Published: 10 ஆக 2017
நவீன பெண்மணிக்கான மரபு சாராத தங்க நகை தேர்வுகள்
தங்கத்தின் மீது விருப்பம், ஆனால் இந்த மஞ்சள் உலோகத்தை அலங்கரிக்க நவீனமான, சிக்கென்ற எதார்த்தமான வழி தேவையா? அன்றாடம் தங்க நகைகளை அணிவதற்கான சில அற்புதமான வழிகள் இதோ. உங்கள் வாழ்வில் வரும் 20-30 வயதினருக்கு நவநாகரிகமாக பரிசளிப்பதாக இருந்தாலோ அல்லது சந்தோசத்திற்காக பணிபுரிவதாக இருந்தாலோ இவை உதவும்.
-
உங்கள் காதுகளுக்கான தங்க நகைகள் (Gold jewellery for your ears)
இந்த நவீன கால வடிவங்கள் குறித்து நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்களா?
20களில் உள்ள பெண்களுக்காக பிரபலமான காது மாட்டல்கள் உள்ளன. இவை உங்களது உடைக்கு அழகைக் கூட்டும் யதார்த்தமான நவநாகரிகமான பாணி.
காது வளையங்கள் உங்கள் காது மடல்களில் அமர்வது மட்டுமல்ல, காதுகளின் மற்ற கோணங்களையும் மூடுபவையாகும். சில காதின் உள்ளேயிருந்து வெளி வரும். சில காதின் வளைவுகளில் வரியாக வரும். சில சிறிய கொக்கிகளுடன் பிண்ணப்பட்டிருக்கும். சில பல அடுக்குகள் கொண்ட சங்கிலி போல தொங்கும்.
-
உங்கள் கழுத்திற்கான தங்க நகை (Gold jewellery for your neck)
ஆழமான கழுத்து பாணிக்கு ஏற்ற நகை மாதிரிகள்
தங்க நெக்லெஸ்களை தேர்நதெடுப்பதில் உள்ள மிகவும் பிரபலமான வழி சரியான பதக்கத்தை தேர்ந்தெடுப்பதுதான். சிறிய தங்க விலங்கிலிருந்து உங்கள் பிறந்த நாளைக் குறிக்கும் எழுத்துக்கள் அல்லது உங்கள் முதல் எழுத்தைக் குறிக்கும் தங்க எழுத்துககளைத் தேக்ந்தெடுப்பது வரை இதில் அடக்கம்.
பல்வேறு விதமான நகைகளை இணைத்து நவநாகரிகமாக செய்யப்படும் நகைகள் பல அடுக்குகள் கொண்ட அட்டிகைகள். ஒரே நாளில் உங்கள் தோற்றத்தை மிடுக்காகக் காட்டக்கூடியவை.
-
உங்கள் கூந்தலுக்கான தங்க நகை (Gold jewellery for your hair )
உங்கள் தலையை நன்கு உயர்த்துங்கள்!
உங்களது திருமண நாளன்று மட்டும் உங்கள் கூந்தல் பொன்னிறம் பெறுவதாக இருக்க வேண்டியதில்லை. வரிசையான கொண்டை ஊசிகள், அழகான சிகை அலங்கார சங்கிலி, நெத்திச்சூடிகள், ஆகியவை இராஜ கம்பீரத்தை கொடுக்கும். நட்சத்திரங்கள் கொண்ட தலைக் கவச அலங்காரங்களையும் செய்து கொள்ளலாம்.
-
உங்கள் உடலுக்கான தங்க நகை (Gold jewellery for your body)
மரபு சார்ந்த தங்க நகைகளுடன் எதற்காக இணைந்திருக்க வேண்டும், எதற்காக பழைய பாணியையே பின்பற்ற வேண்டும் ?
தங்கத்தை அணிவதற்கு பல்வேறு வகையான அற்புதமான வழிகள் உள்ளன. கையில்லாத சட்டை அணிவதற்கு பதிலாக தோள்பட்டை அலங்கரிக்கும் பட்டை ஒன்றை அணிந்து கொள்ளலாம். உங்கள் இடுப்பின் வடிவை எடுத்துக்காட்ட ஒட்டியானம் அணிந்து கொள்ளலாம். உங்கள் தோள்பட்டைகளை அழகாக்க நீளமான நெக்லேசை அணியலாம்.
மிகவும் கனமான பாரம்பரிய நகைகள் அணிந்து கொண்டால் ஒருவரது உடை முழுவதும் அதனைச் சார்ந்தே இருக்க வேண்டும். ஏனெனில் தங்க நகை அவ்வளவு கவனத்தை ஈர்க்கும். ஆனால் அன்றாடம் அணிந்து கொள்வதற்கு, நீங்கள் மரபு சாராத நகைகளை பரிசீலனை செய்யலாம். அது உங்கள் தோற்றத்திற்கு சிறிது தங்கத்தையும் அழகையும் சேர்க்கும்.