Published: 08 செப் 2017

தங்கம் வாங்குவதற்கு சரியான நேரம் என்று ஒன்று உள்ளதா?

Gold Investment Benefits

முதலீட்டின் முக்கியமான குறிக்கோள் என்னவென்றால் நமது நிதி இலக்குகளை சமாளிக்க செல்வம் சேர்ப்பதுதான். அந்த இலக்கானது ஒரு வீட்டை அடைவதாக இருக்கலாம். அல்லது கல்விக்கு பணம் செலுத்துவதாக இருக்கலாம். அல்லது ஓய்வு கால வாழ்க்கை மற்றும் சுகாதாரத்திற்கு செலவு செய்வதாக இருக்கலாம். எனவே உங்களது தனிப்பட்ட நிதி வரைபடத்தை மனதில் வைத்துக்கொண்டு உங்கள் முதலீட்டு முடிவுகளை எடுங்கள்.

உங்களது இலக்குகள், இடரைச் சந்திக்கும் திறன், சரியான வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் உங்களது பணத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட சொத்து வகைகளில் பல்வேறு போர்ட்ஃபோலியோக்களில் முதலீடு செய்யலாம. இந்த சூழ்நிலையில் நேரமும் முக்கியமான காரணி. ஒவ்வொரு முதலீட்டின் முதிர்ச்சி காலத்தையும் நாம் பரிசீலிக்க வேண்டம. உங்கள் இலக்கை அடைவதற்கு நீங்கள் வாங்கி விற்பதற்கான சரியான நேரத்தை முடிவு செய்ய வேண்டும். நீங்கள் சரியான நேரத்தில் சரியான இலாபத்தை அடைய வேண்டுமென்றால் முதலீட்டு முடிவு எடுக்கும் நேரம் சரியானதாக இருக்க வேண்டும்.

நீண்ட கால இலாபத்திற்காக தங்கம்

மிகவும் அதிகமாக அளிக்கப்படும் முதலீட்டு முடிவு என்னவென்றால் இலாபத்தை அதிகரிக்க குறைவாக வாங்கி அதிகமாக விற்பது என்பதாகும். தங்கத்தைப் பொறுத்தவரை அது வேறுபட்டது அல்ல. ஒருவர் வட்டத்தைத்தான் பின்தொடர்வாரே தவிர டிரண்டுகளை தொடர்வது இல்லை. விலை அதிகமாக உயருமபோது வாங்க வேண்டும் என்றும் விலை குறையும் போது விற்க வேண்டும் மனநிலை வேறுபாடு காற்றடிக்கம்போது தூற்றிக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை விதைக்கம். எனவே சந்தைர்ப்பத்தை தவற விடக்கூடாது. நல்ல திறன் மிகுந்த முதலீட்டாளர் உயர் மற்றும் குறைவான இயக்கத்தின் வீச்சை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் சிக்கல் எழும். இதன் விளைவாக குறிப்பில்லா இலாபங்கள் அல்லது கணிசமான நஷ்டங்களால் இழப்பு ஏற்படும்.

எனவே தங்கம் வாங்குவதற்கு சரியான நேரம் எது என்றால் அதன் விலையை பாதிக்கும் அனைத்து காரணிகளும் கூடியிருக்கும்போதுதான். நீண்ட காலத்தில் இதன் விலை அதிகரிக்கும். குறுகிய காலத்தில் வெற்றுத்தன்மை குறையும்.

விலையை ஏற்றி இறக்கும் சக்திகள்

இந்தியாவில் உள்ள தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தைகளில் உள்ள விலையுடனும் நாணய சரிசெய்கைகளுடனும் ஒத்துப்போகிறது (currency adjustments). இது ஏன் என்றால் இந்தியா பெரும்பாலான தங்கத்தை இறக்குமதி செய்கிறது. எனவே தங்கத்தின் விலையைப் பாதிக்கும் காரணிகள் உலகளாவிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டது. இதற்கு காரணமானவை பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன :

  • அரசியல் ஸ்திரத்தன்மை: அரசியல் நிலை ஸ்திரமற்று இருந்தால் உணர்வுகளை கார்மேகங்கள் மறைக்கும். அத்தகு சமயம் தங்கமானது முன்னுரிமை மிக்க மூலதனமாக மாறும். பணம் ஈக்விட்டிகளை விட தங்கத்தை வேகமாகத் துரத்தும். எனவே முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்காமல் அதிகம் வாங்குவதற்கு விரும்புவார்கள்
  • சர்வதேச பணக் கொள்கைகள்: அதிகரிக்கும் வட்டி விகிதங்கள் மற்றும் எளிய பணக் கொள்கைக்கு மத்திய வங்கிகள் முடிவு கட்டுதல் ஆகியவற்றால் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும். பணவீக்கத்திற்கும் குறைவான வட்டி விகிதங்களின் ஆட்சி, தங்கத்தை மிகவும் கவர்ச்சிகரமான முதலீடாக மாற்றும். முதலீடுகளை தங்கமாக மாற்றுவதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது. வட்டி தொடர்பான சொத்து அல்ல. வட்டி விகிதம்அதிகரிக்கும்போது அதிகபட்ச உத்தரவாதம் கொண்ட கடன் பொருட்களில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள்.
  • பணவீக்கம்: தங்கத்தின் விலையானது பணவீக்கத்துடன் அதிகரிக்கிறது. குறைவான பண வீக்கத்தில் வீழ்கிறது. பொருளாதார மந்தத் தன்மையின்போது குறிப்பாக பணவீக்கத்தின்போது தங்கம் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. பணம் அரிதாக இருக்கும்போது தங்கத்தின் விலையில் உள்ள நீண்ட கால நிலைத்தன்மை அதனை பாதுகாப்பான சொத்தாக மாற்றுகிறது. எனவே பணவீக்கத்தின்போது, தங்கத்திற்கான தேவை அதிகரிக்கிறது. இதனால் அதன் விலையின் மீது தாக்கம் ஏற்படுகிறது.
  • நாணயத்தின் மதிப்பு குறைதல்: நேர்மறையான வளர்ச்சியின் போது வலுவான அமெரிக்க டாலர் தங்கத்தின் விலையைக் குறைக்கும். 2016ஆம் ஆண்டு கண்டறியப்படி அமெரக்க டாலரும் தங்கமும் எதிர் விகித உறவு கொண்டவை. அந்த ஆணடு அமெரக்க டாலரின் மதிப்பு பலவீனமாக இருந்தததால் தங்கத்தின் விலை அதிகரித்தது.
  • அரசு வட்டிகள் / வரிகள்: இறக்குமதி வட்டியால் இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரிக்கும். எனவே இறக்குமதி ஊக்குவிக்காமல் இருக்க இந்திய அரசு அத்தகைய முடிவை எடுக்கிறது.
  • தேவை மறறும் வினியோக கணக்குகள்: எந்தவிதமான பொருளோ சேவையோ, தேவைகள் தங்கத்தின் விலையை உயரே எடுத்துச்செல்லும். இந்த சூழ்நிலையில் தங்க நகை சந்தையானது ஒரு பொருத்தமான காரணியாக மாறியுள்ளது. எந்த விதமான நகையோ அல்லது நாணயங்களோ வாங்குவது இந்தியாவில் ஒரு கலாச்சார பயிற்சி. எனவே திருமண காலங்கள், மகர சங்கராந்தி, புஷ்யமி, உகாடி, குடிபடுவா, அக்ஷய திருதியை, நவராத்திரி, தசரா, தந்தேராஸ், மற்றும் பாலிப்ரதிபடா ஆகிய பண்டிகைகளின்போது தங்கம் வாங்குவது புனிதமாகக கருதபபடகிறது. தங்கம் வாங்குவதற்கு சிறந்ததாகக் கருதப்படும் சில புண்ணிய நாட்கள்
சரியான நேரம் எது என்றால்…

தங்கம் வாங்குவதற்கு சரியான நேரம் எது என்றால் போட்டியில்லாத சொத்தான பளபளப்பான தங்கத்தை தனது போர்ட்ஃபோலியோவில் ஒரு முதலீட்டாள்ர் எப்போது சேர்க்கிறாரோ அதுவே சரியான நேரம். உண்மையில் எவ்வளவு விரைவில் தங்கத்தின் விலை குறைகிறதோ, அப்போது தங்கத்தின் மீதான முதலீடு ஒரு குறிப்பிட்ட காலம் வரை நீடிக்கும். நவீன முதலீட்டு விரப்பத்தேர்வுகள் காலப்போக்கில் ஒழுங்கான சிறிய முதலீட்டுகளை அனுமதிக்கின்றன.

Sources

Source1, Source2, Source3, Source4, Source5, Source6, Source7, Source8, Source9, Source10, Source11, Source12, Source11, Source12, Source11, Source12, Source13