Published: 17 ஆக 2017
தந்தேராசின் போது தங்கம் வாங்குவது புனிதம் என்று ஏன் கருதப்படுகிறது?
தந்தேராஸ்(‘Dhanteras’) என்ற வார்த்தை இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளிலிருந்து வந்துள்ளது. தன் என்றால் செல்வம் என்று பொருள். தேராஸ் என்றால் இந்து நாள்காட்டியின் படி 13ஆவது நாள். தீபங்களின் பண்டிகையான தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தந்தேராஸ் கொண்டாடப்படுகிறது.
நாட்டில் தங்க நகைகள், நாணயங்கள், கட்டிகள் என தங்கம் வாங்கும் மாபெரும் திருவிழா அப்போதுதான் என்று உங்களுக்குத் தெரியுமா?
தந்தேராசின்போது தங்கம் வாங்கும் சடங்கு எவ்வாறு பழக்கத்திற்கு வந்தது என்று நாம் சற்று ஆழமாக நோண்டி பார்ப்போம்.
ஒரு பழைய புராணத்தின் படி, மன்னர் ஹிமாவின் மகனுக்கு அளிக்கப்பட்ட சாபம் குறித்த ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. இந்தக் கதை தந்தேராசுடன் தொடர்புடையது. மன்னர் ஹிமாவின் 16 வயது மகனுக்கு இருந்த சாபம் என்னவென்றால் அவனுக்கு திருமணமான நான்காவது நாள் அவன் இறந்துவிடுவான் என்பதுதான். அவனுக்கு அவ்வாறு விதிக்கப்பட்டிருந்தது. இந்த சாபம் குறித்து தெரிந்துகொண்ட அந்த இளவரசனின் மனைவி, தன் கணவனைக் காப்பாற்றுவதற்காக ஒரு திட்டம் தீட்டினாள். தங்கள் திருமண நாளின் நான்காவது நாளன்று உறங்காமல் இருக்குமாறு தன் கணவனை அவள் பணிவுடன் கேட்டுக்கொண்டாள். அவளது கணவன் இருந்த அறையின் கதவின் முன் தன்னால் முடிந்த மட்டும் தங்க நாணயங்களையும் ஆபரணங்களையும் குவித்து வைத்தாள். அந்த வீட்டைச் சுற்றி எவ்வளவு அதிக விளக்குகள் வைக்க முடியுமோ அவ்வளவு விளக்குகள் வைத்தாள். அதன் பின் அவள், தன் கணவனை உறங்கவிடாமல் செய்ய இரவு முழுவதும் அமர்ந்து பல்வேறு கதைகளை சொல்லிக்கொண்டும் பாடல்களைப் பாடிக் கொண்டும் இருந்தாள். விரைவில் எமராஜன் மன்னர் ஹிமாவின் மகனுக்காக ஒரு பாம்பு வடிவில் வந்தான். பல்வேறு ஆபரணங்கள், விளக்குகள், மற்றும் நாணயங்களிலிருந்து வந்த ஒளி அவன் கண்களைக் குருடாக்கியது. அவனால் அந்த அறைக்குள் நுழைய முடியவில்லை. அதற்குப் பதிலாக, அந்த ஆபரணக் குவியலின் மேல் புறம் அவன் அமர்ந்து மகனின் மனைவி பாடிய அனைத்து இனிமையான கீதங்களையும் கேட்டார். விடிந்தபோது, அந்த இளவரசனுக்கு எந்த விதமான தீமையும் இழைக்காமல் எமராஜன் சென்றுவிட்டான்.
அன்றிலிருந்து தந்தேராசுக்கு யமதீப்தான் என்றும் பெயர் உண்டு. மரணத்தின் கடவுளான எமனின் நினைவாக அந்தப் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. மக்கள் அன்று இரவு முழுவதும் தங்கள் இல்லங்களில் விளக்கேற்றுகின்றனர். தந்தேராசின்போது மக்கள் தங்க நாணயங்களையும் ஆபரணங்களையும் வாங்குவதற்கு இது ஒரு காரணம்.
தந்தேராஸ் எல்லோருக்குமான பண்டிகை என்றாலும், தங்கத்தில் முதலீடு செய்யும் ஒட்டுமொத்த சமூகத்திற்கு இது மிகவும் அவசியம். இலக்ஷ்மி பூஜைக்கு ஒரு நாள் முன்பு தந்தேராஸ் பண்டிகை வருகிறது. அன்றைய தினம் தன் பக்தர்கள் அனைவரின் மீதும் இலக்ஷ்மி தேவி ஆசிர்வாதத்தை பொழிகிறாள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் புதிய பொருட்களை வாங்குவதும் தங்கத்தை வாங்குவதும், செல்வம் மற்றும் வளமையின் தெய்வமான லெக்ஷ்மி தேவியை வரவேற்பதற்கான வழியாகக் கருதப்படுகிறது.
இந்த நாளன்று பகவான் குபேரனும் வழிபாடு செய்யப்படுகிறார். உண்மையில் தந்தேராசின் போது மக்கள் குபேர இலக்ஷ்மி பூஜை செய்கிறார்கள். தன் எனப்படும தங்கம் வாங்குவது அதிர்ஷ்டத்தின் குறியீடு என்று நம்பப்படுகிறது. எனவேதான் இலக்ஷ்மி தேவி அல்லது பகவான் கணேசரின் உருவம் பதித்த தங்க நாணயங்களையும் ஆபரணங்களையும் மக்கள் வாங்குகிறார்கள்.
இந்த தந்தேராசின்போது நீங்கள் தங்கம் வாங்குவதற்கான சில பளபளப்பான மாதிரிகள். gold buying options for you to consider this Dhanteras..