும் உள்ளடங்கும் ஆனால் ஒரு நண்பர் அல்லது உறவினர் சார்பாக வைத்திருக்கும் தங்கத்திற்குப் பொருந்ததாது.
மேலும், குடும்ப வழக்கங்கள் மற்றும் மரபுகள் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அதிக அளவில் பறிமுதல் செய்யாமல் இருக்க தேடுதல் அதிகாரிகளுக்கு விருப்ப உரிமை உண்டு.
ஒரு தங்கத்தாலான பரிசு உங்கள் அன்புக்குரியவர்களை தங்கத்தின் மகத்தான சமூக, பொருளாதார மற்றும் அழகியல் மதிப்பின் பயன்களை அடைய அனுமதிக்கிறது. இங்கே மேலே உள்ள குறிப்புகள் அடுத்த முறை நீங்கள் தங்கம் வாங்க நினைக்கும் போது ஒரு தகவலறிந்த கொள்முதலை செய்ய உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்.