Published: 18 மே 2018
இரகசிய நாணயங்கள் (க்ரிப்ட்டோ கரன்சிகள்) ஏன் ஓருபோதும் தங்கத்துக்கு மாற்றாகாது?
நீங்கள் ஒரு சிறந்த முதலீட்டுக்கான வழியை தேடுகையில், ‘இரகசிய நாணயங்கள்’ பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். 2017-ல் சிறந்து விளங்கிய டிஜிட்டல் சொத்துக்களில் ஒன்றான இரகசிய நாணயங்கள் உலகின் பரவலாக்கப்பட்ட டிஜிட்டல் நாணயத்தின் முகம் என்று நிலைப்படுத்திக்கொண்டு ஊடக தலைப்புகளில் ஆதிக்கம் செலுத்திவந்தன.
கடந்த ஆண்டில் இரகசிய நாணயங்களின் அதிவேக விலை உயர்வினால் அவை தங்கத்திற்கு நிகரானவை மற்றும் அவை தங்கத்திற்கு மாற்றான ஒரு முதலீட்டு சொத்து என்று கூட கருதலாம் எனும் சாத்தியத்தை பற்றி விவாதங்கள் எழுந்தன. தங்கம் மற்றும் இரகசிய நாணயங்களின் விநியோக முறைகளின் ஒற்றுமைகள் பற்றியும் மற்றும் அவை இரண்டுமே அரசாங்க வெளியீட்டு செலாபணிகள் அல்ல என்றும் சில நிதிசார் வர்ணனையாளர்கள் அழுத்தமாக கூறினர். ஆனால் நிபுணர்கள் வேறு விதமாக கூறினர்.
இரகசிய நாணயங்கள் தங்கத்தை விட முற்றிலும் மாறுபட்ட முதலீட்டை சார்ந்தவை. முதலில், தங்கம் ஒரு முதலீடு என்று பார்க்கும்போது மதிப்பின் ஏற்ற இறக்கம் குறைந்தவை மற்றும் எளிதில் பணமாக மாற்றக்கூடியது. இரகசிய நாணயங்கள் மிண்ணணு பரிமாற்றங்களில் மட்டுமே பயன்படுத்த உருவாக்கப் பட்டவை, ஆனால் தங்கத்திற்கான தேவை பல்வேறு வகைப்பட்டது. மற்றுமொரு வேறுபாடு தங்கம் ஒரு நிலையான பொருள், ஆனால் இரகசிய நாணயங்கள் மறைமுகமானவை மற்றும் தங்கத்தை ஒழுங்கான,வெளிப்படையான முறையில் வாங்கலாம், விற்கலாம் என்ற நம்பிக்கையை வாங்குபவர்கள் பெறுகின்றனர்.
மேலும், தங்கத்தை வாங்குவதும் விற்பதும் முழுவதுமாக சந்தையில் ஒழுங்குபடுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இரகசிய நாணயத்திற்கு உலகளாவிய பரிவர்த்தனைகள் இருந்தாலும், பொதுவாக அவை சுயக்கட்டுப்பாடுடன் இயங்குபவை,மற்றும் அவற்றிற்கு அரசாங்கத்தின் ஆதரவு இல்லை. மத்திய நிதியமைச்சர் மாண்புமிகு ஜெட்லி அவர்கள் நாட்டின் 2018ஆம் ஆண்டின் பட்ஜெட் உரையின்போது பின் வருமாறு கூறினார்: இரகசிய நாணயத்தின் பயன்பாட்டை அரசாங்கம் ஒரு சட்ட வழி பரிவர்த்தனையாக அங்கீகரிக்கவில்லை மற்றும் சட்டத்திற்கு புறம்பான பரிவர்த்தனைகளில் இரகசிய நாணயம் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இரகசிய நாணயங்களுக்கு உள்ளேயே போட்டி நிலவுவது கருத்தில் கொள்ளவேண்டிய மற்றும் ஒரு அம்சம். தற்போது 1,400க்கு மேலான இரகசிய நாணயங்கள் கிடைக்கின்றன, அவற்றுள் பிட்காயின் மிகப்பெரியது. புதிய தொழில்நுட்பம் பிட்காயின் உள்ளிட்ட இரகசிய நாணயங்களின் மதிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றின் மீது பேரழிவுக்கான விளைவுகளை உண்டாக்கலாம்.
எனவே, இரகசிய நாணயங்கள் உலகளாவிய நிதிசார் சந்தையில் புரட்சிகரமான மாறுதலை உண்டாக்கினாலும், தங்கம் தொடர்ந்து தனது மகத்தான உள்ளார்ந்த பொருளாதார மதிப்பை தக்கவைத்துக்கொள்ளும். ஏனெனில் தங்கம் பணவீக்கத்திற்கு எதிராக தடுப்புவேலி அமைக்கும் ஒரு மூலோபாய சொத்து மற்றும் செல்வத்தை பாதுகாக்கவும், மதிப்பை உயர்த்தவும் சிறந்தது.
உலகளவில் இரகசிய நாணயங்கள் வளர்ச்சியடைந்தாலும் 2017 தங்கத்தின் விலைக்கான வரைபடம் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியளிப்பதாக உள்ளது. இதன் பொருள் இரகசிய நாணயங்களின் வளர்ச்சி தங்கத்தின் தேவைப்பாட்டை மழுங்கடிக்க முடியவில்லை என்பதேயாகும்.