Published: 10 மே 2018
உங்கள் தாயாருக்காக தங்கத்தில் முதலீடு செய்வதற்கான நவீன வழிகள்
இந்தியாவில், தங்கத்தைச் சொந்தமாக வைத்திருப்பது உங்கள் சேமிப்பை பெருக்குவதை விட சிறந்ததாகும், இது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு செல்வத்தை அளிப்பதற்கான ஒரு வழியாகும். உங்கள் பாட்டி மற்றும் தாயார் உங்களிடம் அதை பற்றி சொல்லியிருப்பார்கள், தங்களுடைய செல்வத்தின் பெரும்பகுதியை தங்கத்தை வாங்குவதற்கும் தங்கத்தில் முதலீடு செய்வதற்கும் அவர்கள் செலவழித்திருக்கலாம்.
தங்க ஆபரணங்களை ஆன்லைனில் வாங்கும் யோசனை உங்கள் தாயாரை உடனடியாக கவரக்கூடியதாக இல்லாமல் போகலாம், ஏனெனில் தனது விருப்பமான நகை வியாபாரியுடன் கலந்தாலோசனை மற்றும் பேச்சுவார்த்தை அனுபவத்துடன் நகையை தொட்டு உணர்ந்து பார்க்கும் பழக்கமுடையவராக இருக்கலாம். மேலும் இன்னும் சிறிய நிதி தேவைப்படும் முதலீட்டின் புதிய வழிகளை பற்றி அவர் அறிந்திருக்கலாம்., வாழ்க்கையைப்பற்றி உங்களுக்கு நிறைய கற்றுக்கொடுக்கும்பொழுது அவருக்கு உங்கள் மீது இருந்த கவனிப்பு மற்றும் அக்கறை ஆகியவற்றில் சிறிதளவை அவருக்கு இந்த அன்னையர் தினத்தில் திருப்பி கொடுங்கள். அவருக்கு மிகவும் பிடித்த விலையுயர்ந்த உலோகத்தில் முதலீடு செய்வதற்கான மிகவும் பாதுகாப்பான, மிகவும் நெகிழ்வான மற்றும் வசதியான வழிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவருக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை பரிசாக வழங்குங்கள்.
புதிய வழியில் தங்கம் வாங்குதல்
-
மொபைல் மூலமாக தங்கத்தில் டிஜிட்டல் முதலீடுகள்
மொபைல் பயன்பாட்டு-அடிப்படையிலான கட்டணம் மற்றும் மொபைல் வாலட் சேவை வழங்குநர்கள் தங்களது வலைத்தளங்களிலும் பயன்பாடுகளிலும் தங்க முதலீட்டை ஒரு வகையினமாக வழங்குகின்றனர், இது நீங்கள் இந்த விலையுயர்ந்த உலோகத்தை ஆன்லைனில் வாங்க அனுமதிக்கிறது.
உங்கள் தாய் தங்கத்தை ஆன்லைனில் வாங்குவது பற்றி நம்பிக்கை இல்லாதவராக இருக்கலாம், ஆனால் இந்த மார்க்கத்தை ஆராய்வதில் பல நன்மைகள் உள்ளன:
- 99.5% தூய 24 காரட் தங்கத்தை நீங்கள் பெறலாம்
- தங்கம் பாதுகாப்பான இடங்களில் சேமிக்கப்படுவதால் 100% பாதுகாப்பானது, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் அதை பற்றி நீங்கள் மேலும் படிக்கலாம்
- தங்கத்தில் முதலீடு செய்வதற்கு தங்கம் வாங்குவதற்கு ஒரு பெரிய தொகையை சேர்த்துவைப்பதைவிட குறைந்தபட்சமாக ரூ.1 அல்லது 0.001 கிராம் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளீர்கள்.
- உங்கள் தங்கத்தை மீட்டெடுக்க முடிவு செய்தால், உங்கள் வீட்டிற்கே தங்கம் பொருளாக டெலிவரி செய்யப்படும்
- பின்னர் நீங்கள் பயன்படுத்துவதற்காக உங்கள் ஆன்லைன் அக்கவுண்டில் தங்கத்தை வாங்கலாம் மற்றும் சேமிக்கலாம்
தொடர்புடையவை: ஆன்லைனில் தங்கம் வாங்குவதற்கான உதவிக்குறிப்புகள்
-
தங்க நகை வாங்கும் திட்டம்
இந்த திட்டத்தை பற்றி உங்கள் தாயாரிடம் கூறுவது ஒரு சிறந்த விஷயம் மட்டுமல்ல, இது அவருக்கு நீங்கள் முக்கியமான ஒன்றை வாங்க விரும்புவதற்கான ஒரு சிறந்தவழியாகும்! ஒரு பெரிய தொகையை சேமித்து வைப்பதற்கு காத்திருப்பதை விட, நீங்கள் வாங்க விரும்பும் நகையை வாங்க இயலும் வரை சீரான இடைவெளிகளில் சிறிய தொகைகளை முதலீடு செய்யலாம். நீங்கள் 6, 12, அல்லது 15 மாத காலத்திற்கு இந்த திட்டத்தில் சேரலாம் மற்றும் 5, 11, அல்லது 14 மாதங்களுக்கு முன்-நிர்ணயிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தலாம். நகை வியாபாரியே இறுதி தவணையை செலுத்திவிடலாம் அல்லது ஏதேனும் தள்ளுபடி வழங்கலாம். சேகரிக்கப்பட்ட தொகைப்படி, நீங்களோ அல்லது உங்கள் தாயாரோ அவரது விருப்பப்படி கடைசி மாதத்தில் தங்க நகைகளை வாங்கலாம். இந்த திட்டத்தின் கீழ் நகை வியாபாரியைப் பொறுத்து குறைந்தபட்ச தவணை ரூ. 1,000 முதல் ரூ. 2,000 வரை வேறுபடும். அதிகபட்ச தவணை குறிப்பிட்ட தொகையிலிருந்து ரூபாய் 1,000 அதிகமாக எந்த தொகை வரையும் உயரலாம்.
-
கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்ஸ் (ஈ.டி.எஃப்.எஸ்)
பரஸ்பர நிதிகள் போன்றே கட்டமைக்கப்பட்டு, வாங்கப்பட்டு மற்றும் விற்கப்படும் ஈ.டி.எஃப்.எஸ்-கள் சொத்து மேலாண்மை நிறுவனங்களால் (ஏ.எம்.சி-க்கள்) வழங்கப்படும் திட்டங்களாகும். ஒரு தங்க ஈ.டி.எஃப், அதன் கீழுள்ள சொத்துக்களின் உடைமையுரிமையை குறிக்கிறது - இந்த விஷயத்தில், தங்கம்.
தங்க ஈ.டி.எஃப்-கள் என்பவை உலோகத்தின் உள்நாட்டு விலையை கண்காணிக்கும் திறந்த-முடிவு நிதிகள் ஆகும் மற்றும் அவை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் செய்யப்படுகின்றன. தங்க ஈ.டி.எஃப்-கள் தங்கம், காகிதம் அல்லது பொருளாக இல்லாத வடிவில் இருக்கக்கூடிய தங்கத்தைக் குறிக்கும் யூனிட்டுகள். ஒரு தங்க ஈ.டி.எஃப் யூனிட் 1 கிராம் தங்கத்திற்கு சமமாகும் மற்றும் மிக அதிக தூய்மையான பொருள் வடிவிலான தங்கம் கொடுக்கப்படுகிறது. நீங்கள் ஒரு தங்க ஈ.டி.எஃப்-ஐ வாங்கும்போது, உங்கள் முதலீட்டின் உண்மையான தொகையை ஒத்திருக்கும் உரிமையுடைமைக்கான ஒரு சட்டப்பூர்வ உடன்படிக்கையை செய்துகொள்கிறீர்கள்
நீங்களோ அல்லது உங்கள் தாயாரோ செய்ய வேண்டிய ஒன்று (மற்ற முதலீடுகளுக்கு அது ஏற்கனவே செய்யப்படவில்லை என்றால்), பரிவர்த்தனைகளை எளிதாக்க ஒரு டிமேட் அக்கவுண்டைத் தொடங்க வேண்டும். உங்கள் தாயாருக்கு மிகவும் பொருத்தமானது என்னவென்றால் தங்க ஈ.டி.எஃப்-களில் முதலீடு செய்வது என்பது மிகவும் பயன் தரக்கூடியது, அதனை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான செலவுகள் மற்றும் கவலையை குறைப்பதோடு, வரி சலுகைகளையும் வழங்குகிறது.
தொடர்புடையவை: தங்க ஈ.டி.எஃப்-கள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்
நீங்களுக்கும் உங்களுடைய தாயாரும் ஒன்றாக சேர்ந்து ஒரு அற்புதமான நாளை கழிக்க வாழ்த்துகிறோம்!