Published: 27 செப் 2017
ஏன் 100% தூய தங்கத்தை நம்மால் நகைகளில் பயன்படுத்த முடியாது?
100% தங்கம் அல்லது 24 காரட் தங்கம் என்பது ஒரு மிகவும் மென்மையான உலோகமாகும். இந்த மிருதுவான தன்மையானது தங்கத்திற்கு நீட்டிக்கும்தன்மை (கம்பிகளாக இழுக்கக்கூடிய திறன்) மற்றும் தகடாக்கும் திறன் (தகடுகளாக மாற்றப்படும் திறன்) ஆகியவற்றை அனுமதிக்கிறது. உண்மையில், தங்கம் என்பது மனிதர்கள் அறிந்திருப்பதில் எளிதில் தகடாக்கக்கூடிய உலோகமாகும், மேலும் ஒரு அங்குல உயரம் கொண்ட மெல்லிய தகடுகளின் குவியலானது 200,000-க்கும் மேற்பட்ட தனித்தனி தகடுகளைக் கொண்டிருக்கும்.
தங்கத்தின் மென்மையான தன்மையானது எளிதில் தகடுகளாக அடிக்கப்படவும், கம்பிகளாக நீட்டிக்கப்படவும் அனுமதிக்கும் அதே வேளையில் அதில் குறைபாடுகளும் உள்ளன. தங்க நகைகள் என்பது தங்கத்தின் மிகவும் பொதுவான பயன்பாடுகளில் ஒன்றாகும், அதில் நேர்த்தியான வடிவமைப்புகள் கொண்ட தங்க ஆபரணங்களானது விலையுயர்ந்த கற்களால் நிரம்பியிருக்கிறது. தங்கத்தைப் பயன்படுத்தி வைரம் அல்லது வேறு சில விலையுயர்ந்த கற்கள் மீது இறுக்கமாகப் பிடிக்க வேண்டிய சூழலில், ஒரு ஆபரணத்தில் 100% தங்கத்தைப் பயன்படுத்த ஒரு நகை உற்பத்தியாளரால் முடியாது. நாம் முன்பு பேசியபடி தங்கத்தின் மிகவும் மென்மையான தன்மையே இதற்கான காரணம் ஆகும். 24 காரட் தங்கம் மிகவும் மென்மையானது ஆகும், எனவே அது எளிதில் சிதைக்கப்பட்டு, நகை மீதான அதன் உறுதியான பிடிமானத்தை இழந்து விடும், மேலும் அது உங்கள் ஆபரணத்திலிருந்து நழுவி அல்லது விழுந்து விடலாம். எனவே, வலுவான ஒரு ஆபரணத்தை செய்வதற்காக, பெரும்பாலான நகை உற்பத்தியாளர்கள் ஒரு கலவையான 22 காரட் தங்கத்தைப் பயன்படுத்துகின்றனர்.
குறைந்த அளவு தூய்மையான 10 காரட் தங்கம் என்பதில் இருந்து 100% தூய்மையான 24 காரட் தங்கம் வரை பல்வேறு அளவுகளில் தங்கம் கிடைக்கிறது. 24 காரட்டுக்கும் குறைவான தங்கம் என்பது தாமிரம், வெள்ளி அல்லது பிளாட்டினம் போன்ற மற்ற உலோகங்களோடு ஒரு கலவையாக உள்ளது.
ஒரு கலவை என்பது அதில் உள்ள அனைத்து உலோகங்களின் பண்புகளையும் வெளிப்படுத்துகிறது. உதாரணமாக, 2 பகுதிகள் வெள்ளியை 22 பகுதிகள் தங்கத்துடன் கலந்தால், நமக்கு 22 காரட் அல்லது 91.67% தூய தங்கம் கிடைக்கிறது, வெள்ளியின் கடினத்தன்மையான பண்புகளைக் கொண்டிருப்பதால், இது 100% தூய தங்கத்தை விட மிகவும் கடினமானதாக இருக்கும். தங்கத்தின் சதவிகிதம் குறையும் போது, கலவையில் உள்ள மற்ற உலோகங்களின் பண்புகளின்படி, கலவையின் வலிமை / கடினத்தன்மை அதிகரிக்கிறது.
நகைகளுக்கான தங்க உலோகக் கலவைகள் என்பது ஒரு கடினமான, அதிக நீடித்த ஆயுள் கொண்ட உலோகமாக இருப்பதற்கும், மற்றும் அன்றாடம் அணிவதற்கு ஏற்ப கடுமையான தாங்கும் திறனைக் கொண்டதாக இருக்கவும் உருவாக்கப்படுகின்றன, எனவே உங்கள் நகைகளானது இன்னும் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் அழகாக இருக்கும் என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.