Published: 27 செப் 2017
நாடுகள் தங்களின் தங்கக் கையிருப்புகளை எங்கே சேமிக்கிறது?
ஒரு நாட்டின் அரசாங்கம் பெருமளவில் தனக்குச் சொந்தமாக வைத்திருக்கும் தங்கமானது, தங்கக் கையிருப்புகள் எனப்படும். ஐக்கிய அமெரிக்க அரசாங்கமானது 8133.5 மெட்ரிக் டன்கள் (தோராயமாக 655,000 தங்கக் கட்டிகளுக்கு சமமானது) அளவிலான மிகப்பெரிய தங்கக் கையிருப்புகளைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் இந்திய அரசாங்கமானது 557.8 மெட்ரிக் டன்கள் (தோராயமாக 45,000 தங்கக் கட்டிகளுக்கு சமமானது) தங்கக் கையிருப்புகளுடன் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.
இந்த தங்கத்தின் பெரும்பகுதியானது தங்கத்தின் தரநிலை முடிவடைந்த பின்னர் எஞ்சியிருக்கும் பாரம்பரியம் ஆகும், மேலும் அரசாங்கங்களானது தங்கள் நாட்டுப் பணத்திற்கு ஏற்படும் அபாயங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு வழிமுறையாக இப்போது தங்கக் கையிருப்புகளை வைத்திருக்கின்றன. இந்த விலைமதிப்பற்ற உலோகத்தை கவனமாகப் பாதுகாப்பாக வேண்டிய பொறுப்பு உள்ளது. அரசாங்கங்கள் தங்கள் தங்கக் கையிருப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, வங்கிகளின் பரவலான நெட்வொர்க்கில் தங்களின் தங்கக் கையிருப்புக்களை சேமித்து வைக்கின்றன. உங்களுக்கு சொந்தமான அனைத்து தங்கத்தையும் முடிந்தவரை உங்களுக்கு நெருக்கமாக வைத்திருக்க வேண்டும் என்று தர்க்க ரீதியாக தோன்றலாம், ஆனால் பல நாடுகள் வெளிநாடுகளில் தங்கள் தங்கக் கையிருப்புக்களை வைத்திருக்கின்றன. ஒரு நாட்டின் அரசாங்கத்தால் இன்னொருவருக்கு தங்கம் வழங்கப்படும் பரிவர்த்தனைக்குப் பின்னர் ஏற்படும் ஒரு விளைவே இதற்குக் காரணம் ஆகும். உலகெங்கிலும் டன் கணக்கிலான தங்கத்தை எடுத்துச் செல்வதும், கொண்டு செல்வதும் ஒரு அபாயகரமான நடவடிக்கையாகும். எனவே, தங்களுடைய தங்கக் கையிருப்புக்களை தங்களுடைய சொந்த நாடுகளில் வைத்துக்கொண்டு, தங்கத்தின் மீதான உரிமையை பிற நாடுகளுக்கு மாற்றிக் கொடுக்குமாறு பெரும்பாலான நாடுகள் கேட்கின்றன.
அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகியவை உலகின் மிகப்பெரிய தங்கக் கையிருப்புக்களை கொண்டிருக்கும் முதல் 3 நாடுகளாகும். தங்கம், அவை தனது தங்கக் கையிருப்புகளில் 68%-ஐ வெளிநாட்டு இருப்புகளாக சேமித்து வைத்திருக்கின்றன, அதே நேரத்தில் இந்தியா, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் முறையே தனது தங்கக் கையிருப்புகளில் முறையே 6.3%, 2.2% மற்றும் 15%-ஐ வெளிநாடுகளில் சேமித்து வைத்திருக்கின்றன. எனினும், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் நாடுகளின் எல்லைகளைக் கடந்து தங்கத்தைக் கொண்டு செல்வதில் உள்ள ஆபத்து குறைந்திருப்பது ஆகியவற்றின் காரணமாக, பல நாடுகளும் இந்தப் போக்கினை மாற்றிக்கொள்ள தொடங்கியிருக்கின்றன, பெரும்பாலான நாடுகள் இப்பொழுது விலை உயர்ந்த உலோகத்தைத் தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்பக் கொண்டு வர விரும்புகின்றன.