Published: 21 மே 2018
ஐரோப்பிய நாடுகளில் தங்கம் எவ்வாறு ஹால்மார்க் செய்யப்படுகிறது?
தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையிடுவதுதான் ஐரோப்பாவில் முதல் முதலில் செய்யப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு என்று உங்களுக்கு தெரியுமா? 1200 களின் இங்கிலாந்தில் முதலாம் எட்வார்டின் காலத்தின்போதும் ஃப்ரான்சில் 14ஆம் லூயி மன்னரின் காலத்தின்போதே ஏற்பட்டது. பொது விற்பனைக்கான அனைத்து தங்கப் பொருட்களுக்கும் தங்க நகை ஹால்மார்க் செய்வது அப்போதிருந்தே கட்டாயமானது.
ஐரோப்பாவில் தங்க நகை ஹால்மார்க்கிங்கில் உள்ள தற்போதைய விதிகள் குறித்த ஒரு பார்வை:
துல்லியம் குறித்த கட்டுப்பாடு பற்றிய வியன்னா கன்வென்ஷன் மற்றும் விலையுயர்ந்த உலோகப் பொருட்களை ஹால்மார்க்கிங் செய்தல் ஆகிய அமைப்புகளில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த கன்வென்ஷன் நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம். விலையுயர்ந்த உலோகப் பொருட்களுக்கு பொறுப்பான அமைச்சகங்கள் இதில் பிரதிநிதிகளாக உள்ளன. இந்த கன்வென்ஷன் பொதுவான கட்டுப்பாட்டு முத்திரையை அறிமுகப்படுத்தயுள்ளது (Common Control Mark (CCM).
விலையுயர்ந்த உலோகப் பொருட்களினால் செய்யப்படும் நகைகளுக்கு பொதுவான கட்டுப்பாட்டு முத்திரையை (சிசிஎம்) பெறுவது சுய விருப்பத்தை சார்ந்தது. அப்படி செய்வதற்கு உற்பத்தியாளர்கள் பணிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு நாட்டிலும் நடைமுறையில் உள்ள ஹால்மார்க்கிங் செய்தல் அமைப்பின்படி சிசிஎம் முத்திரை சுதந்திரமாக பயன்படுத்தப்படுகிறது.
தற்போது இதில் 19 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஒவ்வொரு உறுப்பினரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தரமளிக்கும் அலுவலகங்களை கொண்டுள்ளனர். இந்த தரமளிக்கும் அலுவலகங்கள் சிசிஎம்மின் விதிகளான கன்வென்ஷனின் அம்சங்களை செயல்படுத்துகின்றன.
இந்த கன்வென்ஷனின் பணிகளைப் பின்பற்றும் மற்ற நாடுகள் சீனா, க்ரோஷியா, ஃப்ரான்ஸ், இத்தாலி, மேசிடோனியா, ரொமானியா, செர்பியா, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின்
- சிசிஎம்மானது அந்த நாட்டின் தேசிய தரச்சான்றிதழ் அளிக்கும் அலுவலகத்தின் முத்திரையின் உதவியுடன் இருக்கவேண்டும். அதுதான் பொறுப்பான முத்திரை (அதாவது உற்பத்தியாளர் அல்லது புரவலர்) மற்றும் அதன் துல்லிய தன்மை அதன் தூய்மையை உரைக்கும்.
- பொறுப்புணர்ச்சியான முத்திரைகள், சிஎம்எம் செயல்படும் அந்நாட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். அதனை இறக்குமதி செய்யும் நாடுகளில் அவற்றை பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை.
-
எண்ணியல் சார்ந்த துல்லியம் ஆயிரங்களில் உள்ள பகுதிகள்
333 ~ 8K(33.3% தங்கம் ) 583 & 585 ~ 14K (58.3—58.5% தங்கம்) 916 ~ 22K (91.6% தங்கம்) 375 ~ 9K (37.5% தங்கம்) 750 ~ 18K (75% தங்கம்) 960 ~ 23K (96% தங்கம்) 410 & 417 ~ 10K (41—41.7% தங்கம்) 800 ~ 19.2K (80% தங்கம்) 990 & 999 ~ 24K (99—99.9% தங்கம்) -
தேசிய தங்க நகை ஹால்மார்க்காக சிசிஎம்மிற்கு அதே சட்ட ரீதியான அந்தஸ்து உள்ளது. ஒப்புக்கொள்ளப்பட்ட சோதனை முறைகளின்படி துல்லியத்தை எடைபோட்ட பிறகு குறிப்பிடப்பட்ட தேசிய தரநிர்ணய அலுவலகங்கள் இதனை பூர்த்தி செய்கின்றன. எனவே சிசிஎம் முத்திரை பெற்ற பொருட்கள் உறுப்பு நாடுகள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
ஃப்ரான்சில் ஹால்மார்க்கிங்:
உலகிலேயே மிகவும் சிக்கலான ஹால்மார்க்கிங் அமைப்பு கொண்ட நாடு ஃப்ரான்சுதான்
- ஃப்ரஞ்சு முத்திரைகள் குறியிட்டு அடிப்படையிலானவை. விலங்குகள், மக்கள், பூச்சிகள் மற்றும் பறவைகள் என தெளிவான உருவங்கள் உடையவை. இந்த அனைத்து குறியீடுகளும் ஒரு சேர இருந்தால், அந்த ◌உலோகம் மிகவும் துல்லியமான தூய்மை கொண்டது என்று பொருள். மேலும் அது உற்பத்தியாகும் இடம் மற்றும் அதனுடன் தொடர்புடைய இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் ஆகியவையும் இதில் குறிப்பிடப்படும்.
- ஒரு கழுகின் தலை 18 காரட் சுத்தம் கொண்ட தங்கத்தைக் குறிக்கும். சட்டப்படி அங்குள்ள தங்க நகைகள் குறைந்தது 18 காரட் தூய்மை கொண்டதாக இருக்க வேண்டும். ஏற்றுமதியாகும் நகைகள் 9 மற்றும் 14 காரட் தூய்மை கொண்டவை. இவற்றில் பட முத்திரைகள் பதிக்கப்பட்டிருக்கும்.
- இதனை உருவாக்கியவரின் முத்திரை ஒரு பதக்கத்தில், அதனை உருவாக்கியவரின் முதல் எழுத்துககளுடன் பொறிக்கப்பட்டிருக்கும்.
ஸ்பெயினில் ஹால்மார்க்கிங் :
ஸபெயினில் தர நிர்ணயம் செய்யும் அலுவலகம் அளிக்கும் ஹால்மார்க்கிங் மற்றும் உரிமம் பெற்ற உற்பத்தியாளர்களின் முத்திரை என்று இரட்டை முறை உள்ளது. ஹால்மார்க்கிங் என்பது கட்டாயமான மாநில தேவை . இந்த தனிப்பட்ட முத்திரை உருவாக்கத்தின் குணங்கள்:
-
உத்தரவாதத்தின் முத்திரை: இது தங்கத்தின் உலோகக்கலவைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த விலையுயர்ந்த உலோகத்திற்குரிய அதிகார பூர்வமான சட்டத்தின் படி அதிகாரம் பெற்ற தனிப்பட்ட சமூகங்களைச் சார்ந்த அதிகாரிகளே இந்த முத்திரையை அளிக்க முடியும்.
- முதல் சட்டம்: 750 துல்லியம் (ஆயிரத்தில் பங்குகள்)
- இரண்டாவது சட்டம்: 585 துல்லியம் (ஆயிரத்தில் பங்குகள்)
- பூர்வீக அடையாளம் கொண்ட முத்திரை: இது உற்பத்தியாளர் அல்லது இறக்குமதியாளருக்கு உரிமை அளிக்கிறது. இந்த முத்திரையானது காப்புரிமைகள் மற்றும் முத்திரைக்கான ஸ்பானிய அலுவலகத்திடம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்
- புரவலர் முத்திரை விவரங்கள்: அந்த நாட்டில் விற்பனைக்காக தங்கம் உற்பத்தி செய்யும் அல்லது இறக்குமதி செய்யும் நபரையோ அல்லது கம்பெனியையோ இது அடையாளப்படுத்துகிறது.
- துல்லியம்: 1 கிராமுக்கும் அதிகமான தங்கப் பொருட்களுக்கு ஹால்மார்க்கிங் தேவைப்படுகிறது. இது ஆயிரம் பங்குகளின் அம்சமாக வரையறுக்கப்படுகிறது. ஏற்றுகொள்ளக்கூடிய துல்லிய அளவுகள் 375 பிபிடி,585 பிபிடி, 750 பிபிடி ஆகியவையாகும்.
-
தர நிர்ணயம் அளிக்கும் முத்திரை: தர நிர்ணயம் அளிக்கும் முத்திரை
- V1: வேலன்சியா
- M1: மாட்ரிட்
- A1: அன்டாலுசியா
- G1: காலிசியா
- C1 and C2: கடாலோனியா
- B2: பாலியாரிக்
பிரிட்டிஷ் ஹால்மார்க்கிங் கவுன்சிலுடன் ஒத்துப்போகும் ஸ்பானிய ஹால்மார்க்குகள் (ppt):
ஐரோப்பாவில் தங்க ஹால்மார்க்கிங் குறித்து மேலும் தெரிந்து கொள்ள, ஐக்கிய குடியரசில் ஹால்மார்க்கிங் பெற்ற தங்கம் வாங்குவது எப்படி என்பதிலிருந்து தெரிந்த கொள்ளவும்.
நீங்கள் ஐரோப்பாவில் தங்கம் வாங்கிவிட்டு அதனை இந்தியாவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறீர்களா, இந்த விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் தெரிந்துகொண்டு உறுதி செய்து கொள்ளவும். தங்கத்துடன் பயணிக்கும்போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்