Published: 22 அக் 2018
உத்தர்காண்டில் தங்கம் அணிதல்
பகட்டான டெஹ்ரி நத்தாக இருந்தாலும் சரி, கனமான பஹுன்ச்சியாக இருந்தாலும் அல்லது பிரமாணடமான சந்தன ஆரமாக இருந்தாலும் உத்தர்காண்டின் தங்க நகைகள் முற்றிலும் எடுப்பான தோற்றமுடையவை. பஹாரி பெண்களின் அணிகலன்களின் மிகச்சிறந்த பகுதியாக இருப்பதைத் தவிர்த்து, அவை அந்த மாநிலத்தின் பெருமைமிகு கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாகவும் விளங்குகின்றன.
இங்கே உத்தர்காண்டின் சில பாரம்பரிய தங்க நகை வடிவமைப்புகளைப் பற்றிய ஒரு பார்வை:
-
புல்லாக்
மூக்கிற்கான ஆபரணமான, தங்கத்தால் செய்யப்பட்ட புல்லாக்கில் நுணுக்கமாக செதுக்கப்பட்ட கலை வேலைப்பாடுகள் இருக்கும். குமாவன், ஜான்சர் மற்றும் கர்வால் இனத்தில் புதிதாக திருமணமானப் பெண்களால் பாரம்பரியமாக அணியப்படும் இது, மணப்பெண்ணின் குடும்பத்தினரால் பரிசளிக்கப்படும் ஒரு முக்கிய நகையாகக் கருதப்படுகிறது.
மரியாதை: பட்டுலால் ஜுவல்ஸ்
-
குந்தல் மற்றும் பாலி
உள்ளூரில் மோனாத், முர்க்லி, முண்டா, அல்லது துக்யால், குந்தால் போன்ற பல்வேறு பெயர்களால் அறியப்படும் இந்த தங்கக் காதணிகள் உத்தர்கண்டின் பஹாரி பெண்களால் அணியப்படுகிறது. குந்தலின் மிகப் பொதுவான வகை பாலி எனப்படும் – ஒரு தங்கத்தால் செய்யப்பட்ட மிகப்பெரிய வட்ட காதணியாகும்.
பட உதவி: ஜவேரி பஜார் ஜுவல்லர்ஸ்
-
டெஹ்ரி நத்
நத்துலி என்றும் அறியப்படும் டெஹ்ரி நத் தங்கத்தால் செய்யப்பட்ட நிலா வடிவிலான பெரிய மூக்கு வளையமாகும். இது நகர மற்றும் கிராமிய கர்வாலி பெண்களால் அணியப்படுகிறது. புத்திசாலித்தனமான கலைவேலைப்பாடுகளுக்கு புகழ்பெற்ற டெஹ்ரி நத் தாவர மற்றும் விலங்கின வடிவங்களால் ஈர்க்கப்பட்ட திகைப்பூட்டும் சில வடிவங்களில் கிடைக்கிறது. திருமண நகைகளில் மிக முக்கியமான ஆபரணங்களில் ஒன்றான நத்துலி, மணப்பெண்ணுக்கு, அவரின் தாய்மாமனால் பரிசளிக்கப்படுகிறது.
-
கான்பூல்
‘கான்’ என்பதற்கு காது என்றும் ‘பூல்’ என்பதற்கு மலர் என்றும் பொருள். தங்கத்தால் செய்யப்பட்ட கான்பூல் பூக்களின் கலைவேலைப்பாடுகளால் செதுக்கப்பட்ட காதணிகளாகும். இவை பொதுவாக ஜான்சாரி பெண்களால் அணியப்படுகிறது.
-
பஹுன்ச்சி
திருமணமான பெண்களின் அதிர்ஷ்டகரமான நகையாகக் கருதப்படும் பஹுன்ச்சி பெண்களால் சிறப்பு நிகழ்ச்சிகளில் அணியப்படும் தங்க வளையல்களாகும். அவை தயாரிக்கப்படும் முறை அவற்றை தனித்தன்மையான வளையல்களாக மாற்றுகிறது. பொதுவாக 1 தோலாவில் கிடைக்கிறது, இந்த வளையல்களை உருவாக்க சிகப்புத் துணியில் சிறிய தங்க மணிகள் பதிக்கப்படுகின்றன.
பட உதவி: பட்டுலால் பிரயாக் நாராயண் ஜுவல்லர்ஸ்
-
ஹன்சுலி
கர்வாலில் கக்வாலி என்று பிரபலமாக அறியப்படும் ஹன்சுலி குறைந்தபட்ச வடிவமைப்புடன் நெருக்கமாக இணைக்கப்பட்ட நெக்லஸ் ஆகும். இது கர்வாலி, குமானி, ஜன்சாரி, மற்றும் போடியா பெண்களால் திருமணம் மற்றும் பண்டிகைகள் போன்ற பிரத்யேக நிகழ்ச்சிகளில் அணியப்படுகிறது.
பட உதவி: ஏசியா ஸ்டோர்
-
சந்தன் ஆரம்
உத்தர்காண்டின் பாரம்பரிய நெக்லேஸான சந்தன் ஹாரில் நான்கு முதல் ஐந்து நீளமான சங்கிலிகளில் தங்க மணிகள் கோர்க்கப்பட்டிருக்கும். இந்த சங்கிலிகள் குந்தன் கொக்கிகளின் உதவியுடன் ஒன்றாக இணைந்திருக்கும்.
-
கலோபந்த்
சோக்கரை போல கழுத்தைச் சுற்றி அணியப்படும் கலோபந்த் தங்கத்தால் செய்யப்பட்டு குமான், கர்வால், போடியா மற்றும் ஜன்சார் இன திருமணமான பெண்களால் அணியப்படுகிறது. இது ஒரு சிகப்பு பட்டியின் மீது கயிற்றின் உதவியுடன் அமைக்கப்பட்ட சதுர வடிவ தங்க துண்டுகளால் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இந்த பாரம்பரிய தங்க நகை வடிவமைப்புகள் இன்றளவும் உத்தர்காண்ட் வாழ் மக்களிடையே பிரசித்தி பெற்றவை.